Showing posts with label காதலின் வசம்... Show all posts
Showing posts with label காதலின் வசம்... Show all posts

Wednesday, July 4, 2012

காதல் மயக்கம்...


எனக்கு இர

உன்னைப் பார்க்க 
நேர்கையில் எல்லாம் 
என் கவிதை ஈக்கள் 
மொய்க்கத் .துவங்குகின்றன..


தேன்  கொண்ட பூ நீ 
என்கிற அறிவு 
என் கவிதைகளுக்கு 
எப்போதும்...


விரட்டுவது போன்ற 
பாவனையோடு 
மயங்கி விழுகிறது 
என்னில் உனது முகம்...


நீ விரட்டியடித்தாலும் 
உன்னில் சரணாகதி 
அடைவதை மட்டுமே 
நோக்கமாக நான் 
.வைத்துள்ளேன்...


அப்படியிருக்க 
என்னில் நீ மயங்கி 
விழுகையிலோ 
உன்னை உள்வாங்குவதில் 
என்ன சிரமம் 
இருக்கப் போகிறது???

Sunday, April 4, 2010

மூடு வாயை

ஒரு முறை
உன்னை அனிச்சையாக
தரிசிக்க நேர்ந்ததன் பொருட்டு
---ஒவ்வொரு முறையும்
அதே அனிச்சையை
எதிர்பார்க்கிறேன்...!!

என் அவநம்பிக்கைகளை
கிழித்துப்போட்டது உன் புன்னகை..
என் நிராசைப் பட்டியல்கள்
கசக்கி வீசப் பட்டன..
இனி வாழ்வு நெடுக
வசந்தம் பீடு நடை போட
ஆயத்தமாகி விட்டதாக
அடித்து சொன்னேன் நண்பர்களிடம்..!!

உள்ளார்ந்து வேரூன்றி கிடக்கின்றன
சந்தேகங்கள் இன்னும்...
உன் புன்னகை கிழியக்கூடும்,
என் வசந்தங்கள் அழியக்கூடும்.., -
--உன்னிடம் பேச ஆரம்பித்த
மூன்றாம் நாளே இதை சொல்ல
வாய் திறந்தேன்..!!

கிடைத்திருக்கிற கிஞ்சிற்று
நிம்மதியையும்
கோழி கழுத்தை திருகி எறிவது
போன்ற முட்டாள்தனத்தை
எதற்கு செய்ய வேண்டும்
என்கிற காதல் அறிவு எனக்கு...

சொல்வதற்கில்லை.,
இந்த முறை காலத்திற்கு
என்னை ஏமாற்றும் விருப்பம்
இல்லாதிருக்கலாம்..!!

சுந்தரவடிவேலு...

Saturday, January 30, 2010

சொல்வதற்கில்லை..

உன்னை
வசீகரிப்பதற்கான என்
எல்லா பிரயத்தனங்களும்
தழுவிய தோல்விகள்----

--ஓர் இனம் புரியாத
அனுபவமுதிர்ச்சியை
என்னில் ஊடுருவச்செய்துள்ளது...!


மேற்கொண்டு
என்ன செய்வது என்கிற
புதிய சிந்தனை ஓட்டங்களையும்
கழிகிற நேரங்களை
சுவாரஸ்யமாகவும்
மாற்றியமைத்த பேறு
உன்னையே சேரும்...

என் காதல்
மிகவும் ரசனை நிரம்பியதென்றும்
வண்ண மயமானதென்றும்
வர்ணித்த நீயே தான்
---- அந்த என் அன்புக்காதலி
நீ என்று நான் சொன்னதும்
பார்வைத்தீயில் என்னை
சுட்டுப்பொசுக்கினாய்...

ஆக --
பிறரையும் பிறவற்றையும்
நான் ரசிக்கையில்
மிகுந்த வாஞ்சையோடு
அங்கீகரிக்கிற நீ
உன்னை ரசிக்கிறேன்
என்கிற போது மட்டும்
தடுமாற்றமடைவதும்
என்னைத் தவிர்க்க
முயல்வதும் ..

அப்படி என்ன
உன்னைக்குறித்த
என் ரசனைகள்
உனக்கு அசுவாரசியமாகி
விட்டதென்கிற பெரிய
கேள்வி என்னிடம்
இருக்கிறது என்றாலும்....

--உன் இந்தத்தன்மை
உன்னை எனக்கோர்
சுயநலமியாக அடையாளம்
காண்பிக்கத்துவங்கியுள்ளது
சமீப நாட்களாக...

சொல்வதற்கில்லை...
என்னையும் என் காதலையும்
நீ ஏற்கிற ஓர் தருவாய்
வரும் பட்சத்தில்
உன்னை நான்
தவிர்த்து விடக்கூடுமோ
என்று கூட அஞ்சுகிறேன்...!![???]

சுந்தரவடிவேலு...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...