Skip to main content

Posts

Showing posts from November, 2014

ஆன்மீகக் குழப்பங்கள்..

எல்லா ஜீவராசிகளின் மூலாதாரங்களையும்  சற்று கண்மூடி யோசிக்கையில், நம்மில் பீறிடுகிற ஆச்சர்ய உணர்வு நம்மையே பிய்த்தெறிந்து விடும் போலும்..!
நமக்காவது ஆதாம் ஏவாள் முதற்கண் படைக்கப் பெற்றனர்.. பிற்பாடு ஆப்பிள் ஆதாமால் உண்ணப் பட்டு மனித இனம் பெருகிற்று என்கிற அந்த ஆறாமறிவு புனைந்து வைத்துள்ள கற்பனையையோ --ஒருக்கால்-- உண்மையையோ நாம் சேகரித்து வைத்திருக்கிறோம் உத்தேசமாக.. !

ஆனால் இன்னபிற ஜீவராசிகளுக்கு? அவைகளுக்கும் மனிதனே தான் ஏதேனும் கட்டுக் கதைகள் புனைந்தாக வேண்டும்.. புனைந்து அவைகள் தான் மிகவும் உண்மை என்பது போன்று நிரூபித்தாக வேண்டியுள்ளது..

இத்தனை கோடி ஜீவராசிகள் இருக்கின்றன..
நம் பெற்றோர் சேராமல் நாமில்லை.. நாம் சேராமல் நம் பிள்ளை இல்லை.. நம் பிள்ளைகள் சேராமல் நமக்குப் பேரன் பேத்திகள் இல்லை..
இதே முறை மற்ற ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.. !

ஆனால்----

இந்த எல்லா ஜீவராசிகளும் பெற்றவர்களே இல்லாமல் முதல் உற்பத்தி ஒன்று நிகழ்ந்துள்ள அதிசயம் யோசிக்கையில், அங்கே தெய்வம் நம்பப் படுகிறது..

அதன் தொடர்ச்சியாக மக்களால் தெய்வங்கள் பல கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு உட்படுத்தப் பட்டன.. உருவங்கள் பொறிக்கப…

சின்னதாய் ஒரு சிந்தனை..

கட்டெறும்பை நசுக்கி துவம்சம் செய்யப் பிரயத்தனித்த என் 6 வயது மகளிடம் அவசரகதியாக நான் சொன்னேன்.. 
"பாப்பா அதை நசுக்காதே.. அப்புறம், அதை காணோம் என்று அதன் அம்மா எறும்பு தேடும்.. காணவில்லை என்று கவலைப் படும்.. செத்துப் போய் விட்டது தெரிய வந்தால் சோகத்தில் கதறி அழும்.. ப்ளீஸ் விட்டுடு பாப்பா.. "

இப்படி நான் சொன்னதும் அவள் அதை விட்டுவிட்டாள் .. எனக்குமே கூட நான் அப்படி ஒரு கற்பனையோடு சொன்னது சற்று ஆச்சர்யமாக இருந்தது.. 
அது நான் அனுமானித்தது போல கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே இருந்து விட்டால்?.. 

குட்டியைக் காணவில்லை என்று நாய் அலைமோதுவது இல்லையா?.. கன்று கண்ட பசு பாலை சுரப்பதில்லையா?.. பசுவைக் கண்ட கன்று பரவசமாகித் துள்ளிக் குதிப்பதில்லையா?

ஆனால் ஈக்கும் எறும்புக்கும்  மாத்திரம் எதுவுமில்லை போன்றே நமதறிவுக்கு எட்டுவது வேடிக்கையாக இல்லை?.. 
சுரவிய தேங்காயின் துகள் கீழே சிதறிவிட்ட அடுத்த நிமிடம் வரிசை கட்டிக் கொண்டு படர்ந்து விடுகிற எறும்புக் கூட்டத்தின் அறிவு கவனிக்கையில், நிச்சயம்  அவைகளுக்குள்ளும் ஒரு பிரம்மாண்ட உலகம் விரிந்து கிடக்கக் கூடும் என்கிற சிந்தனை துளிர்க்கிறது.. 

கமல்ஹாசன் ..

நவம்பர் 7.. கமல்ஹாசன் பிறந்த நாள்.
அன்று முதலே கமல் குறித்தும், அவரது இந்த அறுபது வயது காலம் வரைக்குமான சாதனைகளையும் என்னால் முடிந்த வரைக்கும் சொல்லிப் பார்க்கலாம் என்றொரு அவா பீறிட... ஆனால் அது இயலாமலே போய் விட்டது..    

பிறந்தநாள் முடிந்து இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன..
அதனால் என்ன?.. கமல் குறித்து சொல்வதற்கு கால நேர அவகாசங்கள் எதற்கு?

விஜய் , அஜித்தை எல்லாம் டபுள் ஆக்ட் பார்ப்பதற்கே கந்தலாக உள்ளது..
சிங்கிள் ஆக்ட் செய்தாலே. அவர்களது காட்சிகள் மொக்கையாக உணரப் பட்டு, ஹீரோயினையோ , காமெடியனையோ காண்பித்தால் பரவா இல்லே என்று தோன்றுகிற அளவுக்குத் தான் உள்ளனர் இன்றைய சூப்பர் ஸ்டார்கள்..

ஆனால் அன்றைய ஸ்டாரான கமலோ .. இன்று நினைத்தாலும் புல்லரிக்கிற விதமாகத் தான் இருக்கிறார் மனசுள்..
தசாவதாரத்தில் 10 கேரக்டர்கள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனையோடு மிளிர்கிற அந்த சூட்சுமம் வேறெந்த தமிழ் நடிகர்களும் கனவோ கற்பனையோ கூட காண்பதற்கு சாத்தியப் படாத வகையிலே அமைந்திருந்தன என்றால் மிகையன்று.. !!

எந்த  பாவமானாலும் சுலபத்தில் அதனைப் பிரதிபலித்துக் காண்பிக்கிற கமலின் திறன்..
அண்ணாத்தே ஆடறார் குத்துப்பாட்டா…

வெள்ளை இருட்டு..

எங்கெங்கிலும்
வியாபித்திருக்கிற
வெறுமை குறித்த
பிரக்ஞை எவர்க்குமில்லை...

-வீரியமில்லாத
பிரச்னைகள் குறித்து
மிகவும் குவிக்கப்
பட்டுள்ளன எல்லாரது
இதயங்களும்...

கவனிக்கப் படாத
அடர்ந்த இருளினூடே
கிஞ்சிற்று சிதறிக்
கிடக்கிற வெளிச்சம்
குறித்து அதீத கவனம்
எல்லாருக்கும்..

வெளிச்சம்
அணையக் காத்திருக்கிறது..
இருளோடு ஐக்கியமாக
முயல்கிறது..

இருட்டுக்கு ஒன்றும்
வெளிச்சம் தேவைப் படாது.
வெளிச்சம் மட்டுமே
எப்போதும் இருட்டை
விரட்டுகிற முயற்சியிலேயே
இருட்டோடு கரைந்து போகும்.. !!


எச்சரிக்கைமணி ....

மகளிர் பேருந்துகள் போன்று மகளிர் கோவில்கள் வரவேண்டும்.. 
ஆண்களுக்குத் தனி என்பதாக கோவில்கள்.. 
அங்கே பக்தி எண்ணங்கள் மாத்திரமே பிரசன்னமாகும்.. எதிரினங்களின் அவஸ்தை அற்று இரு பாலரும் தத்தம் பிரார்த்தனைகளை கடவுளின் முன்பு சமர்ப்பித்து விட்டு வெளிவருகிற வாய்ப்பாக அது அமையும்.. 

அல்லது குறைந்த பட்சம் இந்தக் கோவில் இந்தக் குறிப்பிட்ட நாட்களில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்... வேண்டுமானால் தம்பதி சகிதமாக வரலாம்..  தனித்து வருகிற ஆண்களோ பெண்களோ வேறு வேறு நாட்களில் தான் அனுமதிக்கப் பெறுவர் .. 

நடைமுறைக்கு ஒவ்வாத, சாத்தியப் படாத இப்படியான திட்டங்கள் மனசுள் சூழ்கின்றன.. 
ஏனெனில், கோவில்களில் பக்தியைக் காட்டிலும் காமம் கரைபுரண்டோடுகிறது.. சபலிஷ்டுகளின் ஆதிக்கம் பெருவாரியாக இருப்பதை கவனிக்க நேர்கிறது.. உண்மை பக்தியோடு வருகிற சிலரின் மனங்களைக் கூட சலனப் படுத்துகிற விதமாக தவறானவர்கள் நடந்து கொள்கிறார்கள்.. 

நமது ஹிந்துக் கோவில்களுக்குப் போய் விட்டுத் திரும்ப மசூதி வழியாக வருகையில் அங்கே நிகழ்கிற தொழுகைகள் ஆண்களை மட்டுமே சார்ந்து நிகழ்வதால் இவ்வித அவா நமக்கும் எழுகிறதோ என்று தோன்றுகிறது.. 
பெண்களற்ற அ…

பரஸ்பர...

நாமெல்லாம் 
மரணத்தின் குழந்தைகள்....!
நாம் கோபிக்கிறோம்  மதிப்பதில்லை  வரவேற்க விரும்புவதில்லை  என்பதற்காக  மரணங்கள் நம்மைக்  கோபிப்பதில்லை ... 
நம்மை எல்லாம்  மதித்து வரவேற்கிற  மாண்பு மரணத்திடம்  என்றென்றும் நிரம்பித்  ததும்புகிறது..  ஒரு குழந்தையினுடைய  உதைகளைப் போன்று  நமது எதிர்ப்பை  ரசிக்கின்றது மரணம்.. 
பள்ளி செல்ல அடம்பிடிக்கிற  எல்.கே.ஜி. குழந்தைகளாகிறோம்  மரணத்திடம் நாம்.. 
வாழ்க்கையின் வலிகளை  நிறைவு செய்துவிட்டுப்  புறப்படத் தூண்டுகிற மரணத்தை  ஏனோ நாமின்னும்  பரமவைரி போன்றே பாவிக்கிறோம்.. 
உடலெனும் பையில்  உயிரை ஜேப்படி செய்கிற  மரணத் திருடனை  தண்டிக்கிற போலீஸ்  ஏழேழு லோகங்களிலும் காணோம்.. 
இன்னும் இன்னும்  பிறப்புண்டு என்கிற  நம்பிக்கைகளும்  பிறவா வரமே வேண்டும் என்கிற பிரார்த்தனைகளும்  தொன்று தொட்ட  நிகழ்வாகத் தொடர்கின்றன.. 
ஒரே பிறப்பு  ஒரே மரணம்  என்கிற கணக்கு மட்டுமே  உள்ளதென்ற உண்மை ....
பரஸ்பரம் பிறப்புக்கும்  இறப்புக்கும் மட்டுமே  புரிந்த உண்மையாகக்  கூட இருக்கக் கூடும்.. !!   ??...���������������������������������������������������������������������������������������������������������������������������������…

ரூம் போட்டு யோசிச்சேன்.. ??

முன்குறிப்பு.. 
boss .. இது என்னோட ஸ்மால் இமேஜினேஷன்.. எங்கயாச்சும் என்னோட ஓன் எக்ஸ்பீரியன்ஸ் ன்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க.. 

பைக்கில் போய்க் கொண்டிருக்கையில், சூப்பர் ஃபிகர் ஒன்று தன்னை சில பல கி.மீ. தள்ளி ட்ராப் செய்ய சொல்கையில், எவனாவது 'ஸாரி மேடம் .. நீங்க நடந்தே போங்க.. நான் மாட்டேன்' என்று சொல்கிறவன் இந்தப் பிரபஞ்சத்தில் தேடினாலும் கிடைப்பானா?

'நடக்க முடியாமல் தள்ளாடுகிற ஒரு நோயாளியை, ஒரு வயதான கிழவன் கிழவியை மாத்திரம் தான் என்னால் ட்ராப் செய்ய  முடியும்.. நீங்கள் வேறு யாரையாவது ட்ராப் செய்யச் சொல்லுங்கள்'  என்று சொல்கிற மனிதனை எப்படிப் பட்ட பேரழகியும் மணந்து கொள்ளலாம்..  ஆனா நைனா, நாட்டுநடப்பு அப்டி இல்லே... பேஞ்ச மழைக்கு இளப்பு வந்து மூச்சு விடறதே சிரமமா இருக்கற அம்மாவ அவசரமா ஆசுபத்திரிக்கு பைக்ல வச்சு கூட்டிக்கிட்டு போற போதே, ஒரு வத்தல் ஃபிகர் கையைக் காட்டி 'அண்ணே.. அவசரமா ராயல் தியேட்டர் போகணும்.. படம் போட்ருவான் .. ஆயாவ கொஞ்சம் வெய்டிங்ல போட்டுக்கிட்டு ட்ராப் பண்ணிடுங்க' என்றாலே போதும்..  'அம்மா நீ அப்டியே அந்த மரத்தடியில குந்திக்கினு இரு.. இந்த பாப்ப…

கத்தி.. film review..

கத்தி பார்த்தனுங்கண்ணா ....
கழுத்தை அறுத்துட்டாங்க.. விஜய் , முருகதாஸ், அனிருத், இப்படிக் கூட்டுக் கலவையோடு கூட்டுக் களவாணிகள் போன்று மனுஷனை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டிருக்கிற இவர்களது கைங்கர்யம் தாங்கலைப்பா  ரகம் ...

என்னவோ நாட்டை திருத்தறேன் பேர்வழி என்று இருக்கறவனை கொடஞ்சு எடுத்துட்டாங்க..
தெளிவில்லாத பாடல்கள்.. , எரிச்சலூட்டும் இரைச்சல் பின்னணி இசை. 

டபுள் ஆக்ட் விஜய் .. எதற்கு டபுள், எப்டி டபுள் என்பவை எல்லாம் அன்றைய எம்ஜியார் சிவாஜி படங்களில் தான் விளக்கியாக வேண்டும்.. இங்கெல்லாம் அது ஹ்ம் ஹ்ம் ... 

ஒருத்தர் பரம சாதுவாம், படிப்பாளியாம்.. இன்னொருத்தர், ஜெயில் கைதியாம், ஆனால் அந்தப் படிப்பாளி விஜய்க்கு பதிலாக வந்து கச்சை கட்டிக் கொண்டு அசத்துகிறாராம்.. 

படம் நெடுக அத்தனை விவசாய வயோதிகர்கள்.., அவர்களது அஹிம்சைப் போராட்டங்கள், அரசாங்கத்தை திருப்புவதற்கான தற்கொலைகள்.. 
விவசாயிகளின் அன்றாட அல்லல்களை, மேற்கொண்டு நாட்டில் விவசாயத்தை நிலைநிறுத்த வேண்டுமென்கிற அதி தீவிரப் பிரச்சாரமாக இந்தப் படம் பிரதிபலித்துக் காண்பிக்க வேண்டுமென்று மிகமிக மெனக்கெட்டு இருக்கிற முருகதாஸ் குழுவுக்கு பாராட்டுக்க…