Wednesday, September 30, 2009

தேக்கடியில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்த கப்பல் கவிழ்ந்து முப்பது பேர்களுக்கு மேல் மூழ்கி இறந்த செய்தி கவலை அளிப்பதாக உள்ளது..

அறுபது பேர்கள் மாத்திரமே பயணிக்க தகுதி வாய்ந்த அந்தப்படகில் எண்பது நபர்கள் அமர்ந்து சென்றது ஓர் மெகா கேனத்தனம் என்றால் ... யானைகள் சூழ்ந்திருந்த ஓர் பிரதேசத்தைப்பார்பதற்காக எல்லாரும் ஒரே இடத்தில் ஒன்றாய் குழுமிய காரணத்தால் படகு மூழ்கியதாக சொல்கிறார்கள்..

வெளிநாடுப்பயனிகளும் அடக்கம் ... அது போக அநேகம் நபர்கள் கர்நாடக மாநிலத்தவர்கள் என்று செய்தி.. இப்படியா ஒட்டுமொத்தமாக முட்டாள் தனம் நிகழ வேண்டும்?

ஏறியவர்களுக்கும் விவஸ்தை இல்லை.. ஏற்றிய சுற்றுலா படகுக்காரர்களுக்கும் விவஸ்தை இல்லை...

விலை மதிப்பற்ற மனித உயிர்கள் .. விளையாட்டுப்போல விரயமாகி விட்ட இந்தக்கொடுமையான செய்தியை கேள்விப்பட்ட நேரம் பதைபதைக்க ஆரம்பித்த நெஞ்சம், இன்னும் அடங்கியதாகத்தெரியவில்லை...

என்னென்னவோ கனவுகளோடும் லட்சியங்களோடும் வாழ்க்கையை ரசனையோடு நகர்த்தியவர்களின் வாழ்வில் இப்படி ஓர் அலங்கோலமான விபரீதம் நிகழ்ந்திருக்க வேண்டாம் தான். ஆனால் விபத்தின் கோரப்பிடியில் சிக்குகிற வரைக்கும் அதனைக்குறித்த ப்ரக்ஞைகளோ ... ஏன்., கற்பனைகளோ கூட சில நேரங்களில் எவருக்கும் பிடிபடாத மர்மமாகவே இருந்து விடுகிறது..

மேற்கொண்டாவது யாவும் ஜாக்கிரதையாக நடந்து இவ்வித விபத்துக்களைத்தவிர்க்க வேண்டும் என்று சொல்வதே வரட்டுத்தனமாக இருக்கிறது...

ஏனென்றால் எவ்வளவு சொன்னாலும் பொய்யான ஓர் பைனான்சு கம்பெனியில் சென்று காசு பணங்களை சுலபத்தில் தொலைத்துப் புலம்பிச்சாகிற இந்த மூடர்கள் காகிதக்கப்பல்களில் கூட ஏறிப்போக முயல்வார்கள்...


சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...