Showing posts with label அபிப்ராயங்கள்.... Show all posts
Showing posts with label அபிப்ராயங்கள்.... Show all posts

Tuesday, July 17, 2012

பில்லா சகுனி கூட்டங்கள்..

இப்பெல்லாம் டுபாக்கூறுப் படங்களுக்கெல்லாம் கூட செமத்தியா ரசிகர்கள் பில்ட் அப் கொடுத்து அலப்பறை செஞ்சர்றாங்க...

உதாரணத்துக்கு சமீபத்துல ரிலீஸ் ஆன சகுனியும் சரி, பில்லா ரெண்டும் சரி.. என்ன பண்ணாலும் பருப்பே வேகாத படங்கள் போலும்.. ஆனா அந்த நடிகர்களோட ரசிகர்கள் செஞ்ச பாலாபிஷேகத்தயும் படாடோபத்தையும் பார்த்தா என்னவோ அந்தப் படம் சில்வர் ஜூ பிலியும் கோல்டன் ஜூபிலியும்  கொண்டாடுன மாதிரி சும்மா அந்தத் தூக்கு தூக்கறாங்க..

சினிமா காரங்க ஒருபக்கம் இந்த அப்பாவிப் பொதுசனங்களை ஏமாத்திக்கிட்டு இருக்காங்கன்னு பார்த்தா ரசிகர்கள் ஏமாத்துறது அதுக்கு மேல இருக்கு..
கொழந்தைகளோட அடத்தை நம்பி பொம்மை பிசினஸ் செய்யறவன் பொழச்சுக்கறது  போல, இந்தப் பொறுப்பில்லாத ரசிகர்களால, இதுல சுலபமா மயங்கற  பொதுமக்களால, முக்கியமா அவுங்களோட அரைடிக்கட் பசங்க பிள்ளைங்களால  இவனுக கல்லா கலகட்ரதப் பார்த்தா நமக்குப் படா டென்ஷன் ஆகிடுது நைனா...

ரீமேக் பண்ற படங்களைக் கூட ஒழுங்கா பண்ணாம இவனுக இஷ்டத்துக்குப் பண்ணிப்புட்டு அப்புறம் பாக்ஸ் ஆபீஸ்ல ஊத்திக்கிச்சு, சரியா போவலை அப்டி இப்டின்னு எலிப்பொறில மாட்ன  எலி போல மூஞ்சிய வச்சுக்கினு திரிய வேண்டியது...

இவனுக பண்ற கூத்தை கூட நம்பாம இவனுக ரசிகர்கள் அளப்பரயில மயங்கி ஓபனிங் ஷோ , பஸ்ட் நாளு பஸ்ட்  காட்சின்னு அஞ்சு ரூபா கொடுத்துப் பார்க்க யோகியதை இல்லாத சப்பை மேட்டர்  படங்களுக்கெல்லாம் ஐநூறு ஆயிரம்னு கப்பம் கட்டி பெருமூச்சு உடறோம்... அல்லது மூர்சையே ஆயிடறோம்...

ஒருதடவை அடிபட்ட நாயி, அப்புறம் "தப்பிச்சோம், பொழச்ச்சமொடா சாமி... இனி இந்த ஏரியாவுல தல வச்சு படுக்கரதில்லை"ன்னு வீரசபதம் ஒன்னை விவேகமா எடுத்துட்டுப் போனா அவன் மனுஷன்... அப்டி இல்லாம மறுபடி மறுபடி இந்தப் பாலாபிஷேகத்துல வந்து கலந்துக்கிட்டு சிக்கிச் சீரழிஞ்சிக்கிட்டே இருக்கணும்னு தலை எழுத்து போல... ஒவ்வொரு புதுப் பட ரிலீச்ளையும் வந்து தலைய உட்டு மாட்டிக்கினு அப்புறம் "கியோ கியோ" ன்னு கோழிக்குஞ்சு மாதிரி கதற வேண்டியது...

படத்தைப் பார்த்துட்டு ஆசையா ஹோடெல்ல போயி ரெண்டு இட்லி திங்கக் கூட சில்லறைய  விடறதில்லை இவனுக... ஆனா நம்ம இளிச்சவா தனத்தை வச்சு இவனுக ஒரு பெரிய காக் டைலே செலிபிரேட்  பண்றாங்கறது தான் கொடுமையான உண்மை இங்கே... முடிஞ்சா புரிஞ்சுக்கங்க...

Sunday, November 13, 2011

டெலிவிஷனும் குழந்தைகளும்...

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை brilliant box ஆக அறிமுகப் படுத்துங்கள்...
நம்முடைய தப்பித்துக் கொள்கிற தந்திரங்களுக்காக எந்நேரமும் குழந்தைகளுக்கு கார்ட்டூன் நெட் வொர்கயும் போகோ வையும் திணித்துக் கொண்டிருக்காதீர்கள்... டிஸ்கவரியை, அனிமல் பிலாநெட்டை, செய்தி சானல்களை பழக்கப் படுத்துங்கள்..
அப்போது தான் அவசரத்துக்கு நாம் ஏதாவது செய்தி கவனிக்க வேண்டுமானால், தப்பிக்க முடியும்... அவர்கள் போக்கிலேயே அவர்களின் ரசனைக்கு மட்டும் விருந்து படைத்துக் கொண்டிருந்தோமேயானால், நம்மை சின்னாபின்னமாக்கி விடுவார்கள் குழந்தைகள்...

குழந்தைகளுக்கு டெலிவிஷனை வேடிக்கை பார்க்கிற ஜன்னலாகப் பயன்படுத்தப் பழக்காதீர்கள்.., மாறாக, அதனை ஒரு emergency exit ஆக உபயோகித்துப் பழக்குங்கள்...
கண்கள், மனது, கல்வி, விளையாட்டு, இவை அனைத்தையும் பாழ் செய்கிறது டிவி..

நாமும் மடத்தனமாக அந்தக் குப்பை நாடகங்களில் ஒன்றுவோமேயானால் , அது குழந்தைகளையும் தொற்றிக்கொள்ளும்... நாம் அந்த நாடக நேரங்களை மறந்தாலும் கூட அதுகள் அலாரமடிக்கத் துவங்கிவிடும் அந்த நேரம் வருகையில்...

ஆகவே பெரிசுகளும் கொஞ்சம் சிறுசுகளை மனசில் வைத்து செயல்படுவது சாலச் சிறந்தது...
நம் காலத்தில், அதாவது நாம் படிக்கிற காலத்தில், கரகரப்பான வானொலி அலைவரிசைகள் தவிர வேறு நாதியில்லை... அந்த அரைமணிநேர பாடல்களுக்காக விவசாய நிகழ்ச்சிகளை சகித்துக் கொண்டிருப்போம்... இன்னபிற அனத்தல்களைக் கூட அலட்சியம் செய்யாமல் கவனித்துக் கிடப்போம்.. விட்டால் அந்த அரைமணிநேர சினிமா பாடல்கள் பறிபோய்விடுமே..!..
ஆனால் இன்றோ... எம் பி த்ரீ என்ன, ப்ளூ டூத் என்ன, ... இன்னும் இத்யாதி என்னக்கள்..
வெள்ளிக்கிழமை ஏழரை டூ எட்டு ஒரு நான்கைந்து பாடல்கள் ஒளியும் ஒலியுமில் வைப்பார்கள்... அது சில  சமயங்களில், அதரப் பழசாக வந்து மண்டை காய்ச்சும்...மற்றொரு வெள்ளியில்  சற்றும் எதிர்பாராமல் புத்தம் புதுசாக அன்று ரிலீஸ் ஆன படப் பாடல்கள்... பாடல்களுக்கு முன்னர் அந்தப் படத்தின் ஸ்டில் நம் டிவி திரையில் விழுவதே பெருமையாக இருக்கும்...

இப்படி எல்லாம் ஓர் கட்டுப்பாடோடு நாம் வாழ்ந்து வளர்ந்து வந்தோம் என்று சொல்வது தவறு... டெக்னாலஜி அந்த அளவு மட்டுமே வளர்ந்திருந்தது.... அன்றைக்கும் இன்று மாதிரியே எல்லாம் பிரம்மாண்டமாக இருந்திருந்தால் வேண்டாம் போ என்றா சொல்லி இருப்போம்?...

நாற்பது தாண்டியும் மூக்குக் கண்ணாடியின் தேவை நம் அநேகம் பேர்களுக்கு இல்லை.. ஆனால் இன்றைய வாண்டுகள் முக்கால் வாசிக்கு கிழங்கள் போல சோடாப்புட்டி அவசியமாகி விடுவது வேதனையாகவும் விபரீதமாகவும் இருக்கிறது...
                                      ..
நாம தான் கஷ்டப் பட்டுட்டோம்..நம்ம குழந்தைகளாவது ஜாலியாக வளரட்டும் என்கிற போக்கு, நம்மில் பலருக்கு ஓர் நேரத்தில் முளைத்து விடுகிறது...
இருக்கட்டும்.., அதில் தவறில்லை..
ஆனால் அந்த சுதந்திரத்தில் - சில நாசுக்கான கட்டுப் பாடுகளைத் திணிப்பதும் மிக அவசியம்...
நன்றி..

சுந்தரவடிவேலு..

Monday, February 8, 2010

எழுதுகிறவர்கள் குறித்து...

ஓர் அசந்தர்ப்பத்தில் என் எழுத்துக்களில் சுவாரஸ்யங்களும் அறிவுப்பூர்வங்களும் ஒருங்கே இழைந்து என்னை ஓர் அறிவுஜீவி போல எனது கவிதைகளும் கட்டுரைகளும் உணர்த்தி விடுகின்றன... என் உயரிய கருத்துக்களுக்கும் என் செயற்பாடுகளுக்கும் இருக்கிற முரண்கள் எனக்குள் ஒரு இனம் புரியாத குற்ற உணர்வுகளைக்கூட கிளர்ந்திடச்செய்யும்..
இது எல்லா எழுதுகிறவர்களுக்கும் பொருந்துமோ என்னவோ புரியவில்லை.., !!

என் தனிப்பட்ட கருத்துக்களையும் உணர்வுகளையும் பிறர் வசமும் எதிர்பார்க்கிற இந்த மனோபாவம் ஒரு வகையான சிறுபிள்ளைத்தனம் என்றே அனுமானிக்கிறேன்... நம் பலவீனங்களை கூட யதார்த்தமாக வெளியிடுகிற நாகரீகம் நமக்கு வேண்டுமேயல்லாது, அதில் ஒப்பீடும் சந்தோஷங்களும் கொள்கிற சிறுமை தவிர்க்கப்படவேண்டிய ஒன்றே...!

நாம் எழுதுவதில் எந்நேரமும் ஆழ்ந்த சிந்தனைகளும் பிறர் பாராட்டுக்களும் இருக்க வேண்டுமென்கிற தீராத தாகம் ... அனாவசியமானதென்றே கருதுகிறேன்... நம் போக்கில் யதார்த்தமாக எழுத வேண்டும், அது நேர்மையாக தெளிவாக இருக்க வேண்டும்.. அவ்வளவு தானே அன்றி .. பலரது பாராட்டைப்பெற வேண்டும் .. மிகுந்த கரகோஷம் பெற வேண்டும் என்று கருதுவதெல்லாம் ஓர் பெரும் பின்னடைவை நிகழ்த்தவே ஏதுவாகும் என்று கருதுகிறேன்...

யாதொருவருக்கும் அதிர்ஷ்டம் என்பது இயல்பாயும் விபத்தாயும் அமையுமே அல்லாது எதிர்பார்ப்பதோ, அடைய வேண்டும் என்கிற வெறி கொள்வதோ அறிவீனமே ஆகும்..


சுந்தரவடிவேலு ...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...