Skip to main content

Posts

Showing posts from June, 2014

பெண்

2 வீலர் டிரைவ் தெரிந்த பெண் எதன் நிமித்தமோ ஓரமாக ஒதுங்கி நின்று மொபைல் பேசுவதைப் பார்க்கையில்..
பார்க்கிற எல்லாருக்குமே அது தவறாகப் படுவது துரதிர்ஷ்டமே..

கால் விரல்களில் மிஞ்சியும் கழுத்தில் மஞ்சக் கயிறும் இருந்தால், அவள் பேசுவது கள்ளக் காதலனோடு..
இவை எதுவும் இல்லை எனில் அவள் பேசுவது ஏதோ ஒரு பயலோடு..
இன்னும் அவள் சிரித்துக் கொண்டு பேசினால், அது இன்னும் சந்தேகமும் பொறாமையும் கிளப்புகிற சமாச்சாரங்கள் ..

புருஷனோடு குழந்தைகளோடு தோழிகளோடு ஒரு பெண் சிரித்துக் கொண்டு மொபைலில் பேசக் கூடாதா?..

அவளுக்கு அக்கா தங்கச்சி இல்லையா. அண்ணன்தம்பி இல்லையா.. அட, அவ்ளோ ஏன் , அம்மா அப்பா இல்லையா?..

ஆனாலும் அவள் வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஒய்யாரமாக செல்லை காதில் செருகி உரையாடுவது க.காதலனோடு தான் என்கிற தீர்மானமான அனுமானம் தவிர்க்கமுடியாத கேவலமாக எல்லாரது மனங்களிலும் ஊடாடுவது எந்த வகை ?

இதே விதமாகத்தானே நமது வீட்டுப் பெண்கள் செய்தாலும் பிறர்க்குத் தோன்றக் கூடும்?..

பெண்களை இப்படி மையப் படுத்தி அவர்களை ஸ்கூட்டர் பழக்க விடாமல் இருந்தால், மார்கெட் போவதற்கும் ஸ்கூலில் இருந்து குழந்தைகளை அழைத்துவர  என்று எல்லா பிரச்…

நானும் அவளும் ...

[எனது டைரியில் 2 வருடங்கள் முன்னர் நான் எழுதி வைத்திருந்த சம்பவம் இது.. ]  

சற்றும் எதிர்பாரா அவஸ்தைகள் அவ்வப்போது..
நேற்று கோவிலொன்றில் ஸ்வாமி தரிசனத்திற்காக வரிசை கட்டி நின்றிருந்தார்கள்.. நானும்.. எனக்குப் பின்னே  நிறைவாண்டுக் கல்லூரி பயில்கிற ஓர் மாணவி... 
தரிசனம் நிகழ இன்னும் அரைமணி நேரம் உத்தேசமாக..
அதுவரைக்கும் எதற்காக மவுனம்?.. ஆகவே, அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன்.. அவளும் அதை மிக விரும்பி இருக்கவேண்டும்.. சட்டென்று எனது கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் துவங்கி.. பிறகு, அவளும் என்னோடு தனது கேள்விகளை வைக்க ... சுவாரஸ்யம் பற்றிக் கொண்டன.. 

பரஸ்பரம் நன்கு பகிர்ந்து கொள்ள முற்பட்டதும் எனக்கு அரை மணி நேரம் போதாத விஷயமாயிற்று... ஆனால் காலம் சதி செய்யத் துவங்கி விட்டது.. வரிசை துரிதமாக நகர்ந்தது.. அரைமணி அரை நொடிக்குள் தீர்ந்துவிடக் கூடுமோ??..

ஆனால் காலத்தின் அடுத்த சதி மிகவும் கோரமானது.. 
வரிசையை ஒழுங்கு படுத்துகிற ஒரு பனாதி , "ஐயோ.. பெண்களுக்கு தனி வரிசை... உன்னை யாரும்மா ஜென்ட்ஸ் கூட நிற்கச் சொன்னது?" என்றான்.. 
எனக்கு எல்லாம் உடனே கழன்று விழுவது போன்று ஆகிவிட்டது.. 
அந்தப் பெண்ணுமே…

முற்பிறவி ஞாபகங்கள்..

[வழக்கமாக ஏதேனும் புனைந்ததற்குப்  பிறகு ஓர் சித்திரத்தைத் தேடி இங்கே இணைப்பேன்.. இந்தக் கவிதை வழக்கத்துக்கு மாறானது.. இந்த சித்திரத்தைப் பார்த்த பிற்பாடு , இதனை மையப் படுத்தி ஓர் கவிதை புனைய அவா கொண்டு சித்தரித்ததாகும்.. இவ்விதம் செய்கையில் கருத்தில் ஓர் ஆழமின்மையும் , செயற்கைத் தன்மையும் குடிகொண்டு விடும் என்பது எமது எண்ணம்.. ]


பரஸ்பரம் குடும்ப 
நபர்கள் யாவருக்கும் 
யாசிப்பதே தொழில்... 
ஒவ்வொருவரும் 
வெவ்வேறு  பிராந்தியத்தில்...!

முருகன் மலைக் கோவில் 
அடிவாரத்தில் அவளது 
வயோதிகப் புருஷன்.. 

ரயில்வே ஸ்டேஷனில் 
அவள்.. 

பஸ் ஸ்டாண்டில் மூத்தவன்..

சின்னப் பையனும் 
அவனுடைய அக்காவும் 
தெருத் தெருவாக 
கயிற்றில் நடக்கிற வித்தை.. 

சமய சந்தர்ப்பங்களில் 
குடும்பமே குழாமாக ஒன்றி 
செயல்படுகிற தருணங்களும் 
வாய்ப்பதுண்டு.. 
அது அநேகமாக 
மழைக் காலங்களில்...!!

இது ஈனப் பிழைப்பு 
என்கிற பிரக்ஞை எவர்வசமும் 
இதுவரைக்கும் வரவில்லை.. 

கண்தெரியாத நபர்கள் 
ஊதுவத்தி விற்கிறார்கள்.. 
ஊசிபாசி விற்கிறார்கள்.. 
கால் ஊனப் பட்டவர்கள் கூட 
எதையேனும் பொருள் விற்று 
பிழைப்பு நடத்துகிறார்கள்.. 
அவர்களோடு இவர்கள் 
சிநேகிதமும் வைத்திருக்கிறார்கள். 
--அவ…

வன்மம் மனிதம் அன்று..

உணர்வுக் குழப்பங்கள் என்பன குடும்பங்கள் எங்கிலும் இயல்பாக ஊடுருவிக் கிடக்கிற சமாச்சாரம்...
சற்றும் எதிர்பாரா சம்பவங்களுக்கு மனஸ்தாபம்.... அவை நிமித்தமாக, பல வாரங்களாக மாதங்களாக .. ஏன் , வருடங்கள் என்று கூட அடர்த்தி கொண்டு விடும் இந்த மனஸ்தாபங்கள்.. ஆளாளுக்கு முகங்களைத் தவிர்த்து விடுதல், மற்றும் பேசுவதென்பதே மருந்துக்குக் கூடக் கிடையாது.. பரமவைரிகள் போன்று முறுக்கிக் கொண்டே..
பிற்பாடு ஓர் தருவாயில், மிக சகஜமாக பேச நேர்வது, .. "அட, இந்த அற்ப பிரச்னைக்கு இத்தனை காலம் நட்பை தள்ளிப் போட்டு விட்டோமே" என்கிற பரஸ்பர பகிர்தல்கள்..

இன்னொன்றும் இருக்கிறது.. "பெரிய பிரச்சினை வருவதற்கான எல்லா தகுதிகளும் இந்த சம்பவத்துக்கு உண்டு " என்கிற அனுமானத்தோடு அணுகப் படுகிற அந்த சம்பவம் மிக சாது போல சுலபத்தில் நடந்தேறி விடும்.. எதிர்பார்த்த எவ்வித கோர அனுபவங்களையும் நமக்குள் நிகழ்த்தாமல், வெறுமே மிக யதார்த்தமாக நழுவி விடக் கூடும்.. "வாவ்.. " என்று வியக்கக் கூடும் நாம்..
பரஸ்பர புரிதலில் அவ்விதம் நிகழ்ந்ததா அல்லது காலம் அவ்விதம் நிகழ்த்தியதா என்கிற இன்பக் குழப்பம் இருதரப்புக்கும்..
வ…

ஊட்டி மலர் கண்காட்சி

இன்று உதகை சென்று வந்தேன்... மலர் கண்காட்சியின் நிறைவு நாள் இன்று.. 2ஆம் நாளான நேற்று மழை சோ வென்று கொட்டித் தீர்த்ததாம்.... அதற்கான சுவடுகளாக புல்வெளி எங்கிலும் சகதி  நிரம்பி காணப் பட்டது...

அந்த அடர்ந்த பொட்டானிக்கல் கார்டன் எங்கிலும் வியாபித்திருந்த ஜனத்திரள் கண்கொள்ளா காட்சியாக படர்ந்து கிடந்தது. குதூகலக் குழந்தைகளின் கும்மாளக் குதியாட்டங்களும் பெரியவர்களின் உற்சாக அரட்டைகளும்.. இளசுகளின் பரஸ்பர சைட்டுகளும் .. யாவற்றையும் ஓர் தொண்டுக் கிழம் போல ஓர் ஓரமாக அந்த ஈரம் படர்ந்திருந்த புல்வெளியில் அமர்ந்தவண்ணம் கவனித்து சுகந்தமுணர்ந்தேன்..

நாம் கடந்து வந்த இளமை இத்தனை பொலிவாக இருந்ததில்லை.. அது ஓர் இனம்புரியா வெறுமையிலும், அற்பக் கனவுகள் கூட நிறைவேறாத கவலைகளிலும் .கழிந்தன.

புரிந்தோ புரியாமலோ அன்றைய காலகட்டங்களில் நம்முடைய பிரத்யேகமான ரசனைகள் மறுதலிக்கப் பட்டன.... ஆசை ஆசையாய் ஏதேனும் புனைந்து , பாராட்டப் பெறும்  என்கிற அனுமானத்தில் காண்பிக்கப் பட்ட போது சற்றும் எதிர்பாராமல் அனேக விஷயங்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகி, நம்முடைய கற்பனைத் திறனையே முடக்கிப் போட்டிருந்தன..

ஆனால் இன்றைக்கு எல்லாம் …

நம்பிக்கைவாதி..

சாதிக்காதவனின் 
சம்பாதிக்காதவனின் 
வலிகள் 
மிகுந்த துயரும் 
குற்ற உணர்வும் நிரம்பியவை.. 

அவன் தேடுகிற 
ஆறுதல் வார்த்தைகளும் 
தன்னம்பிக்கை தூண்டுகிற 
புத்தகங்களும் ஏராளம்.. 

அவனது வயதொத்தவர்களும் 
அவன் வயதில் பாதியே 
நிரம்பியவர்களும் 
ஈட்டுகிற 
பொருளும் செல்வமும் 
புகழும் இன்னபிற 
உயர் அடையாளங்களும் 
அவனில் ஓர் தாங்கொணா 
தடுமாற்றத்தை 
நிலைகொள்ளச் செய்வதை 
எக்காரணம் கொண்டும் 
தவிர்ப்பதற்கில்லை.. 

இவ்வளவு இம்சைகளை 
காலவளர்ச்சி அவனில் 
விதைக்கக்  கூடுமென்று 
அவன் கிஞ்சிற்றும் 
அனுமானித்தவனில்லை...!!

எதிர்பார்த்திருந்தால் கூட 
இந்த சூழல்களை சுலபமாக 
எதிர்கொண்டிருந்திருப்பான்.. 

மிகப் பெரும் விபத்தாக 
நேர்ந்தமையால் 
பிறப்பின் மீதும் 
தன்னைப் பிறப்பித்தவர்களின் 
மீதும் ஓர் இனம்புரியா 
காழ்ப்பை செருகி வைத்திருக்கிறான்.. 

ரயில்களின் பெயரையோ 
கிணறுகளின் பெயரையோ 
பாழாக்குகிற உத்தேசம் 
அவனுக்கு இல்லையாதலால் 
அவனது தற்கொலைகளுக்கு 
அவைகளை இழுக்க 
அவனுக்குப் பிடிக்கவில்லை.. .!!

ஜெயிப்பதற்கான வாய்ப்பு 
இன்னும் ஓயவில்லை 
என்கிற சிந்தனை அவனில் 
ஓர் வற்றா ஜீவா ஊற்று போல 
எப்போதும் இதயத்தின் ஒரு 
மூலையில் அவனில் 
குடிகொண்டுள்ளது.. 

அந்த நம்பிக்கையில் 
த…