Saturday, February 7, 2015

தருணங்கள்..

ந்தப் பிரத்யேக 
இசை என்னை 
மிகவும் பாதித்ததற்கான 
காரணி 
நீ மட்டுமே என்ற போதிலும் 
உனக்கும் அந்த 
இசைக்குமான தொடர்பை 
ஒரு சாவகாசத் தருவாயில் 
நான் யோசிக்கையில் 
மகத்தான ஓர் மாயையில் 
மனது பிடிபட்டுக் கிடப்பது 
எனக்குப் புரிபடுகிறது.. !!

தையேனும் எதனோடாவது 
தொடர்புப் படுத்திப் பார்க்கிற 
கற்பனைப் பிரவாகம் 
ஒருவகை லாகிரி வஸ்து...!

யர்ந்த ரக அந்த 
இசைக் கோவையில் 
உன் முகமும் அதன் 
புன்னகை உட்பட்ட 
இன்னபிற வகையறா 
உணர்வுக் கிளர்வுகளும்.. 
--அவைபோக 
உமது உடல்மொழிகளும் 
மிக இயல்பாகவே 
இழைந்து கொண்டது  
அப்படி ஒன்றும் 
முரண்பட்டதாகவோ 
புறக்கணிக்கப் பட 
வேண்டியதாகவோ 
தோன்றவில்லை 
மற்றுமொரு சாவகாசத் 
தருவாயில்....!!

2 comments:

  1. வாசித்தமைக்கும் விமரிசித்தமைக்கும் மிக்க நன்றி சார்.....

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...