Showing posts with label pudhukavidhai. Show all posts
Showing posts with label pudhukavidhai. Show all posts

Thursday, May 4, 2017

வைரம் போன்ற மாயை..


=========================
Image result for modern arts of death
வாழ்க்கை நெடுக 
இழைகள்... 
துயரம் தொலைந்து 
சந்தோஷம்.. 
நோய் தொலைந்து 
ஆரோக்கியம்.. 
வறுமை தொலைந்து 
வசதி.. 
இதே ரீதியில் ... ஒரு நாள்.. 
உயிர் தொலைந்து 
மரித்தல்.. .. 

அந்த மரித்தல் மாத்திரம் 
உணரவியலா இழையாகி.. 
உடனிருப்போருக்கு 
நிம்மதி  நழுவிய 
சோக இழையாக .... 

எத்தனை வகையறா 
மரணங்களை அவ்வப்போது 
சந்தித்து வந்தாலும், 
இந்த வாழ்க்கை மட்டுமே 
அடர்த்தி நிரம்பியதாக 
அடையாளப் பட்டுக் கிடக்கிறது 
எல்லாருக்கும்.. !!

Wednesday, January 18, 2017

பயில்வான்..
===============
Image result for bayilvaan modern arts
வர் கவிதையும் 
என்னை ஏனோ 
படிக்கத் தூண்டுவதே 
இல்லை... ஆனால் 
நான் எழுதுவதை 
அனைவரும் படித்துவிட 
வேண்டுமென்று 
அவாவும் அவசரமும் 
கொள்வதேனோ?

இந்த அநாகரீக 
சுயநலம் எனக்கே 
நாறுகிறது.. !

அர்த்தங்கள் பொதிந்தும் 
அழகியல் ததும்பியும் 
வெளியாகிற கவிதைகளை 
பிறர் பெரிதாகப் பிதற்றுகையில் 
வருவது பொறாமை 
ஒருபுறம் என்றால், 
என்னுடையதைப் படித்துவிட்டு 
ஏன் எவரும் இவ்வாறு 
குதிப்பதில்லை என்கிற 
அநியாய ஆதங்கம் மறுபுறம்.. !!

இளையராஜாவை 
தூக்கி அந்தப் பக்கம் நிறுத்திவிட 
வேண்டுமென்பது 
என்னுடைய இசைவெறியின் 
அகம்பாவம்.. 
தகரடப்பாக்களில்  
டண்டணக்கா தாளங்களை 
ஏற்படுத்துகிற எனக்கெதற்கு 
இவ்வளவு வறட்டு நம்பிக்கைகள் 
என்கிற அறிவான கேள்வி 
ஆரமபத்திலேயே வரத் 
தவறி விடுவதேனோ ?..

அங்ஙனமே பாரதியின் 
கவிதைகள், மற்றும் 
வள்ளுவனின் குரள்கள் 
அடக்கம்...!

சூரியனையே அற்பமாக 
அண்ணாந்து பார்த்துவிட 
முடிகிற என்னை..
காய்ந்து கிடக்கிற 
புற்கள் தடுக்கிவிழச் 
செய்கிற சூழ்ச்சியை 
நிச்சயம் நான் 
வணங்க மறுக்கிற 
தெய்வம் ஒன்று 
தான்  செய்திருக்கக் கூடும் 
என்பது எமது 
அசைக்க முடியாத 
நம்பிக்கை.. !!!

Image result for bayilvaan modern arts

Thursday, September 8, 2016

கோபக்காரன் கவிதை..

எனக்குள் கதறி 
சப்தமெழுப்பும் 
என் மௌனங்களும்.. 
எங்கோ சென்று 
அடங்கிக் காணாது 
தொலையும் எனது 
சப்தங்களும் .. 

மௌனங்களையோ 
சப்தங்களையோ 
எதன் பொருட்டும்
தவிர்ப்பதற்கில்லை 
என்பதோடு .. யாவும் 
அதனதன் பயணிப்பில் 
நகர்த்துகின்றன நம்மை.. !

க்ஷணநேர ரௌத்திரத்தில் 
அண்டை அயலாரிடம் 
நாம் பதிந்து வைத்திருந்த 
மேன்மை மென்மை என்ற 
தன்மைகளை -- மிக 
சுலபத்தில் இழக்கிறோம்.. 

 ஒரு கூப்பாடுக்குப் பிற்பாடு 
முந்தைய நாசுக்கை மறுபடி 
புதுப்பிப்பது என்பது  
செத்தாலும் நடவாது.. !
இருப்பினும் மெனக்கெடுகிற 
நம்மைக் கண்டு 
நமட்டாக சிரிக்கிற அவர்களைப் 
பார்க்கையில்... 
மேற்கொண்டு பிஸ்தாவாகவே 
வலம்வரத் தீர்மானம் 
கொண்டுவருவோம்.. !!
Image result for anger modern arts




Wednesday, July 27, 2016

அகாலம்



இழவு வீட்டில்
அழும் பெண்களில் 
அழகி தேடும்
சபலக் கண்கள் ..

இறந்தவரின்
உறவுப் பெண் வந்து
கட்டித் தழுவி
அழ நேர்கையில்
மார்புச் சூட்டில்
மயங்கிடும் கயமை..

செத்தவன் அறிவான்
சேற்றுப் பன்றி
இவன் என்று...
எழுந்தா வரப் போகிறான்
எமனோடு ஓடிப் போனவன்?

நேற்றுக் கூட
புத்திமதி சொன்னானவன்.
"மற்றோரின் பெண்டிரில் விழுந்தால்
நீ நாறி.. உன் தாய் மனைவி மகள் நாறி.."
-- சொன்ன உத்தமன்
எல்லாரையும் நாறவிட்டுப்
போயே விட்டான்..

இப்படித்தான் சமயங்களில்
உன்னதமானவர்கள்
அகாலமாகத் தொலைவதும்
ஊதாரிகள் அகாலமாக
வாழ்வதும் ..
இப்பிரபஞ்சத்தின் 
சுலப நிகழ்வாகி விடுகிறது.. !!?

Friday, June 24, 2016

நிபுணர்கள்..



திலும் நிபுணத்துவம் 
அற்று .. நான்.. !
இந்த வெறுமை 
என்னில் சீழ் 
கோர்த்த வலி 
நிகழ்த்துகிறது.. !!

சட்டைக்கு பொத்தான்
வைப்பது, ஹெம்மிங் செய்வது 
போன்ற அற்ப வேலை 
முதல் அனைத்தும் 
தகராறு எனக்கு.. !

எதனை நான் 
மெனக்கெட்டு செய்தாலும் 
நொட்டை சொல்லவென்று 
அதற்கான நபர்கள் 
வாரிக் கொட்டியது போன்று 
குவிந்து கிடக்கின்றனர்.. 

நான் சுவாசிப்பதைக் கூட 
யோகா வல்லுநர், 
'அப்படி இல்லை... இப்படி'
என்று இழுத்து வாங்குகிறார் 
மூச்சினை.. !

நடைப் பயிற்சியில் 
நேர்த்தி இல்லை .. 
'இப்படி நீளமா 
அதற்கும் இதற்குமா 
கைகளை வீசி 
கால்களை நேர்ப்படுத்தி
வேகமாய் நடக்கணும்'
என்கிறார் சிறந்து 
விளங்கி நடப்பவர்.. 

இயல்பாக நம்மோடு 
இழைந்து கிடக்கிற 
நடையும் மூச்சும் கூட 
இன்னும் நன்கு 
பயிற்றுவிக்கப் பெறவேண்டிய 
இழி தகுதியில் இருப்பதை 
எங்கு போய் முறையிட?

நான் செத்துப் 
போனாலும் கூட. 
'இப்டி சாகக் கூடாது பாஸ்.. 
அந்த மாதிரி அழகா .. போறதே 
புரியாம..!' 
என்றொரு மரண நிபுணன் 
அறிவுறுத்தக் கூடும்.. 
குறைந்தபட்சம் 
அந்தக் 'குறைபாடை' 
கேட்க மட்டுமாவது 
நல்ல வேளையாக . 
நான் இருக்கமாட்டேன்.. ஹிஹி..!!

Monday, December 28, 2015

புதிய பட்டியல்..


எதற்கேனும்
கர்வம் கொள்ள 
சாத்யப் படுமா
என்று எமது
பட்டியல்களை
மனசுள் அசை போட்டுக்
கொண்டிருந்தேன்..
எதுவும் எடுபடுவதாகத்
தெரியவில்லை..

மேற்கொண்டாவது
அவ்வித சூழலை
அமைத்துக் கொள்கிற
தளங்கள் தேடப் பட்டன..
அதற்கு நிறைய
திறமையும் பொறுமையும்
தேவைப் பட்டன...

பீடியே பழக்கப் படாதவன்
கஞ்சா ஊத மெனக்கெடுவது
மாதிரி..
ஆம்லெட்டே குமட்டுபவனுக்கு
பச்சை மான்கறி புசிக்கிற
புலி என மாறுவது மாதிரி..

கர்வம் என்கிற
அசைவ உண[ர்]வு
பொருந்தாமற் போயிற்று..
இருப்பினும்
என்றேனும் எதற்கேனும்
கர்வப் பட்டே
தீருவது என்கிற
தீர்மானத்தை எடுத்தேன்..

எனது சிறுபிள்ளைத் 
தனங்களுக்காக வெட்கப் பட்ட 
பட்டியல்கள் நிறைய உள்ளன.. 
அவைகளில் மேற்சொன்ன 
தீர்மானமும் கூடிய விரைவில்
இனணயக் கூடும் என்றே
அனுமானிக்கிறேன்''


Monday, November 23, 2015

முரண் மூட்டை..

குடம் குடமாகக் 
கொட்டப் படுகிறது 
பால்...!
பால் கரவா 
கல் நந்திக்கு...!!

குடம் குடமாய் 
பால் தரும் 
பசுவுக்கோ .. 
சரிவரக் குளித்து 
விடுவது கூட இல்லை.. !

இருந்த சில்லறைகளை 
மொத்தமாக 
கோவில் உண்டியலில் 
திணித்து விட்டு.. 

ஒரு ரூபாய் 
சில்லறையை 
இறங்கும் போது 
தருவதாக சொல்கிற 
நடத்துனரை 
களவாணி என்றே 
அனுமானிக்கிறோம்.. !

சவாரிக்கு முந்துகிற 
ஆட்டோ ஓட்டுனர்கள் 
போன்றே அர்ச்சகர்கள்.. 
அர்ச்சனை கிராக்கிக்கு 
தட்டை ஏந்திக் கொண்டு  
அலை பாய்கிறார்கள்.. !

மதிய அன்ன தானத்திற்கு  
சரியாக 100 டோக்கன்கள்.. 
அந்த நூறில் அரைப் பசியோடும் 
பசியே அற்றும் 
பலரும் இருக்கக் கூடும்.. 
ஆனால் குடலைப் பிடுங்கும் 
பசியோடு வருகிற 
101 வது நபருக்கு 
என்ன போராடியும் 
டோக்கனில்லை.. !

ஆன்மிகம் தழைத்தோங்கும் 
இந்தியக் கோவில்களில் 
பெண்களை கவனிக்கிற 
ஆண்களின் கூட்டமும் 
ஆண்களை கவனிக்கிற 
 பெண்களின்  கூட்டமும் 
இல்லை என்றால், 
கோவில் குடமுழக்குகள் 
கூட - ஒரு 
பிரபல திரைப் படத்தின் 
கடைசி நாள் கூட்டம்  
போன்று தான் இருக்கக் கூடும்.. !!

Tuesday, February 24, 2015

அறிவு தவிர்..

பறக்கும் திராணி அற்றிருந்த 
அறியாமைச் சிறகுகளோடு 
நான் உச்சி சென்று 
குதித்திருக்கிறேன்.. 
வானம் தொட 
முயன்றிருக்கிறேன்.. 
அப்போதெல்லாம் 
காயங்களோ உடற்சேதாரமோ 
வலிகளோ நேர்ந்ததாக 
ஞாபகமில்லை.. 

இன்றைய முதிர்ந்த 
அறிவுச் சிறகுகளோடு 
மெல்ல நடந்தாலுமே கூட 
இடறுகின்றன கால்கள்.. 
காயங்களும் வலிகளும் 
கற்பனையில் வந்தே 
அதீத வலிகள் நிகழ்த்துகின்றன.. !

ஐந்தறிவு அஜாக்கிரதையோடு 
மின்சாரக் கம்பிகளிடையே கூட 
கண்ணாமூச்சி விளையாட 
சாத்தியப் பட்டிருக்கிறது.. 

இன்றைய பகுத்தறிவுகளும் 
ஜாக்கிரதை உணர்வுகளும்  
நான்கு பூட்டுக்களை 
வாசற்கதவுக்குப் போட்டும் கூட 
நடுவீட்டுக்குள் திருடன் வந்து 
கழுத்தில் கத்தி வைத்துவிட்ட 
பீதியுள் உறைந்து கிடக்க  
விழைகிறது.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...