Skip to main content

Posts

Showing posts from March, 2013

பரதேசி விமரிசனத்தில் விட்டுப் போன முக்கிய பத்தி...

பொருட்களையும் , இடங்களையும் இன்னபிற அக்றிணை விஷயங்களையும் முன்னிறுத்தி பழமையை, அதன் பாரம்பரியங்களை திரையில் காட்சிகளாக மிளிர வைப்பதென்பது -- கிஞ்சிற்று மெனக்கெட்டால் - ராமநாராயணனே-- கூட கொணர்ந்து விடுவது சாத்தியப் பட்டுவிடும்.., ஆனால், இன்றைய காலகட்டங்களில், இன்றைய நாகரீகங்களோடு உழல்கிற அவ்வளவு மனிதர்களை வைத்து அந்நாட்களின் தன்மையோடு, அவர்களது முகங்களில் அவர்களது நடவடிக்கைகளில் பிரதிபலிக்கச் செய்திருக்கிற ஒப்பனைக் கலைஞர்கள் ஆகட்டும், ஆடை வடிவமைப்பாளர்கள் ஆகட்டும் ... இவர்களுக்கெல்லாம் ஓர் அற்புத தளமமைத்துக் கொடுத்த டைரக்டர் திரு.பாலா ஆகட்டும் .. எல்லாருமே இறைவனின் தூதர்கள் போன்றே புரிபடுகிறார்கள்...


நெனச்சத எழுதறேன். -2- [பரதேசி சினிமா விமரிசனம்]

பரதேசி பார்க்க நேர்ந்தது.. அந்த ஆரம்ப கட்டங்களில் பாலா காட்டுகிற 1939 ஆம் வருடத்திய சாலூர் என்கிற பெயரிட்ட கிராமம், வெள்ளந்திகளின் கூடாரமாக இருக்கிறது.. அன்று வாழ்ந்து வந்த மக்கள் எல்லாருமே எங்குமே அப்படித்தானோ?
பாரதிராஜா காண்பிப்பது தான் கிராமம் என்றிருந்தவனுக்கு பாலா காண்பிக்கிற இந்த கிராமம் இன்னும் ஆழ்ந்து ஊடுருவுகிறது மனசை..

நெனச்சத எழுதறேன்..[ஒன்று]

தொடர்ந்து ஒரு தொடர்கதை போல எதையாவது எழுத வேண்டுமென்று ஒவ்வொரு முறையும் ஆசை வருகிறதெனிலும் , நடைமுறை சாத்தியம் என்பது எவ்வளவு கடினம் என்பதை என்னால் உணர முடியக் காரணம் நான் உண்மையாகவே ஓர் இயல்பான எழுத்தாளனில்லை...

இயல்பான எழுத்தாளன் இவ்வாறெல்லாம் பிதற்றாமல் தனது கதைகளை, கருத்துக்களை சொற்றொடர் பிசகாமல் செவ்வனே எழுதிக் குவிப்பான்.. சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், கல்கி, அகிலன், புதுமைப்பித்தன், .. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இயல்பான எழுத்தாளர்களை.. ஆனால் அப்படி ஆக ஆசைப் படுகிற என் போன்ற ஏராள அமெச்சூர் எழுத்தாளர்கள் அதீதம் உள்ளனர்.. நாங்கள் பார்த்து குவிந்தோமேயானால் நாடு தாங்காது..

நிஜங்களின் நிழல்கள்...

காற்றும் வெளிச்சமும்
வருவதற்கென
கட்டப் பட்ட ஜன்னல்கள்
காறித் துப்பவும்
வாயைக் கொப்புளிக்கவும்
உபயோகத்துக்கு
மாறுவது போல..

சாமி சிலைக்கென
வெட்டப் பட்ட பாறைகள்
சில சிதைவுகள்
காரணமாக
படிக்கட்டுக்களாக
பரிணாம வளர்ச்சி[?]
கண்டன...

கோரஸ் பாட வந்து
பிரபலப் பின்னணிப்
பாடகனாகிற வாய்ப்பு..
சூப்பர் ஸ்டார்
ஆகிற கனவில் வந்து
குத்தாட்ட கும்பலில் கூட
 இடம்பெறக் காத்திருப்பது..

வழி நெடுக
எத்தனை பிள்ளையார்
கோவில்கள் இருந்தாலும்,
பிரச்சினைகள்
புடைசூழ்கையில் மாத்திரமே
பிரார்த்திக்கக்
குவிகின்றன கைகள்..

பிரச்சினைகளுக்குப் பிரார்த்திக்க
பிள்ளையார்கள் தேவையில்லை..
தெருச் சொறி நாய்களைக்
கூட "காப்பாற்று பைரவா "
என்கிறது மனது..

எல்லா சூழ்நிலைகளுமே
மாறுதலுக்கு உட்பட்டதென்கிற
உத்திரவாதங்களோடு
நம்மோடு உலா
வந்துகொண்டிருக்கிறது..
மரணத்தைத் தவிர..!!


மனிதனின் மன அமைப்பு....

இந்த வாழ்க்கை பற்பல பரிமாணங்களில் எல்லாராலும் அனுசரிக்கப் படுகிறது.. ஒருவர் ஏற்கிற விதத்தில மற்றொருவர் ஏற்பதில்லை... அவர் அவர்களுக்கான அனுமானங்களோடு ஓர் பிரத்யேகமான சூழல் அனுபவப்படுகிறது..

உதாரணமாக  மலை வளைவுகளில் ரசனையோடு ஓர் டூ வீலரில் பயணிப்பவரும்  உண்டு... வெறுமனே  கடக்கப் பட்டால் போதும் என்கிற முஸ்தீபில் பயணிப்பவரும் உண்டு.. ரசனையோடு பயணிப்பவன் அந்த மலை முகடுகளையும் அங்கே அலைபாய்கிற முகில்களையும், அடர்ந்து படர்ந்திருக்கிற பசுமைவெளிகளையும் முழுதுமாக உள்வாங்கி தனது மனம் உடல் யாவும் அதில் உணர்கிற ஓர் மகோன்னத சிலிர்ப்பை உணர்ந்தவனாக இருக்கிறான்..
அதே சூழலில் அதே குளுமையில் வெறுமனே பாதை கடக்க மட்டும் அந்த டூ வீலர் இன்னொருவனுக்கு உபயோகமாகிறது...

இவ்விதமாக எல்லா விஷயங்களுமே ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதத்தில் புரிபடுகிற சமாச்சாரங்களாக உள்ளது..

ஆனால் ரசனைகளுக்கான அவகாசங்களும் உண்டு.. ஏதோ ஓர் அவசர தருவாயில், மனைவியோ மகளோ அம்மாவோ அப்பாவோ நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையாகி விடுகையில், சீதோஷ்ண நிலை என்ன ரம்மியமாக இருப்பினும் அவை குறித்த பிரக்ஞை மண்டையிலோ  மனதிலோ ஏறும் வாய்ப்பில்லை... அவர்களது …