என் பிம்பத்தைப்
பிரதிபலிக்க மறுக்கிற
கண்ணாடி...
என் நிழல்களைப்
புறக்கணிக்கிற
வெளிச்சங்கள்...
-நான் சுவாசிக்க
மட்டும் காசு கேட்கிற
வெட்டவெளி...
நான் நீந்துவதை
நிறுத்தச்சொல்கிற
நீர்நிலைகள்...
இப்படி அவஸ்தையான
கனவுகள்...,
துணுக்குற்று விழித்தாலோ
மின்சாரம் தொலைந்து
மின்விசிறி நின்றிருக்கிறது..!
வியர்த்து நனைந்த
அவஸ்தையினூடே
மறுபடி உறங்க பிரயத்தனிக்கிறேன்...!!
அடுத்து வந்த கனவில்
கவர்ச்சி நடிகையை கற்பழிக்க
ஓடுகிறேன்...
ஓட்டத்தினூடே
முன்போல மீண்டும் இந்த முறை
துணுக்குற்று விழித்துவிடக் கூடாதே
என்று மிகவும் பயக்கிறேன்...!!!
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
பா ப்பாவின் குறும்பு எனக்கும் மனைவிக்கும் ரத்தக் கொதிப்பேற்றும்.. முதுகில்அறைந்து விடுவதும் கால்களுக்குக் கீழே நறுக்கென்று கிள்ளி வி...
No comments:
Post a Comment