Showing posts with label விபரீததமாஷ்... Show all posts
Showing posts with label விபரீததமாஷ்... Show all posts

Sunday, September 11, 2011

திருட்டுப்பயலின் டைரியிலிருந்து..

உன் மெல்லிய சங்குக் கழுத்து காயமாவதில், அதில் நீ வலியில் தவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை... 
வன்முறைகள் ஏதுமற்று உன் கழுத்துச் சங்கிலியை கபளீகரித்தாக வேண்டும்...
உடனடியாக தொலைந்தது புலப்படாமல் நீ சற்று நிமிடங்கள் கழித்து உணர்ந்து , அதற்காக மற்ற பெண்கள் போல வருத்தமுறாமல் மிக சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்...

நல்ல  வேளை.. கழுத்து சேதப்படாமல் போயிற்றே , வாழ்க திருடன் என்று நீ மலர்ச்சியோடு வாழ்த்தவேண்டும்...
அதில் நானும் என் தொழிலும் செழிப்புற வேண்டும்...
நகை புனைவதில் சேதாரம் இருக்கலாம்... ஆனால் அது ஓர் பெண்ணால் அணிந்திருந்து  பிடுங்கப்படுகையில் எவ்வகை சேதாரமும் அவளது  உடலுக்கோ மனசுக்கோ நேரக்கூடாது என்பது இந்தத் திருடனின், அவா மற்றும் பிரார்த்தனை..

ஒவ்வொரு முறை வழிப்பறி செய்கையிலும், எவரது கையிலும் மாட்டி தர்மடி வாங்குகிற கற்பனைகள் மேலோங்கும் என்றாலும், அவ்விதம் அசம்பாவிதம் எதுவும் நிகழக்கூடாது என்பதற்காக  அரசமர விநாயகருக்கு நூற்றியெட்டு ஈடு தேங்காய்கள் போடப்படும் என்பதாக பிரார்த்தனை... 
படித்த காலங்களில் பாஸாக வேண்டும் என்கிற வேண்டுதலைக்கூட செவ்வனே நிறைவேற்றாத விக்னேஸ்வர் , இன்றைய என் கபடக் கபடிகளில் வெற்றிப்புள்ளிகளைக் குவிக்கத் துணை வருவது பரமாச்ச்சர்யம்.....

நான் அந்தப்பெண்ணிடம் களவாடுவதை அவளே ரசித்து என் மீது காதல் வசப்பட வேண்டும் என்பது என் மற்றுமொரு நூற்றியெட்டுத் தேங்காய்களுக்கான பிரார்த்தனை..

அதனையும் செவ்வனே நிறைவேற்றுகிற ஆற்றல்களும் உரிமைகளும் கடவுள் வசமுண்டு என்பதை என் களவாணி பய நெஞ்சரியும்...

எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறுகிறதே என்ற போதிலும் வேண்டிக்கொண்டது போல தேங்காய் போடுகிற கெட்ட பழக்கம் என்னிடமில்லை.. சாமியை ஏமாற்றுவதால் தான் "இவன் நம்மையே ஏமாற்றுகிறான்... மக்களும் இவனிடம் ஏமாறட்டும்" என்று சபித்திருப்பாரோ?? அவரது சபிப்பு கூட எனக்கு வாழ்த்தாக மாறியிருக்கிற விஷயத்தை கடவுளே கூட புரிந்து கொள்ளவில்லையோ???


Saturday, September 5, 2009

தொழில் தர்மம்...

அவரவர்களுக்கு வாய்த்த ஓர் தொழிலை மய்யப்படுத்தி -சம்பந்தப்படாதவர்கள் மீதெல்லாம் திணிக்கிற இயல்பு--- மனிதம் சார்ந்தது...
-முடி திருத்துகிற சலூன்காரர் தன் கடையை கடக்கிற நபர்களின் முகங்களைப் பார்ப்பாரோ இல்லையோ மண்டைகளை நிச்சயம் கவனிப்பார்.. தினத்தந்தி படிக்க வருகிற நபரைக்கூட , ஷேவிங்கா கட்டிங்கா என்பது போல பார்ப்பார்..
--அடுத்து தையல்காரர்....
ஆள் பாதியை மதிக்காமல் ஆடை பாதியை மட்டுமே அலசிக்கொண்டிருப்பார்..
--கசாப்புக் கடைக்காரர்..
கத்தரிக்காய் வாங்கக்கடந்து போனால் கூட "லெக்பீஸ் சார்...?" என்று கேட்டு மனசை அலை பாய வைத்து விடுவார்...
செருப்புத் தைக்கிறவர்-----
அப்போது தான் பாட்டாவில் புதியதாய் வாங்கி கால்களில் மாட்டியிருப்போம்..,
வார்அறுந்து தொங்குகிறதா என்று நோட்டம் விடுவார்..
விட்டால், காலையும் செருப்பையும் சேர்த்துக் கோர்த்து தைத்து விடுவார்...
--இப்படியாக எல்லாருமே அவர் அவர்கள் தொழில் தர்மங்களை தவமாய்க் கருதி வாழ்ந்து வருவதைப் பார்க்கையில் , எனக்கு விபரீதமாய் ஒன்று தோன்றுகிறது..
---நாமெல்லாம் சுடுகாட்டைக் கடந்து செல்கையில் , அங்கிருந்து வெட்டியான் நம்மைப் பார்ப்பான்..எதிர்காலப் பிணங்களாக?...
எதிகாலப் பிணங்களாக பார்த்தால் கூட தேவலாம்.. அவனும் தன் தொழில் தர்மத்தை நிலை நாட்டுபவனாக நிகழ்காலப் பிணங்களாகவே பார்க்க ஆசைப்பட்டால்?.....??

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...