கோயில் வாசலில்
எனக்காக காத்துக்கிடந்தன
என் பாதணிகள்...
தூய பகுதிகளில் மட்டுமே
என் பாதங்களை அனுமதிக்கும்
என் பாதணிகள்
அசுத்த பாதைகளில் என்னை
ஏற்றிக்கொள்ளும்..
புற்களை மட்டுமே ஸ்பரிசிக்க
இறங்கச்சொல்லும் என் பாதணிகள்
முள்குத்தல்களை முணகாமல்
வாங்கிக்கொள்ளும்..
கோயிலுக்குள் வராத நாத்திகர்கள்
என் பாதணிகள்.
எல்லா பொருள்களும்
கைகளால் களவு போகும்..
பாதணிகள் மட்டுமே
கால்களால் ...
வார் அறுந்தால் கூட
மாற்றி புதியதாய் வாங்க
உத்தேசிக்கும் என்னிடம் -
என் பாதணிகள்
தன்னையே தைத்துப்
புதுப்பித்துக்கொள்ளச்சொல்லும்
மிகவும் அற்புதமான பிரதேசங்களிலேயே
என் பிரவேசங்கள் நிகழும் ஆதலால்
என் பாதங்கள்-
என் பாதணிகளுக்கு சுவாரஸ்யமானவை...
சுந்தரவடிவேலு,
திருப்பூர்..
//கோயிலுக்குள் வராத நாத்திகர்கள்
ReplyDeleteஎன் பாதணிகள். // :-)
ஸூபர்!
இந்த வரிகளை ரசித்த கூட்டம் நிறைய இருக்கு.
அவர்களுக்கு உன் இமெயில் கொடுத்தேன்... மதிப்புரை வந்திருக்கும்!
ரொம்போ ரொம்போ அருமை!
ReplyDelete