Skip to main content

Posts

Showing posts from February, 2015

பயணங்கள் முடிகிறது..

நம்முடைய அன்றாட பயணங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிற பேருந்துகளின் அவல நிலைமையை சற்றே இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்..

முதற்கண் அரசாங்க ரீதியாக செயல்படுகிற பேருந்துகள் குறித்து சிலவற்றை சொல்கிறேன்..
எந்தத் தொந்தரவும் இல்லாமல், ஸ்லைடிங் ஜன்னல் கதவுகள் இருந்து வந்தன.. அவரவர்கள் விருப்பங்களுக்கு ஏற்ப , அப்படியோ இப்படியோ நகர்த்திக் கொண்டு நிம்மதியாக இருந்தனர் பொதுமக்கள்.. ஆனால், இப்போது மேலிருந்து பனால் என்று இறங்குகிற கண்ணாடி விண்டோ.. குழந்தையின் கையோ விரல்களோ தப்பித் தவறி வைக்கப் படுமாயின் சுலபத்தில் துண்டு ஆகிவிடக் கூடும். சில ஜன்னல் கதவுகள் மிக அவசரமாக இறங்கி பெரும் சப்தம் நிகழ்த்தும்.. சில ஜன்னல்களோ, என்ன இழுத்தாலும் கீழே இறங்காது.. அதையும் மீறி, கீழே அப்பாடா என்று கொண்டு வந்தாலோ, மறுபடி காற்று வரத் திறக்க வேண்டுமாயின் பகீரதப் பிரயத்தனப் படவேண்டும்.. 3 பேர்கள் சேர்ந்து எப்படியோ மேலே ஏற்றி நிறுத்தினாலோ, அந்த லூப்பைப் போட ஒரு போராட்டம்...

ஒரு கோட்டரைக் கவிழ்த்துக்  கொண்டு உட்காருகிற கபோதிகளுக்கு இதெல்லாம் பிரச்சினை  இல்லை.. காற்று வந்தால் என்ன, எக்கேடு கேட்டால் என்ன.. அந்த லாகிரி மப…

அறிவு தவிர்..

பறக்கும் திராணி அற்றிருந்த 
அறியாமைச் சிறகுகளோடு 
நான் உச்சி சென்று 
குதித்திருக்கிறேன்.. 
வானம் தொட 
முயன்றிருக்கிறேன்.. 
அப்போதெல்லாம் 
காயங்களோ உடற்சேதாரமோ 
வலிகளோ நேர்ந்ததாக 
ஞாபகமில்லை.. 

இன்றைய முதிர்ந்த 
அறிவுச் சிறகுகளோடு 
மெல்ல நடந்தாலுமே கூட 
இடறுகின்றன கால்கள்.. 
காயங்களும் வலிகளும் 
கற்பனையில் வந்தே 
அதீத வலிகள் நிகழ்த்துகின்றன.. !

ஐந்தறிவு அஜாக்கிரதையோடு 
மின்சாரக் கம்பிகளிடையே கூட 
கண்ணாமூச்சி விளையாட 
சாத்தியப் பட்டிருக்கிறது.. 

இன்றைய பகுத்தறிவுகளும் 
ஜாக்கிரதை உணர்வுகளும்  
நான்கு பூட்டுக்களை 
வாசற்கதவுக்குப் போட்டும் கூட 
நடுவீட்டுக்குள் திருடன் வந்து 
கழுத்தில் கத்தி வைத்துவிட்ட 
பீதியுள் உறைந்து கிடக்க  
விழைகிறது.. !!

ஒருதலைராகம்

பரஸ்பர காதலைக் 
காட்டிலும் என் 
ஒருதலைக் காதல்
வீரியமென்று முழங்கிக் 
கதறுகிறேன் மெளனமாக.. !

பூங்கா நாற்காலியில் 
ஒற்றையாக உட்கார்ந்திருக்கிறேன்.. 
நீ வந்தால் பரவாயில்லையே 
என்று.. 

சாயங்காலம் கரைந்து போய் 
அந்தியின் வெளிச்சம் 
சுட ஆரம்பிக்கையில் 
என் தனிமை அழத் துவங்கிற்று.. !

குலுங்கி அழ நேர்கையில் 
எல்லாம் உனது மடி 
என் ஞாபகத்துக்கு வரும்.. 
அருகில் நீ இருந்திருக்கும் 
பட்சத்தில் அதிலே 
சாய்ந்து அழலாம் என்றும்  
என் பிடரி முடியை 
நெருடுகிற உன் விரல்களின் 
ஆறுதல் நர்த்தனங்களும் .. 

நீ அருகில் இருந்திருக்கும் 
பட்சத்தில் நான் 
அழுவதற்கான சந்தர்ப்பமே 
இல்லையே என்கிற 
சுரணை வருகிறது...!

-ஆனால் 
நீ அற்ற  இந்தத் 
தருணம் .. 
எனக்கந்த சந்தர்ப்பத்தை 
அளித்துள்ளது.. 
ஆகவே, அந்தப் பூங்கா 
நாற்காலியில் குப்புறக் 
கவிழ்ந்து குமுறிக்  
கதறுகிறேன்.. 

நேரம் முடிந்தது 
என்று சொல்லக் 
காத்திருக்கிறான் 
பூங்கா காவலாளி.. 
அதுவும் போக, 
நான் அழுது முடிக்கட்டும் 
என்றும் அவன் 
காத்திருப்பதாகவே 
எனக்குத் தோன்றியது.. !!

பரஸ்பர காதலைக் 
காட்டிலும் என் 
ஒருதலைக் காதல்
வீரியமென்று முழங்கிக் 
கதறுகிறேன் மெளனமாக.. !

பொய்களை எல்லாம் 
மௌனமாகத் தான் 
முழங்கியாக வே…

கழியாத பழையன ..

உனது முகம் 
கூட எனக்கு 
தெளிவான ஞாபகத்தில் 
இல்லை.. 

ஆனால் உன்னைக் 
குறித்தான ஏக்கம் 
அதே அடர்த்தியில் 
இன்னும் என்னில்.. 

மறுபடி உன்னை 
எங்கேனும் நான் 
பார்க்கும் பேறு கிட்டுமோ 
என்கிற தேடல் உண்டு 
என்னிடம்.. !

சாலைகளில் 
எதிர்ப்படுகிற சில 
பெண்களின் முகங்கள் 
உனது முகம் 
ஒத்தவையாக  உள்ளன..
அப்போது மட்டும் 
உன் முகம் உடனே 
எனது இதயத்தைப் 
பிய்த்தெறிந்து வெளிவருகிறது.. 

உன்னை அன்று 
பின்தொடர்ந்தது போன்று  
உன் மாதிரி பெண்களையும் 
இன்று பின்தொடர  நேர்கிறது.. 

அவை 
மலரும் நினைவுகளுக்காக 
மட்டுமே அன்றி வேறெதற்கும் 
அன்று.. !!

எனது சூழல் புரியாத  
அவர்கள்  என்னை 
ஒரு களவாணி போன்று  
கருதி  துரிதமாகிறார்கள் ..

எனக்கது வேதனையளிக்கிறது..
நீயே அவ்விதம் 
புறக்கணிப்பது போன்று  
அழுகை முட்டுகிறது.. !!

ராமராஜனும் ரஜினிகாந்தும் ..

மாநில முதலமைச்சராக நாற்காலியில் உட்காருகையில் தமிழக மக்களுக்கு என்னென்ன செய்து சாதிக்கலாம் என்கிற நீண்ட பட்டியல் நிச்சயம் ராமராஜன் வசம் இருந்திருக்கக் கூடும்.. கரகாட்டக்காரன் பட்டிதொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய அந்தக் காலகட்டங்களில்..
ஆனால் காலமோ மக்களோ அதற்கொரு சாசுவதத்தை அவருக்கு அளிக்கவில்லை.. அடுத்த MGR கனவுகளில் ராமராஜன் மிதந்து கொண்டிருந்தார்.. ஆனால் அடுத்து அடுத்து வந்த படங்கள் ரா.ரா வுக்கு பெரும் ஆப்புகளாக அமைந்தன.. தங்கக் கனவுகள் துகள்களாகிப் பறந்தன.
இப்போது அந்தத் துகள்களும் வெறும் தூசிகளாகி... மூக்கிலேறி 'அண்ணன்' தும்மிக் கொண்டிருக்கிறார்.......

படத்துக்கு படம் 'பஞ்ச்' டயலாக் பேசி ரசிகர்களை, பிற மக்களை இம்சித்து வந்த நம்ம ரஜினிக்கு இப்ப டோட்டலாவே ஆப்பு என்பது போல தான் அவரும் உணர்கிறார், மக்களும் உணர்கின்றனர்..
தன்னோட கடைசிப் படமா எந்திரனை அறிவிச்சு அழகா ஒரு மெகா ஹிட் கொடுத்த திருப்தியோட தன்னோட திரை உலக வாழ்வில் இருந்து விலகி, அரசியலில் தடம் பதித்திருந்தால் ரஜினியின் தீர்க்க தரிசனத்தை மெச்சலாம்.. ஆனா பாருங்க.. 3 ன்னு ஒரு 3 பட்டை நாமம் சார்த்துன மாதிரி ஒரு ப…

அனேகன்

அனேகன் .. பார்த்தேன்.
இதுவரைக்கும் வழக்கிலே கேள்விப் படாத வார்த்தை.. அகராதியில் பிடித்திருப்பார்கள் போல.. நான், அநேகமாக எதற்காகவும் அகராதியைப் புரட்டுவதில்லை.. , அதுவும் குறிப்பாக தமிழகராதி எனக்கு மிக அந்நியம் .. !!

நாஸ்திகனின் பக்தி..

சுவாமியைப் பிரார்த்திப்பதில்
என்னிடம் உண்மையில்லை..
அவ்வப்போது
சுவாமியை நிந்திப்பதில் கூட
தைரியமில்லை..

எதிலேனும் தோல்வி தழுவுகையில்
காரணம் சுவாமி
என்று கூப்பாடு போடுகிற நான்
எதையேனும் வென்றெடுக்கையில்
எனது திறன் என்று
மார் தட்டிப் புளகிக்கிறேன்..

சுவாமிக்கு ஆராதனை நடக்கையில்
குழந்தையின் பிஞ்சுக் கரங்களைக் கூப்பி
கர்ப்பக்கிரகம் பார்த்துக் கும்பிடச்
சொல்லி அறிவுறுத்துகிறாள் தாய்..
நானோ
பிரார்த்தனையின் போது
எவளது முகம்
மிளிர்கிறதென்று
எதிர்வரிசையை நோட்டமிடுகிறேன்.. !!

சுவாமி கோபிப்பாரோ என்கிற
பயங்களும் சந்தேகங்களும்  இருப்பினும்
என்னை மட்டும் மன்னித்து விடுகிற
உத்தேசம்  கடவுளுக்கு எப்போதும் உண்டென
நம்புவதுண்டு நான்..
நம்பிக்கை தானே வாழ்க்கை?

அர்ச்சகர் விநியோகித்த விபூதி குங்குமம்
எவள் நெற்றிக்கு அம்சம்
என்கிற எமது அடுத்த ஆராய்ச்சி
துவங்கி விடும்..

எனக்குப் பின்னாடி நிற்பவர்கள்
முன்னுக்கு என்னை
நகரச்சொல்லி துரிதப் படுத்துவர்..

என்னைத் தாண்டி நகரச் சொல்வேன்
பின்புற நபர்களை..

அடுத்த தீபாராதனைக்கு
புதிதாக வருகிற பெண்களை
நான் பார்த்தாக வேண்டி இருக்கிறது...!!


சம்பந்தமில்லாதவர்கள்..

தாயினிடத்து 
சிப்பிக்குள் முத்து போல 
ஆரோக்கியமாக 
பத்திரப் பட்டுக் கிடந்தோம்.. 

வெளி வந்த 
சில வருடங்களில்.. 

நோயெனும் 
தீவிரவாதியிடம் 
சிக்கிய பிணைக் கைதிகளாக 
மாறின நம் உடல்கள்.. !!

அல் -கொய்தா போன்ற 
ஆஸ்பத்திரிகளும் 
ஒசாமா பின்லேடன் போன்ற 
டாக்டர்களும் 
நோய்களின் தோழர்களே அன்றி 
ஆரோக்கியத்தின் பாதுகாவலர்களா 
என்ன??

வலி நிரம்பிய வாழ்க்கைகள் 
கைநழுவப் பார்த்தாலும் 
இறுகப் பற்றி வாழ முனைபவர்கள்
மனிதர்கள்..  
வலியற்ற மரணங்கள் 
ஆலிங்கணம் செய்ய வந்தாலும் 
புறந்தள்ளும் அவசரகதியில் தான் 
நம் அனிச்சை செயல்கள் அனைத்தும்....!!

குண்டுவைத்துத் தகர்க்கிற  
துர்க்குணம் நிரம்பியவன் 
கால்களைப் பற்றியேனும்  
வாழ்ந்து விடுமளவுக்கு 
இந்த வாழ்க்கை சுவாரஸ்யப் 
பட்டுப் போகிறது எல்லாருக்கும்.. 

நித்தரையினூடே இழைய வருகிற 
இயல்பான மரணத்தைக் கூட  
உடனடியாக அடையாளம் கண்டுணர்ந்து 
துப்புரவாக்கும் துரிதம் நம்மில்.. 

ஆனால் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் 
அற்று நம்மை அள்ளிப் போட்டுக் 
கொண்டு போய்  விடும் ஒரு எதிர்பாரா 
தருவாயில் மரணம்... 

"இஸ்மாயிலுக்குத்  தர வேண்டிய 
ஐம்பதாயிரம் ஆகட்டும் 
ஆறுமுகம் நமக்குத் தரவேண்டிய 
அறுபதாயிரம் ஆகட்டும் 
ஜோசப் மனைவி இசப…

"என்ன பொண்ணுடா இவ?"

முள்ளால் முள் எடுப்பது போன்று.. 
எமது உறக்கத்தைக் கலைத்தது 
அவளின் உறக்கம்.. 

பேருந்தின் நெடிய பயணம்.. 
ஆழ்ந்துறங்கிய வண்ணம் 
ஜன்னலோர இருக்கையில் நான்.. 

கண்டக்டரின் விசில் நமைச்சலிலோ 
டிரைவரின் திடீர் பிரேக்கிலோ 
கொடூரமாகக் கறைகிற ஸ்பீக்கர் முழக்கத்திலோ 
என் பொன்னுறக்கம் உதிர நேர்ந்தது.. 

நான் தூங்க ஆரம்பித்திருந்த சமயத்தில் 
உட்கார்ந்திருந்த வெற்றிலை பாக்குக் கிழவியே 
என் முந்தைய சீட்டில் இருந்திருக்கும் பட்சத்தில் 
எமது பேய்த் தூக்கம் மறுபடி தொடர்ந்திருக்கும்.. 
ஆனால், ஏதோ ஒரு நிறுத்தத்தில் கிழவி இறங்கிப் போய் 
அந்த இடத்தில் ஒரு  அமர்க்கள அழகி ஒருத்தி .. 
அதுவும் என்போலவே  உறங்கிக் கொண்டிருந்தாள் .. 
ஏதோ ஒரு நாராசாரத்திற்கு எனக்குத் தட்டிய  விழிப்பு 
அவளைத் தட்டவே இல்லை.. !!

தெளிவான அவளது உறக்கம் எனக்குள் சுவாரஸ்யம் ஏற்றி 
எமது உறக்கத்தை நமுத்துப் போகச்  செய்தது.. 
இனி நான் செத்தாலும்[?] தூங்கப் போவதில்லை 
என்கிற உத்திரவாதம் என்னாலேயே எனக்கு வழங்கப் பட்டது.. !

அவளது படுக்கையறை சம்பவம் .. சுலபத்தில் 
அதனை அருகாமையில் தரிசிக்க நேர்ந்ததில்  
என்னை மூர்ச்சையாக்கும் முஸ்தீபில் என்னில் பெருமூச்சு.. 
"என்ன பொ…

தருணங்கள்..

அந்தப் பிரத்யேக 
இசை என்னை 
மிகவும் பாதித்ததற்கான 
காரணி 
நீ மட்டுமே என்ற போதிலும் 
உனக்கும் அந்த 
இசைக்குமான தொடர்பை 
ஒரு சாவகாசத் தருவாயில் 
நான் யோசிக்கையில் 
மகத்தான ஓர் மாயையில் 
மனது பிடிபட்டுக் கிடப்பது 
எனக்குப் புரிபடுகிறது.. !!

எதையேனும் எதனோடாவது 
தொடர்புப் படுத்திப் பார்க்கிற 
கற்பனைப் பிரவாகம் 
ஒருவகை லாகிரி வஸ்து...!

உயர்ந்த ரக அந்த 
இசைக் கோவையில் 
உன் முகமும் அதன் 
புன்னகை உட்பட்ட 
இன்னபிற வகையறா 
உணர்வுக் கிளர்வுகளும்.. 
--அவைபோக 
உமது உடல்மொழிகளும் 
மிக இயல்பாகவே 
இழைந்து கொண்டது  
அப்படி ஒன்றும் 
முரண்பட்டதாகவோ 
புறக்கணிக்கப் பட 
வேண்டியதாகவோ 
தோன்றவில்லை 
மற்றுமொரு சாவகாசத் 
தருவாயில்....!!