Showing posts with label anna and ahimsaa..a3.... Show all posts
Showing posts with label anna and ahimsaa..a3.... Show all posts

Sunday, August 28, 2011

அன்னா ஹசாரே

பிஜ்ஜா, பர்கர், சில்லி சிக்கன் சில்லி மஷ்ரூம் , போன்லஸ் பிஷ், சுக்கா ரொட்டி, கொத்து பரோட்டா, எக் நூடுல்ஸ், மட்டன் கிராவி, பன்னீர் பட்டர் மசாலா, .. இதெல்லாம் செரிக்க பெப்சி கோக் , லெமன் சோடா, இதையும் தாண்டி, உவாக் என்று வாந்தி....
 இப்படி வெறி பிடித்து சாப்பிட்டு அலைகிற கூட்டத்திற்கு நடுவே, முக்கால் நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து வருகிற ஓர் மாமனிதர் அன்னா ஹசாரே... இரண்டு வாரங்களாக இந்த தேசத்தின் நலன் காக்க, லஞ்ச லாவண்யங்களை ஒழிக்கப் போராடி அன்னம் தண்ணி உண்ணாமல் போராட்டத்தை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார்... இது ஏழை எளிய மக்களின் வெற்றி... பணப்பேய் பிடித்து திரிகிற கூட்டம் இனியேனும் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு... 
காந்தியை பார்த்ததில்லை என்கிற  அநேகம் பேர்களுடைய ஏக்கங்களைப் போக்கி இருக்கிறார் அன்னா... 
ஆனால் இன்று பல தந்திர அரசியல் வாதிகள் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்... இவரது அஹிம்சையையே இம்சை என்று திரித்துக் கூறுவதற்கும், இவரையே ஊழல் வாதி என்று வதந்தி பரப்புவதற்கும் , கபட நாடகம் ஆடுகிறார் என்று பொய்யுரை கூறுவதற்கும் ... இவரது போராட்டத்தால் பாதிப்புக்கு உள்ளான பல பண முதலைகள் தயார் நிலையில் இருக்கின்றன.. 
இந்த நவீன யுகத்தில் நல்லதை கெட்டதென சொல்லவும், கெட்டதை நல்லதென சொல்லவும் பல மீடியாக்கள் உள்ளன... காலமும் கடவுளும் தான் நல்லதை நல்லதாகவே காண்பிக்கிற வல்லன்மை உள்ளவர்கள்... பார்ப்போம்...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...