Showing posts with label JUST A SMALL THINKING... Show all posts
Showing posts with label JUST A SMALL THINKING... Show all posts

Tuesday, February 16, 2016

6ஆம் அறிவுத் தொந்தரவுகள்..




சோற்றுப் பருக்கைகள்
காலில்  மிதிபடுகையில் கூட 
என்னவோ மலம் 
மிதித்துவிட்ட துரிதகதியில் 
ஓடிச்சென்று கால்களைக் 
கழுவுகிறோம்.. 

என்றேனும் மலத்தினை 
மிதித்து விட நேர்கையிலும் கூட 
அது ஒரு மனிதனின் 
செரிமானமான உணவென்கிற 
அறிவியலை ஏற்க மறுத்து 
அசூயை கொண்டு 
கழுவ ஓடுகிறோம்.. 
Image result for aversion
எந்த உயிரினங்களுக்கும் 
பரஸ்பரம் 
அவைகளின் மலம் 
அருவருப்பு ஏற்றுவதில்லை.. 
மனித இனத்துக்கு மாத்திரம் 
தான் இன்னொருவனின் 
உணவு முறைகள் கூட 
அவன்  உண்ணும் 
முறைகள் கூட 
குமட்டல் ஏற்படுத்தி விடுகின்றன.. !!
Image result for aversion

Wednesday, January 20, 2016

வண்ண வண்ண மனிதர்கள்..

Image result for VARIETY OF PEOPLE
பிரத்யேகமான ஏதோ ஒன்றில் நிபுணத்துவம் கொண்டிருப்பது ஒவ்வொரு மனிதனின் மகத்தான பிரஸ்டீஜ் இஷ்யூ..

சிலர் அனேக வித்தைகளிலும் கை தேர்ந்த சாமர்த்திய சாலிகளாக இருப்பதும் உண்டு.. அத்தனை ஐ-க்யூ இயல்பெனில் விட்டு விடுவோம்.. போற்றிப் புகழ்வோம்.
ஆனால், அவ்வித தன்மைக்கு நாம் முயல்வது என்பதும் அது கைவரப் பெறாமற் போயின் சுக்குநூறாக உடைந்து பொடி  தவிடாக உதிர்ந்து போவதென்பதும்  அநியாயம் மற்றும் அனாவசியம்.. !

நமக்கென்று வாய்த்திருக்கும் ஏதோ ஒன்றை செவ்வனே செய்து, அதிலே பரமானந்தமாக லயித்து .. புளகித்துப் போவதும், புறம் நின்று அதனைக் காண்பவர் வியக்கும் வகையில் ஆர்ப்பரிப்பதும் செம ஃபீல்.. 

சிலர் எந்நேரமும் வேலை அல்லது தொழில் முஸ்தீபில் இருப்பதையே விரும்புவர்.. ஓய்வைக் கூட ரகசியமாக்கி, பிறரிடம் தான் அப்படி எல்லாம் ரிலாக்ஸாக இருப்பதை விரும்புபவன் அல்ல என்பதைப் பறை சாற்றுவது கடமை போன்று  பிதற்றுவர்... இவரது அலுவல் சென்று சீக்ரட் விசிட் அடித்து  இவர் அமர்ந்திருக்கும் இருக்கையில் சற்றே ஒரு குஞ்சுத் தூக்கம் போடுவார் என்ற பட்சத்தில்.. நமது அரவம் நிமித்தம் விழிப்புத் தட்டி அண்ணன் செம டென்ஷன் ஆகி ஒரு மாதிரி மந்தகாசப் புன்னகை புரிந்து ... பிற்பாடு சாவகசமாக கோபிப்பார். 'வர்றேன்னு ஒரு போன் செஞ்சுட்டு வரத் தெரியாதா?' என்று கேட்பார்.. !

இன்னும் சிலர்.. சும்மா இருப்பர் .. நண்பர்களோ இன்னபிறரோ 'என்ன பண்றீங்க?' என்று கேட்டால், 'புதுசா எதாச்சும் படம் பார்த்தீங்களா?' என்று அவரையே கேட்பார்.. இவரது நேச்சர் புரியாத நபர்கள் இவரது தத்துபித்து கேள்விகளுக்கு  பதில் சொல்லத் துவங்குவர்.. 
புரிந்தவர்கள்.. இவரின் அசட்டுக் கேள்விகளுக்கு தக்க பதிலை உதிர்த்துவிட்டு  'இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க பாஸ்?' என்றொரு போடு போட்டால்.. 'உங்க கூட  பேசிட்டு இருக்கேன்' என்று ஹாஸ்யத்தில் பிரம்மாதக் கில்லாடி போன்று ஒரு கதறல் சிரிப்பொன்று சிரித்து வைப்பார்.. 
'அடே வெண்ணை.. சும்மாவே இருக்கியே.. வெட்கமா இல்லே?' என்று கேட்டாலே ஒழிய  இந்த நபர்களுக்கு சுரணை  பிறப்பது என்பது கடினம்.. ஆனால், இந்தப் பேமானிகளை அப்படி 'போட்டுடைப்பது' போன்று கேட்டு எவரும் வாங்கிக்  கட்டிக் கொள்ள தயாரில்லை என்பதால் நாசுக்காக ஏதேனும் சொல்லி  மூக்கறுப்பதும் , மானம் கெடுப்பதும் ரகசிய லட்சியமாக வைத்துக் கொண்டு  இவர்களை தெராட்டு வாங்கினால், அடுத்த நாள் எங்கேனும் வேலைக்கு செல்லும்  உத்தேசத்தில் ஒரு 2 அல்லது 3 நாட்களாவது இருப்பார்கள் என்பது உத்திரவாதம்.. ஹிஹி.. !  Image result for VARIETY OF PEOPLE

Monday, August 3, 2015

1000 கிலோ முரண்கள்..

எந்த மனிதனை 
சிருஷ்டிக்கவும் 
கடுகளவு கல்லைக் 
கூடப் பிரயோகிக்கவில்லை 
கடவுள்.. 

ஆனால் 
கற்களை மட்டுமே 
கொண்டு 
கடவுள் சிருஷ்டிக்கப் 
படுகிறார் 
மனிதனால்..!!

Sunday, May 10, 2015

உதைபடுகிற லாஜிக் ..

திடீரென்று அன்னையர் தினம் என்று ஒரு நாள் வருகிறது.. கான்செர் நாள், டயாபட்டீஸ் நாள், கைகளை சுத்தமாக அலம்பி விட்டு சாப்பிட என்றொரு நாள்.. 
இப்படி யாரினி வரையறுத்து நாட்களை புதுப்பிக்கிறார்களோ புரியவில்லை.. ஆனால் அவர்கள் தெரிவிக்கிற இம்மாதிரியான பிரத்யேக நாட்களில் அது சம்பந்தமான வாழ்த்துக்கள் ஃபேஸ் புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் மின்னஞ்சல்களிலும் குவிந்து விடுகின்றன.. சம்பந்தப் பட்டவர்கள் வாய் மூடி மவுனிகளாக இருக்க, கொஞ்சமும் அறிமுகமற்ற அவர்களும் இவர்களும் அந்த நாட்களின் சாராம்சத்தை நம்மிடம் உதிர்த்து அதற்கான ஒரு வாழ்த்து மடலை அனுப்பி விடுகின்றனர்.. நாம் பதிலுக்கு நன்றி ஏதும் அவர்களுக்கு சொல்வதில்லை.. அவர்களும் அதனை எதிர்பார்ப்பது போன்று தெரியவில்லை.. 
Image result for MOTHERS DAY
அன்னை நம்மோடு இருக்கிற அத்தனை நாட்களும் அன்னையர் தினமே, எனிலும் அந்த அவர்கள் அனுஷ்டித்துள்ள தினம் என்னவோ அன்னைக்கான ஒரு விழா நாள் போன்ற ஓர் மாயையை ஏற்படுத்தி நம்முள் ஒரு புத்துணர்ச்சியை பாய்ச்சி விடுகிறது தான்.. 
இவ்விதமே யாதொரு நாளும்  அதனதன் வீரியத்தை  நமக்குள் உணர்த்தி சைக்காலஜிக்கலாக ஒரு ஜாலி பண்ணத்தான் பண்ணுகிறது.. 

ஒருக்கால் அம்மாவை நினைத்தே பார்த்திராதவர்கள், கூட இருந்தும் கூட அவளை ஒரு மனுஷியாக மதிக்காதவர்கள், ரகளை செய்து அவள் வைத்திருக்கிற காசு பணத்தைப் பிடுங்குகிற ஊதாரிப் பசங்கள், கொஞ்சமும் ஈவிரக்கமற்று அம்மாவை அடிக்கிற உதைக்கிற ஈனப் பிறவிகள்.. 
இவர்கள் மாதிரியான  நபர்களுக்காக இந்த மாதிரியான நாட்களைத் திணித்தனரோ என்னவோ.. 
இஸ்கூலுக்குப் போறவனுக்குத்தான் சனிக்கிழமை அரைநாள் லீவ் என்பதும் ஞாயிற்றுக்  கிழமை முழுசா லீவ் என்பதும் பரமானந்தமான விஷயம்.. 
அன்றாடம் ஞாயிறு போன்று வெட்டியாக  ஊர் சுற்றித் திரிகிற பனாதிகளுக்கு சனிஞாயிறு  எவ்வித தனிப்பட்ட அடையாளங்களைக் கொணர்ந்தும் சேர்த்து விடப் போவதில்லை..  
அதாகப் பட்டது நைனா, ரவுடிப் பசங்களை இஸ்கூலுக்குப் போறவுகன்னு வச்சுக்குவோம்.. அன்னையர் தினத்தை சனி ஞாயிறா வச்சுக்குவோம்.. 
அதேமாதிரி எப்பவுமே அம்மாவை மதிக்கிற பசங்களை, வெட்டியா ஊர் சுற்றுகிற பசங்களா வச்சுக்குவோம்.. 
ஹிஹி.. எங்கியோ பயங்கரமா "லாஜிக்" எட்டி எட்டி ஒதைக்குதல்ல?? 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...