Showing posts with label கானல்... Show all posts
Showing posts with label கானல்... Show all posts

Friday, April 8, 2011

தீராததும் ஆறாததும்....

எதையாவது எழுதலாமென்று அமர்கிற போதெல்லாம் உன்னைக்குறித்தே தான் என் சிந்தனைகள் படர்கின்றன என்னையுமறியாமல...
உன்னை மறக்க நினைத்தே.. நினைத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது...

--எந்த வகையிலும் பொருந்திப்போகாத என் காதலை .. காதல் என்கிற புனிதத்வம் பொதிந்த வார்த்தையில் குறிப்பிடுவது  அவ்வளவு பொருத்தமானதாக தெரியவில்லை...

--ஏனெனில் ஒரு கால் நீயும் என்னைக்காதலிப்பதாக தெரியப்படுத்தி இருந்தாலுமே கூட அதற்கான எனது ஆளுமை வீரியம் நிரம்பியதாக இருந்திருக்கக் கூடுமா என்பது கேள்விகளும் சந்தேகங்களும் கொண்டவையே...

--என் காதலைக்கூட உன் வசம் நான் திணிக்க வேண்டும் என்கிற எவ்வித பிரயத்தனங்களையும் மேற்கொண்டவன் இல்லை..என் தன்மையை காதல் என்கிற அடையாளமாக நீ புரிந்து கொண்டிருக்க மாட்டாயென்று கூட நான் அனுமானிக்கிறேன்..
-அது ஓர் இனம் புரியாத வீச்சு.., காதலையும் தாண்டிய புனிதத்வமான உணர்வது...அந்த உணர்வினை நிரப்புவது, வார்த்தைகளுக்கு சாத்யப்படாது என்பதோடு, அவ்வித ஓர் உணர்வினை சாதாரண தன்மையில் இருக்கிற எவரும் விளங்கிக்கொள்வது அசாத்தியம் ..

--என் தன்மையில் , அதாவது அந்த உணர்வின் தன்மையில் நீயே  இருந்திருந்தாலும் கூட .. அதனை  நான் அடையாளம் கண்டிருப்பேனா என்பது சந்தேகம் தான்... நானுமே கூட சாதாரண தன்மை கொண்டவன் தான்...

--எனது அந்த உணர்வின் ரகசிய  வீச்சு மாத்திரமே .....
எனது தன்மையை தாண்டிய கதியில் என் வசம் ஒளிந்தும் ஒளிர்ந்தும் கொண்டிருக்கிறது...

சுந்தரவடிவேலு..               

Friday, September 25, 2009

பகல் கனவு .

என்னுடைய நீ.. உன்னுடைய நான்...
நம்முடைய காதல்..
ஓர் நாள் இவ்வுலகில் நீ அற்று.. நான் அற்று..
நம் காதல் அற்று..
ஆனபோதிலும் இந்த அண்டவெளியில்
நீயும் நானும் காற்றாயாவது திரிவோமோ?
அப்போதும் சந்திப்போமோ..அடையாளம் காண்போமோ?
--அல்லது கண்டும் காணாமல் ஓடும் கயமையில்
இருப்போமோ?--ஒஹ்...நாம் அவ்விதம் செய்ய மாட்டோம்..மறுபடி நம் காதலை அனுஷ்டிக்கத்துவங்குவோம்...அனேகமாக அந்தக்காதல் நாம் பிரிவதற்காக இருக்காதென்றே கருதுகிறேன்..
வா...இந்தப் பிரபஞ்சக்காதல் ஆபத்தானது..எத்தனை நேசங்களைக் கொட்டிக்கொட்டி தீர்த்தாலும் நம்மை ஓர் இழையில் பிரித்து விட வைக்கும்..நீ இன்றி நானோ நான் இன்றி நீயோ இருக்கச்செய்து விடும்.. அல்லது இருவரையுமே இல்லாமல் செய்து விடும்..
இது மாயை நிரம்பிய பிரபஞ்சம்..நிரந்தரமற்றது.. நிம்மதிகளை நீர்க்குமிழ்கள் போல விநியோகிக்கிற பிரதேசம் இது... நிரந்தரம் என்பது வார்த்தை அளவில் மாத்திரம் ஊடுருவித்திரிகிற பிராந்தியம் இது.. வா.. இந்த ஈனப் பிரபஞ்சம் நம் அடர்ந்த காதலை அடை காக்க முடியாமல் தடுமாறும்..
--காற்றாகவாவது நிரந்தரமாக நாம் பிரியாமல் காதல் செய்கிற ஓர் பிராந்தியம் இந்த அண்டத்தில் எங்கேனும் இருக்கும்..அங்கே செல்வோம் வா..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...