Showing posts with label NEWS AND PAINS. Show all posts
Showing posts with label NEWS AND PAINS. Show all posts

Saturday, January 5, 2013

அந்த அப்பாவி டில்லிப் பெண்

அந்த அப்பாவி டில்லிப் பெண் சம்பவம் கல்வெட்டை விட ஆழப் பதிந்து விட்டன எல்லாரது மனங்களிலும்...
நிச்சயம் அந்த சம்பவம் நிகழ்ந்த அந்தக் கொடூர ஷணங்கள் எல்லாரது மனங்களிலும் ஓர் தவிர்க்க முடியாத கற்பனையாக ஒவ்வொரு விதமாக ஓடிக் கொண்டுதான் இருக்கும்..
தனது இனமெனில், நான்கறிவு ஐந்தறிவு படைத்த மிருகங்கள் கூட ஓர் இரக்கத்தைக் காண்பிக்கிற இவ்வுலகில் ஆறறிவு படைத்த மனித இனம் எப்படி இப்படி ஓர் கேவல செயலைச் செய்தது?

அங்கே இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பிரஜையும் ஈவிரக்கமற்ற மனோபாவம் கொண்டவர்கள்... பிணத்துடன் கூட உறவு வைக்கத் தயங்காத ஈன ஜென்மங்கள்... பீயைத் தின்று கூட ஏப்பம் விடுகிற பனாதிப் பரதேசிப் பயல்கள்..

%20%28A%20picture%20tribute%20to%20the%20dead%20Delhi%20woman%2C%20who%20was%20repeatedly%20raped%20on%20a%20moving%20bus%20on%20December%2016%20has%20gone%20viral%20on%20Facebook.%29
அதில் ஒரு பயல் பதின் வயதில் உள்ளதாகவும் அவனுக்கு தண்டனை சற்றே மாற்றி அமைக்கவேண்டும் என்றெல்லாம் ஆலோசித்து நேரத்தை அனாவசியமாக விரயம் செய்து வருகிறார்கள்.. 

எவ்வித பாரபட்சங்களும் அற்று இவர்கள் அனைவரும் மிகக் கொடூர முறையில் சாகடிக்கப் படவேண்டும் என்பது எல்லாரது ஒருமித்த கருத்தும் ஆகும்..

கொசுவை நசுக்க "ஜீவகாருண்யம்" பேசுகிற ஓர் சாது கூட , இந்த கற்பழிப்பு கும்பலை சுண்ணாம்புக் கால்வாயில் தூக்கிப் போட்டுக் கொல்ல வேண்டும் என்று ஓர் அனுமானத்தை வைத்திருக்கக் கூடும்..!!

இவர்களுக்கு வக்காலத்து வாங்க வக்கீல் எவனாவது முளைத்தால், அவனது பொண்டாட்டியே அவனுக்கு விஷம் வைத்துவிடுவாள்...


இவர்களுக்கு நரகத்தை நாம் இங்கேயே காட்டிவிடவேண்டும்... இவர்களுக்கு அளிக்கப் படுகிற உயர்ந்த பட்ச தண்டனை, மேற்கொண்டு இவ்வித நடவடிக்கையில் ஈடுபட நினைக்கிற எவனொருவனுக்கும் பெரிய பாடமாக அமையவேண்டும்.. 


நோகாமல் இவர்களை தூக்கிலேற்றி சாகடிப்பதோ, வேறு ஏதாவது மனித நேய அடிப்படையில் ஓர்  இயக்கம் போராடத் துணிவதோ இவர்களது விஷயத்தில் கவைக்கு உதவாது.. 


பொதுமக்களால், அதுவும் கல்லூரிப் பெண்களால் கல்லால் அடித்துக் கொல்லப்  படவேண்டும்... அந்த ஐந்தாறு களவாணிப் பயலகளையும் சேர்த்துக் கொல்லக் கூடாது.. ஒவ்வொருவனாக... அடுத்தது நாம் என்கிற பயத்தில் உறைந்து போய்  நிற்க, ஒவ்வொருவனும் துடித்து துடித்து சாவதை எல்லாருமே  பார்க்கக் காத்திருக்கிறோம்... 


ரோட்டில் செத்துக் கிடக்கிற எலியைப் பார்க்கக் கூட அருவருத்து முகத்தைத் திருப்பிக் கொள்கிற  சுபாவத்திலுள்ள நான்.., இவனுகளை கல்லில் அடித்து சாகடிக்கிற வாய்ப்பை அளித்தால் ஏற்றுக் கொள்கிற மனோதிடத்தில் ஓர் வெறியோடு  இருக்கிறேன்... ஒவ்வொருவரும் இருக்கிறோம்...!


Saturday, July 28, 2012

சிதறல்கள்

பிளாகில் earnings என்ற ஓர் தளத்தில் தமிழில் பிளாக் எழுதுகிற நபர்களுக்கு ஒவ்வாத ஒன்றாக அறிவித்திருப்பது தமிழையும் தமிழில் எழுதுகிறவர்களையும் கேவலப் படுத்துவது போல உணரத் தோன்றுகிறது...

அதற்கென்று eligible ஆக சில மொழிகள் உள்ளன.. அவை மாத்திரமே விளம்பரங்களை  ஓரத்தில் அனுமதிக்கச் செய்து earnings பண்ண முடியும்.. என்ன கொடும சார் இது?..

இதற்கெல்லாம் போராடுகிற கூட்டம் இல்லையா?.. ஆனால் யாரிடம் இதற்கெல்லாம் கூப்பாடு போடுவது?.. எப்படி கொடி  தூக்குவது..? ஹசாரே மாதிரி உண்ணாவிரதம் இருக்க நான் தயார்.. ஆனால் எப்படி எங்கே?

இதற்காக இனி இங்கிலீஷில் எழுதியா கிழிக்க முடியும்??..

ரியாதில் இருந்து புது டெல்லி வந்திருக்கிறார் ஒரு நபர்... எவ்வித விசாவோ , பிற பயண டாக்குமேண்டோ எதுவுமற்று... நம்ம இந்தியன் ஐர்லைன்சில் ..

நல்ல வேலையாக வந்து இறங்கிய பிறகாவது கண்டு பிடித்தார்கள் என்பது இந்திய சாதனை... அதையும் நழுவ விட்டிருந்தால் அண்ணன் ஜாலியாக சுற்றி அடித்து விட்டு ரிட்டன் டிக்கட் கூட எடுத்திருப்பார்...

"இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று விமான உயரதிகாரிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.."hefty penalty போட வேண்டும் " என்று அரற்றுகிறார்கள்... இவர்களது புலம்பல் மிகுந்த எரிச்சலை உண்டு பண்ணுகிறது...

என்னைக் கேட்டால் இவர்களுக்குத் தான் பெனால்டி போட வேண்டும்.. இத்தனை தடைகளைத் தாண்டி தில்லாக வந்திருக்கிற அந்த நபரின் களவாணித் தனத்தை ஒரு வகையாக ரசிக்கக் கூட முடிகிறது... ஆனால் இவர்களது அஜாக்கிரதையை நினைக்கையில் பத்திக் கொண்டு வருகிறது...
"mentally challenged " என்று ஓர் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் . நம்ம ஊழியர்கள் தான் mentally challenged  ஆகத் தோன்றுகிறது எனக்கு ...

நம்ம தமிழ்நாட்டில் ஒரு பனாதிப் பயல் செஞ்ச காரியம் மனசை உலுக்குகிறது... தனது மனைவி ரெண்டாவதும் பெண்ணாகவே பெற்றெடுத்த காரணத்தால் அன்றாடம் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்ததில் ரத்தவாந்தி எடுத்து அந்தப் பெண்மணி இறந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது... இந்த வழுக்குவால் பேமானிக்கெல்லாம் எதுக்குப் பொண்டாட்டி புள்ளை ?.. எங்காவது போயி கெணத்துல உழுந்து சாக வேண்டியது தானே?..


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...