Showing posts with label குறுங்கவிதை.. Show all posts
Showing posts with label குறுங்கவிதை.. Show all posts

Sunday, March 13, 2016

கா..கா.. கா..

சுத்த சைவமாக இருந்து 
தொன்னூற்று மூன்றில் 
உயிர் நீத்த திரு.ரமண சேஷாத்திரி
அவர்களின் 16ஆம் நாள் சடங்கிற்கு 
அவர் விரும்பி உண்ணும் 
டிபன் ஐட்டமான கோதுமை உப்மா 
சப்பாத்தி குருமா .. மற்றும் 
பூசணித் தயிர் அவியல் 
வெண்டைப் புளி குழம்பு 
நெய்ப்பருப்பு மிளகுரசம் 
கெட்டித் தயிர் .. 
வகையறாக்களை வக்கணையாக 
வாழை இலையில் பரிமாறி 
சேஷாத்திரியை மிக சுலபத்தில் 
காக்காய் வடிவில் எதிர்பார்த்து 
வந்து எடுத்துண்ண 
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 
சொந்தபந்தம் என்று 20 பேர்கள் 
எதிர்பார்த்துக் கிடக்க.. 

"அப்பாடா" என்கிற 
உறவினர் பெருமூச்சோடு 
வந்திறங்கியது காகம்.. 
மன்னிக்கவும்-- சேஷாத்ரி..!

அதற்குள்ளாக 
அண்டையில் உள்ள 
ராவுத்தர் வீட்டில் 
உண்டுவிட்டு கழுவி ஊற்றிய 
உணவில் தென்பட்ட 
எலும்புத் துண்டொன்று 
ரமண சேஷாத்திரியை ..
மன்னிக்கவும் -- காக்கையை 
அவசர கதியில் அங்கே 
இழுத்தது.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...