Showing posts with label காதல் கவிதை... Show all posts
Showing posts with label காதல் கவிதை... Show all posts

Tuesday, August 4, 2015

தயவு செய்து யாரும் என்னை எழுப்பி விடாதீர்கள்..

உன்னிடம்
தொலைவதிலுள்ள
சுவாரஸ்யம்
எனக்கு நான்
கிடைப்பதில்
இருப்பதில்லை.. !

தனிமைப் பட்டுக்
கிடப்பதாக
எனக்கு நானே
வதந்தி பரப்பிக்
கொண்டிருந்தேன்..
உமது தோளில்
தலை சாய்க்கும்
திட்டங்களோடு..!!

அடங்கா மிருகம்
என்றொரு அடையாளம்
எனக்குண்டு..
ஆனால்
உன் மடி வந்து
சேர்கிறேன்
மொசு மொசு முயல்குட்டியாய்.. !

என் தலை
வருடுமுன் விரல்கள்
பிடித்துச்  சொடுக்கப் பார்க்கிறேன்..
அதற்குள்ளாக
நித்திரைக்குள்
மூழ்கச் செய்து
மூர்ச்சையாக்குகிறாய்..!!

நீ தந்த துயில் கலைக்க
எவர்க்கும் உரிமை இல்லை..
நீயே விழிக்கவும் வை..

Tuesday, November 5, 2013

உயிர் பெறும் மழைத்துளிகள்.....

உன்னைக் காதலிக்க முயன்ற ஓர் மழை நாளில்...

உன்னை நனைக்கிற
மழையின் புன்னகையும்
என்னை நனைக்கிற
மழையின் அழுகையும்
-பரஸ்பரம்
ஆனந்தங்களையும்
ஆதங்கங்களையும்
மௌனமாகப் பரிமாறிக்
கொள்வதை...
எனது இதயம்
மாத்திரமே உணரக் கூடும்?..!

சபிக்கப் பட்ட துளிகளாக
என் மீது விழுந்து
தெறிக்கிறது மழை..

உன் மீதான துளிகளோ
தெறித்து விடப் பிடிக்காமல்
உன்னில் ஊடுருவப்
பிரயத்தனிக்கிறது ....!!

சாக்கடையில் விழுந்திருந்தால்
கூட அப்படி முகம் சுளித்திருக்குமோ
தெரியாது....
என்னை நனைத்து
கடுந்துயர் கண்டது மழை...

உனது அருகாமையில்
விழுந்து உன்னை
ஸ்பரிசிப்பதைத் தவற விட்ட
ஏமாற்றத்தோடு
சாலையில் தவழ்கிற துளிகள்..

உன் தலையில் விழுந்து
கர்வப் பட்ட இறுமாப்புத் துளிகள்..

உன் கழுத்தில் விழுந்து
மார்பினுள் புகுந்து கொண்ட
இங்கிதமற்ற துளிகள்....!!

-மற்றுமொரு மழை நாளில்..

நானும் நீயும்
ஒரே குடைக்குள்ளிருந்தோம் ...!

துளிகள்
நம் கால்களைப் பற்றிக்
கொண்டு கதறின...!!
.Square Abstract Couple With Umbrella Oil Paint Effect canvas wall printed on to a canvas which would be a great edition to any home.    Size : (W30cm X H30cm) X 1

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...