Friday, March 15, 2013

நெனச்சத எழுதறேன்..[ஒன்று]

தொடர்ந்து ஒரு தொடர்கதை போல எதையாவது எழுத வேண்டுமென்று ஒவ்வொரு முறையும் ஆசை வருகிறதெனிலும் , நடைமுறை சாத்தியம் என்பது எவ்வளவு கடினம் என்பதை என்னால் உணர முடியக் காரணம் நான் உண்மையாகவே ஓர் இயல்பான எழுத்தாளனில்லை...

இயல்பான எழுத்தாளன் இவ்வாறெல்லாம் பிதற்றாமல் தனது கதைகளை, கருத்துக்களை சொற்றொடர் பிசகாமல் செவ்வனே எழுதிக் குவிப்பான்.. சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், கல்கி, அகிலன், புதுமைப்பித்தன், .. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இயல்பான எழுத்தாளர்களை.. ஆனால் அப்படி ஆக ஆசைப் படுகிற என் போன்ற ஏராள அமெச்சூர் எழுத்தாளர்கள் அதீதம் உள்ளனர்.. நாங்கள் பார்த்து குவிந்தோமேயானால் நாடு தாங்காது.. 

அவ்வபோது மதிக்கப் படுவதும் அங்கீகரிக்கப் படுவதும் எங்களுக்கும் நேர்கிற மின்சார தருணங்கள்....ஆனால், அனேக நேரங்களில், மிதிக்கப் படுவதும், எங்கள் கருத்துக்கள் எடுபடாமல் போவதும் அதன் நிமித்தமாக எங்களில் எழுகிற ஊற்றுப் போன்ற அவநம்பிக்கைகளும்.. "என்னங்கடா பொழப்பு இது?" என்கிற அவஸ்தைகளும் பல்பு பீஸ் போவது போன்ற தருணங்கள்.., மற்றும் மனதில் அமைதி [peace] பறிபோகிற தருணமும் கூட..

ஆனபோதிலும் இவ்விதப் பேரவஸ்தைகள் யாவும் ஓர் பிரத்யேக அனுபவத்துக்கு வந்து விடுகிறது.. ஆகவே, மிகவும் சுலபாகி விடுகிறோம்.. மேற்கொண்டு கெடுகிற மானங்களை சுரணையே இல்லாமல் கொண்டாடி விட முடிகிறது..

[இன்னும் நெனச்சத சொல்லப் போறேன்]

1 comment:

  1. சில உண்மைகள்...

    சலிப்பில்லாமல் தொடருங்கள்....

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...