Showing posts with label காதல் கவீத... without serious... Show all posts
Showing posts with label காதல் கவீத... without serious... Show all posts

Tuesday, February 11, 2014

காதல் கிறுக்கன்.. கிறுக்குக் காதலன்..

நீ ஞாபகம்
வருகையில்
மட்டுமே எனக்கு
கவிதை புனைகிற
சாமர்த்தியம் வருகிறது.. !

மற்றவற்றை
மற்றும் மற்றவர்கள்
எவர் குறித்த
பிரக்ஞைகளும்
கவிதைகளுக்கான
சமிக்ஞைகளாகப்
புரிபட்டாலும்
வார்த்தைகள் புலனாவதில்லை..!!

ஆனால் உன்
முகம் பிரசன்னமான
ஷணம் தொட்டு
கசிய ஆரம்பித்து
விடுகிறது என்
கவிதை ஊற்று...

பிற்பாடாக
பிரளயம் எடுக்கிறது
கவிதை..
எழுதுகிற எனது
பேனா முனையே
தெறித்தோடி விடுகிற
புயல் மையங்கொண்டு
விடுகிறது எனது
விரலிடுக்கில்..!

நான் மரணமடைந்து
இரண்டு மணி நேரம்
ஆகியிருக்கும் பொருட்டுக்
கூட.. அங்கே
நீ வந்து என்னை
ஸ்பரிசிக்கும் சாத்தியம்
உள்ள பட்சத்தில்
சிலிர்த்துக் கிடக்கிற
என் கட்டை
சூடுணரக் கூடிய
வாய்ப்பு 99 சதவிகிதம்
இருப்பதாக
ஆய்வறிக்கை சொல்கிறது..

மிச்சமுள்ள
1 சதவிகிதம்
உமது வருகையின்
நிமித்தம் மூர்ச்சையாகி
இருப்பேன் என்று
சொல்கிறது
இந்தக் கிறுக்குப் பயபுள்ள.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...