மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Saturday, October 22, 2011
நிரந்தரம் என்கிற தற்காலிகம்..
Wednesday, September 16, 2009
மனித இயல்புகள்...?
தேடல்களும்
தோல்விகளும்
எந்நேரமும் உடனிருப்பவை..
ஓர் இழையில் தேடுவதே
சலிப்பாகி, தேடுவதை
நிறுத்தி விடுகையில்...
கிடைக்கும் தேடியது..!
அவ்வாறே தோல்விகளும்...
--வெற்றிக்கான ஒவ்வொரு
பிரயத்தனத்தின் போதிலும்
போட்டி போட்டுக்கொண்டு வந்து
வெற்றியைப் பின்னுக்குத் தள்ளி
விட்டு ஜெயித்து விடுகின்றன
தோல்விகள்.....
பிற்பாடு, பின்னொரு நாளில்
சாவகாசமாக வருகிறது வெற்றி..!
தாமதமாகவே வந்தாலும் கூட
தேடியது கிடைக்கையிலும்,
தோற்றது வெற்றி அடைகையிலும்
ஓர் புது மெருகுடன் தான்
சந்தோஷம் மனசைக் கவ்விக்கொள்கிறது..,
தேடல்களும் தோல்விகளும் நம்முடன்
அத்யந்தமாகி நெடுங்காலம் வீற்றிருந்து
வந்தாலும் ஏதோ அன்னியமாகியது போல
உடனே அவைகளைப் புறந்தள்ள
ஆசையும் அவசரமும் படுகிறோம்...!!
சுந்தரவடிவேலு,திருப்பூர்.
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
முதற்கண் பிச்சை இடுபவர்கள் நிறுத்த வேண்டும்.. பிச்சைக் காரர்கள் தானாகக் காணாமல் போவார்கள்.. உழைக்கத் துவங்கி காசு சேர்ப்பார்க...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
இ ந் தி யாவில் மற்ற மாநிலங்களில் இளைஞர்கள் எவ்விதமோ யாமறியேன்.. நம்முடைய தமிழகத்தில் "இவ்விதம்" என்கிற கண்க்ளூஷனுக்கு என்னால் வர ...