Skip to main content

Posts

Showing posts from December, 2013

புத்தாண்டுகள்.

நழுவுகிற
ஒவ்வொரு
வருடமும்
தூண்டிலில் சிக்காத
மீன் போல..
அல்லது சிக்கி
பிற்பாடு
நழுவுவது போல..

1999 நழுவி
2000 வந்த போது
என்னவோ
அதீதமாகப் பட்டது..
அந்த வருடம்
பிரத்யேகமாக
எல்லாராலும்
வரவேற்ற சூழல்
இன்னும் ஞாபகத்தில்.. !!
காலங்கள் நெடுகிலும்
பிரவகிக்கிற  மாயைகள்..
டிசம்பர் 31 இரவின்
அந்தப் பிரத்யேக
உணர்வுகள் ...

என்றோ ஓர் பிராயத்தில்
பிரம்மாதப் பட்ட அந்த
லயம் இன்னும்
மனவெளியில்...

அன்றைய நமது லயத்தில்
இன்றும் உணர்ந்து
குதூகலிக்கிற
பதின் வயதினர்
சுவாரஸ்யங்களை
அடையாளம் காணாமலில்லை ..!

நம் போலவே
அவர்களும் எதுவுமற்ற
ஓர் வெறுமை ஜனவரி 1-ஐ
சந்திக்கிற தருணத்தை
தரிசிக்கிற காலம்
நமக்கு வரலாம்..

.அவர்கள் நடுவயதிலும்
நாம் மூப்பிலும்
தொங்கிக் கொண்டிருக்கிற
ஷணம் அது..!!

ஆண்மை .............[2 பக்கக் கதை ]

அந்த வீட்டின் முன் திருவிழா கும்பல் சூழ்ந்திருந்தது..
கத்துவதும் கதறுவதுமாக அல்லோல கல்லோலமாய் இருந்தது..
எனக்கும் இன்று சற்று ஓய்வு என்பதால் அந்தக் குழாமில் இணைந்து பட்டும் படாமலும் குசலம் விசாரிக்க ஓர் சபலம் குடையத் துவங்கிற்று..
அடுத்த ஷணம், அதனை செவ்வனே நிறைவேற்றி அந்த நாராசாரத்தினுள் நானிருந்தேன்..

"பிரச்னை என்ன?" என்று நான் தொடுத்த அறிவுப் பூர்வமான கேள்விக் கணைக்கு எந்தப் பண்ணாடைக்கும்  ஓர் தெளிந்த பதிலை சொல்கிற ஆற்றல் இல்லாதது கண்டு நான் கடுப்பானேன்..

"என்னமோ நைனா... கும்பலா கீதுன்னு நானும் வந்து இருபது நிமிஷத்துக்கு மேல ஆகுது.. பிரச்னை இன்னான்னு புடிபடவே இல்ல... "
இந்த பதில் கூட சற்று நேர்த்தியாகப் பட்டது..
புதிதாக நுழைந்தவர்கள் என்னிடம் "என்னா ஸார் ?" என்று வினவத் துவங்கிய போது தான் அந்தக் கேள்வியின் எரிச்சல் எனக்குப் புரிபட்டது..

சில நாறப் பயல்களின் வியர்வை நாற்றங்களும், பல்துலக்காத வாய் நாற்றங்களும் அந்தப் பிராந்தியத்தினின்று கழன்று வெளி வருவது தான் சாலச் சிறந்தது  என்கிற மகோன்னத சிந்தனை துளிர்த்த மாத்திரத்தில் தெறித்துப் போய்  விழுந்தேன் வெளியே…

காமம்... செக்ஸ் .. புணர்ச்சி..

காமம் குறித்தான விஷயங்களை அலசி ஏதேனும் எழுதுகையில், அதற்கான தலைப்பை சற்றே கவர்ச்சியாக வைக்கையில் உடனே அது எல்லாரையும் கவரும் விதமாக அமைந்து "படித்தவர்கள்" பட்டியல் மிக நீண்டு விடுகின்றன..
ஆனால் சத்தான சாரமான விஷயமாக இருப்பினும் அதனை உருப்படியான தலைப்பற்று வெறுமே ஓர் மனதில் ஒட்டாத தலைப்பாக கொடுக்கிற பட்சத்தில், சீந்த ஆளில்லாமல் போகிறது ..

நான் இந்த பிளாக் எழுதுகிற ஓர் விஷயத்தை மட்டும் மையமாக வைத்து இந்தக் கருத்தை சொல்லவில்லை.. எல்லா ஊடகங்களிலும் இதே கதி தான் நேர்கிறது..

பிரபல இந்தியா டுடே கூட இதைத்தான் அவ்வப்போது செவ்வனே செய்துகொண்டு வருகிறது.. செக்ஸ் சர்வே என்கிற ஓர் பிரம்மாத தலைப்போடு வெளிவருகிறது.. அதற்கான விளம்பரங்கள் பல மாதங்கள் முன்னரே பிரபலமாகி விடுகிறது.. சொல்லப் போனால், அந்த இஷ்யூவை கடைகளில் காசு கொடுத்து மாத்திரமே வாங்கமுடியும்.. வழக்கமாக ரெஜிஸ்டர் போஸ்டில் வருகிற இதழ் நிச்சயம் மிஸ் ஆகிவிடும்.. போஸ்ட் மேனைக்  கேட்டால் ஏதேனும் ஜவாப் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்..

இப்படியாக, அந்த மனிதப் புணர்தல் ஓர் பிரத்யேக முக்கியத்துவம் பெறுவது இன்று நேற்றல்ல.., தொன்று தொட்டு நிகழும்…

பேஸ் புக்கில் ஒருவர்.....

பேஸ் புக்கில் ஒருவர் பதிவிறக்கம் செய்திருந்த பழமொழி.. இந்த ஓர் கருத்தினை எவர் தெரிவித்திருந்தாலும் அதற்காக நாம் நன்றி நவில்வோம்.. வாழ்க்கை நெடுக அச்சுறுத்தல்களும் தர்மசங்கடங்களும் வியாபித்துள்ள இந்தக் கால கட்டத்திலே, மனசை சற்றே லேசாக்குவது போன்ற பொன்மொழிகள் மனிதனுக்கு மிகப் பெரிய டானிக்.. 
பீதிகளும் வேதனைகளும் சதா ஈக்கள் போல நம் மனதை மொய்த்த வண்ணமே உள்ளதாயினும், அவைகளினின்று கழன்று ஓர் புத்துலகம் தரிசிக்க முயல்வது நமது அனைவரின் தலையாய கடமையாகும்.. !!
எல்லா சலுகைகளையும் எல்லா வசதி வாய்ப்புகளையும் சிலருக்கு ஆண்டவன் சுலபமாக நியமித்துவிடுகிறான்.. அல்லது அவைகளை நியமித்தது ஆண்டவன் என்று நாம் கற்பனை செய்து கொள்கிறோம்.. அல்லல்கள் அனுபவிக்கிற சிலருக்கும் அதனை நியமித்தது கடவுள் என்றே கூண்டில் நிறுத்த முயல்கிறோம்..!

இப்படி நமது அற்ப பிரச்னைகளுக்கெல்லாம் காரணகர்த்தா ஆண்டவனே என்று தீர்மானமாக சொல்வது ஆன்மீகப் பண்பாகுமா?.. ஆத்திகவாதியின் தர்மமாகுமா?.. இவர்களோடு ஒப்பிடுகையில் கடவுளை நம்பாத நாத்திகவாதி உயர்வானவனாகப் புரிகிறான் ..

காதலை..!!

எனது கனவுகளை
சூறையாடி விட்டாய்..  எனது கவிதைகளைக்  கசக்கி எறிந்து விட்டாய்.. 
எனது ரசனைகளைக்  காயப் படுத்திவிட்டாய்..  எனது நம்பிக்கைகளை  நாசமாக்கி விட்டாய்.. 
என்னையும் எனது  மன உணர்வுகளையும்  துவம்சம் செய்வதில்  அப்படி என்ன சுவாரஸ்யம்  உமக்குப் பெண்ணே?
இத்தனை செய்து விட்ட  உன்னால் ஒன்றை மாத்திரம்  ஒன்றுமே செய்ய முடியவில்லை..  உன் மீதான எனது காதலை..!!