Showing posts with label மடல்... Show all posts
Showing posts with label மடல்... Show all posts

Wednesday, August 24, 2011

இனிய தோழிக்கு...

உனக்கான 
அலங்காரத்தைக் 
காட்டிலும் நீ 
அழகானவள்...
எனக்குப் போலவே
உனக்கும் 
அது தெரியும்...

இன்னும் சொல்வதானால்
உன் மெருகை
குறைபாடாகக்
காண்பிக்கிறது 
உன் அலங்காரம்..
--ஆனால்
ஊருக்கது புரியாது...
அது மயில்தோகையில்
பூக்களை செருகி
அழகு பார்க்க முயலும்..!!

இயல்பான அழகான
தோகையை மட்டுமே
ரசிக்கிற பாங்கான
ரசனை ஊரிடம் இல்லை..

எனது உனது
ரசனைகளை ஒத்தே
உந்தன் கணவன் 
ரசனையும் இருக்குமேயானால்
நாம் இருவரும்
மிக மகிழ்வோம்...
--அல்லவெனில்
நம் அடுத்து
சந்திக்கிற
ஓர் சந்தர்ப்பத்தில்
அவரைக் குறித்தும்
கேலி பேசி
சிரிப்போம் என்றே 
அனுமானிக்கிறேன்... 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...