Friday, July 31, 2009

இம்சை இல்லாத இசை

காலை வணக்கம் ..

மிகவும் நான் விரும்பிக்கேட்பது அன்று முதல் இன்று வரை இளையராஜாவின் பின்னணி இசைகளையும் அவர் புனைந்த பாடல்களையுமே.

மற்றவற்றை கேட்பதில்லை என்றில்லை, ராஜாவினுடையது போல ஆழ்ந்து மனமுருக நானே என்னில் கரைந்து விடுமளவு ஒன்றிப்போய் கேட்கமுடிவதில்லை.

ஓர் காட்சிக்குரிய அனைத்த வீரியங்களையும் தன் இசையில் முன் நிறுத்துகிற வள்ளன்மை வேறெந்த இசை புனைபவர்களுக்கும் கிடையாதென்பது என் அனுமானம். இன்றைக்கும் காகிசட்டையில் "பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள" கேட்டுப்பாருங்கள். இன்றைய புதுப்பாடல்களின் பலவீனங்கள் நமக்கு நன்கு புரிபடும். இந்த ஒரு பாடல் உதாரணத்திற்கு சட்டென்று தோன்றிய பாடல் தான். ராஜாவின் அனைத்து பாடல்களும் இதே பிரமாத தன்மையில் தான் வைரமாக ஜொலிக்கிற ஆற்றல் கொண்டவையே.

நான் ரஹ்மானின் ,ஹாரிஸ் ஜெயராஜின் ,எதிர்ப்பாளன் அல்ல. சமயங்களில் அவர்களது விரல் விட்டு எண்ணக்கூடிய சிலவற்றையும் ரசிப்பதுண்டு.

ராஜாவின் வாரிசுகளான யுவனோ , கார்த்திக்ராஜாவோ கூட இன்னும் இளையராஜாவின் நேர்த்திகளை தொடவில்லை என்பது நிதர்சனம்.

நான் ரசிகன் மாத்திரமே. எதையும் விமர்சிக்கத் துணியும் அளவு புத்திசாலி அல்ல. என் ரசனையின் வெளிப்பாடு விமர்சன சாயலில் அமைந்து விடுவதை தவிர்க்கமுடிவதில்லை.

மறுபடி சந்திப்போம் ...

சுந்தரவடிவேலு..... அன்புடன்.

கிணற்றுத்தவளை நான்.

நான் ஓர் குளியலறை பாடகன். என் போக்கில் பாடுகையில் தேர்ந்த பாடகனைக்காட்டிலும் கூட சுத்த ஸ்வரங்களுடன் பாடக்கூடிய உணர்வினை நான் பெறுவேன். நான் மட்டுமே பெறுவேன். மற்றபடி அந்த எனது உணர்வு ஓர் கற்பனை, மற்றும் மாயை.
அதே போல என்னை ஜெயகாந்தனை காட்டிலும் அறிவுஜீவியான ஸ்ருஷ்டிகர்த்தா என்கிற நய்யாண்டித்தனமான அகம்பாவத்தில் எதையேனும் என் பாட்டுக்கு எழுதிக்கொண்டிருப்பேன். இன்று ப்ளோகில் எழுதுகிற ஓர் சூழல் ஏற்பட்டு விட்டதால் அந்த மாதிரி யான எனது சிறு பிள்ளைத்தன்மைகளை விட்டொழித்து விட விழைகிறேன்.

நன்றி,
சுந்தரவடிவேலு.

Tuesday, July 28, 2009

மதிப்பிற்குரிய அனைவருக்கும் ..
நான் சுந்தரவடிவேலு. இத்தனை நாட்கள் போஸ்ட் கமெண்ட் column த்தில் எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முற்பட்டேன். நானே எழுதி போஸ்ட் செய்வதற்கான new post/இல் எழுத வேண்டும் என்பதை இப்போது தான் நண்பர் விஜயஷங்கர் மூலம் தெரிந்து கொண்டேன். tecnical details க்கான எல்லா குழப்பங்களையும் அவரே தீர்த்து வைக்கிறார். மிகவும் நன்றி விஜி.
வரும் நாட்களில் நான் இங்கிருந்து எழுதுகிறேன்.
அன்பு சுந்தரவடிவேலு.

Monday, July 27, 2009

halo.
it is very ecstasy to hear about my followers.
welcoming me and my tamil is very enthusiastic.
i like to thank u all and i promise, i will convey my feelings into words.... on coming days.
always i will be thankful to my dear friend vijayashanker.
regards,
v.sundaravadivelu

Monday, July 6, 2009

halo vijayshanker,

thanks for yr introduction of a blog to me vijay.

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...