Showing posts with label பு து க் க வி தை................... Show all posts
Showing posts with label பு து க் க வி தை................... Show all posts

Saturday, February 27, 2016

வேற்றுமை..

Image result for cow
மாடுகளை
கும்பலாக 
கோசாலைகளில் 
மட்டுமே 
பார்த்துப் பழகிய 
கண்களுக்கு .. 

பீஃப்  கடை 
அருகாமையில் 
பார்க்க நேர்கையில் 
சூன்யம் ஒன்று 
வந்து சுடத் தான் 
சுடுகிறது.. 

இந்தியத் தமிழர்களாகப் 
புலனாகிற 
கோசாலை மாடுகள்.. 
இலங்கைத் 
தமிழ் அகதிகளாகப் 
புரிபடுகிற 
பீப் கடை மாடுகள்..!!
 Image result for cow

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...