Showing posts with label pudhukavidhai... Show all posts
Showing posts with label pudhukavidhai... Show all posts

Thursday, March 5, 2015

ப கு த் த றி வு ..................

பழிக்கத் துணிகிறார்கள் 
திசைகளை மிக சுலபமாக.. 
மேற்கு சரியில்லை 
தெற்கு  சரியில்லை என்று...!

கிழக்கும் வடக்கும் 
கெட்டிக்கார திசைகள் என்று 
வாய் கிழியப் பிதற்றுகிறார்கள்...!

சொம்பில் சாம்பலாக 
க்ரிமேஷன் சென்டரில் இருந்து 
செத்தவர்கள் இப்போது 
நமக்குக் கிடைப்பதால் பரவாயில்லை.. 

அன்றெல்லாம் செத்தவனைப் 
புதைக்கப் போடுகையில் கூட 
தலை வடக்கிலிருக்காமல் 
பார்த்துக் கொள்கிற கொள்கை 
வீரர்களாக வலம் வந்தோம்.. 

குபேர மூலை உசந்திருக்க 
ஒட்டடைக் குச்சியையாவது 
அங்கே நிறுத்தி வைக்கிறோம்.. 

ஜலமூலையில் சமையலறையை 
சாபக் கேடாக உணர்கிறோம்.. 
அக்கினிமூலையில் 
குளித்துக் கொண்டிருப்பதை  
பெருங்குற்றம் போன்று 
துவட்டிக் கொண்டிருக்கிறோம்.. 

பெரியாரின் பகுத்தறிவை 
தொண்டைகிழியக் கதறி விட்டு 
வெளியே சினிமா பார்க்கக் 
கிளம்புகையில்  கூட 
எதிர்ப்படுகிற விதவைக் கிழவியை 
மெளனமாக ஒரு திட்டு திட்டிவிட்டு 
வீட்டினுள் வந்து மடக்குத் தண்ணியை 
குடித்து விட்டு.. 

குபேர மூலையில் கிழக்குப் பார்த்து 
பீரோவை வைக்கிற 
நம்முடைய வாழ்க்கை மிகவும் 
அழகாக நகர்ந்து கொண்டிருப்பதாகத் 
தான் தோன்றுகிறது.. !!

Tuesday, July 8, 2014

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி??...

 


விவசாயி கண்ணீர் 
துடைக்க விழுகிறேன்.... 
குழந்தைகளின் 
சிரிப்பிற்காக 
அழுகிறேன்.. 

அந்தப் பிஞ்சுக் கைகள் 

விடுகிற காகிதக் 
கப்பல்களை 
கடலில் விடுகிறேன்.. 

என்னில் மூழ்கி 

நனைய ஆசை கொள்கிற 
எல்லா குழந்தைகளையுமே 
ஏனோ அம்மாக்கள் 
அடித்திழுத்து 
அழவைக்கிறார்கள்...

வீடு வரமுடியாமல் 

எனக்கென ஒதுங்கி 
நிற்பவர்கள் 
நான் நின்று விட்டேனா 
என்று கைநீட்டிப் பார்க்கிறார்கள்.. 
இன்னும் பெய்கிறேன் என்றால் 
அலுத்துக் கொள்கிறார்கள். 

வீட்டு ஜன்னல்களில் 

கைகளை நீட்டுபவர்கள்.. 
பெய்கிறேன் என்றால் 
குதூகலிக்கிறார்கள்.. 
குழந்தைக்கு வேடிக்கை 
காண்பித்து சோறூட்டுகிறார்கள்.. 

நிம்மதிப் பெருமூச்சு 

விடுகிறான் விவசாயி.. 
பொருமுகிறான் பொரி விற்பவன்.. 
இருமுகிறான் சளி பிடித்தவன்.. 

எத்தனை கால இடைவெளி விட்டுப் 

பெய்தாலும் 
"இந்த நாசமா போன மழை வேற!"
என்று திட்டுவதற்கு சிலர் 
இருக்கத்தான் செய்கிறார்கள்.. 

தீக்கங்கை மேல கொட்ற மாதிரி 

வெயில் அடிக்கிற போது மட்டும் 
"இந்த நாசமாப் போன மழை 
வருதான்னு பாரேன்!" என்று 
அலுத்துக் கொண்டவர்கள் தான் 
அவர்கள்...!!

Friday, July 26, 2013

அலட்டல் ...


.. 

எதற்கேனும் 
அலட்டிக் கொள்கிற 
ஆனந்தம் 
அலாதியானது.. 

பார்ப்பவர்க்கு 
நம் அலட்டல் 
புரிபடாததாக 
இருத்தல் நலம்...!

இயல்பாகவே 
அலட்டும் குணமற்றவர்கள்
தெய்வத்திற்கொப்பாவர்... 
இயல்பாகவே  அலட்டுபவர்கள் 
இம்சையாகப் புரிபடுவர்..!

நாசுக்காய் 
அலட்டத் தெரியாதவர்கள் 
நாசமாய்ப் போவர்..!!

அலட்டலை 
ரகஸ்யமாக்கி ..
புறமிருப்பவர்களுக்கு 
யதார்த்தமாகப் 
புரிபடுகையில்----

நிச்சயம் 
எதற்கேனும் 
அலட்டிக் கொள்கிற 
ஆனந்தம் மிகமிக 
அலாதியானது..!!

Monday, June 3, 2013

சற்று முன்னர்..

மொய்க்கிற ஈக்காக  
சுழிப்பது போல 
தெரிகிற 
பிணத்தின் முகம்...

நாசிப் பஞ்சை 
அகற்றச் சொல்கிற            
கட்டளையின் சாயல் 
அந்த முகத்தில்.. 

ஊதுவத்திப் புகை 
நெஞ்சை அடைப்பதாக 
மௌனமானதோர் 
புகார்.. 

மின்விசிறி சுழலாமல் 
வியர்வைக் கசகசப்பு 
ஓர் சங்கடத்தை 
நிகழ்த்துகிறது...
அகாலத்தில் 
வந்திருக்கிற இந்த 
மாரடைப்பு மரணத்தைத் 
தவிர்த்துவிடுகிற 
சாத்தியங்கள் 
இருக்கும் பட்சத்தில்...
இதற்காகவெல்லாம் 
--நான் மேற்சொன்னதைக் 
காட்டிலும் சற்று 
காட்டமாகவே 
நடந்து கொள்கிற சுபாவமுள்ளவன் 
தான் பழனிசாமி..!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...