Tuesday, December 3, 2013

பேஸ் புக்கில் ஒருவர்.....


பேஸ் புக்கில் ஒருவர் பதிவிறக்கம் செய்திருந்த பழமொழி.. இந்த ஓர் கருத்தினை எவர் தெரிவித்திருந்தாலும் அதற்காக நாம் நன்றி நவில்வோம்.. வாழ்க்கை நெடுக அச்சுறுத்தல்களும் தர்மசங்கடங்களும் வியாபித்துள்ள இந்தக் கால கட்டத்திலே, மனசை சற்றே லேசாக்குவது போன்ற பொன்மொழிகள் மனிதனுக்கு மிகப் பெரிய டானிக்.. 

பீதிகளும் வேதனைகளும் சதா ஈக்கள் போல நம் மனதை மொய்த்த வண்ணமே உள்ளதாயினும், அவைகளினின்று கழன்று ஓர் புத்துலகம் தரிசிக்க முயல்வது நமது அனைவரின் தலையாய கடமையாகும்.. !!

எல்லா சலுகைகளையும் எல்லா வசதி வாய்ப்புகளையும் சிலருக்கு ஆண்டவன் சுலபமாக நியமித்துவிடுகிறான்.. அல்லது அவைகளை நியமித்தது ஆண்டவன் என்று நாம் கற்பனை செய்து கொள்கிறோம்.. அல்லல்கள் அனுபவிக்கிற சிலருக்கும் அதனை நியமித்தது கடவுள் என்றே கூண்டில் நிறுத்த முயல்கிறோம்..!

இப்படி நமது அற்ப பிரச்னைகளுக்கெல்லாம் காரணகர்த்தா ஆண்டவனே என்று தீர்மானமாக சொல்வது ஆன்மீகப் பண்பாகுமா?.. ஆத்திகவாதியின் தர்மமாகுமா?.. இவர்களோடு ஒப்பிடுகையில் கடவுளை நம்பாத நாத்திகவாதி உயர்வானவனாகப் புரிகிறான் ..

2 comments:

  1. மிக்க நன்றி பாஸ்..
    தங்களது படைப்புகளையும் நான் கவனித்துக் கொண்டே தான் வருகிறேன்.. ஆனால், தங்களைப் போல எனக்குப் பொறுமையாக பின்னூட்டம் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்..
    நிச்சயமாகவே சினிமா பாடல்களை வைத்து புதுப் புதுக் கருத்துக்களை தெரியப் படுத்துகிற உங்களின் பாங்கு வரவேற்க உகந்ததே..
    நன்றி..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...