இன்று உதகை சென்று வந்தேன்... மலர் கண்காட்சியின் நிறைவு நாள் இன்று.. 2ஆம் நாளான நேற்று மழை சோ வென்று கொட்டித் தீர்த்ததாம்.... அதற்கான சுவடுகளாக புல்வெளி எங்கிலும் சகதி நிரம்பி காணப் பட்டது...
அந்த அடர்ந்த பொட்டானிக்கல் கார்டன் எங்கிலும் வியாபித்திருந்த ஜனத்திரள் கண்கொள்ளா காட்சியாக படர்ந்து கிடந்தது. குதூகலக் குழந்தைகளின் கும்மாளக் குதியாட்டங்களும் பெரியவர்களின் உற்சாக அரட்டைகளும்.. இளசுகளின் பரஸ்பர சைட்டுகளும் .. யாவற்றையும் ஓர் தொண்டுக் கிழம் போல ஓர் ஓரமாக அந்த ஈரம் படர்ந்திருந்த புல்வெளியில் அமர்ந்தவண்ணம் கவனித்து சுகந்தமுணர்ந்தேன்..
நாம் கடந்து வந்த இளமை இத்தனை பொலிவாக இருந்ததில்லை.. அது ஓர் இனம்புரியா வெறுமையிலும், அற்பக் கனவுகள் கூட நிறைவேறாத கவலைகளிலும் .கழிந்தன.
புரிந்தோ புரியாமலோ அன்றைய காலகட்டங்களில் நம்முடைய பிரத்யேகமான ரசனைகள் மறுதலிக்கப் பட்டன.... ஆசை ஆசையாய் ஏதேனும் புனைந்து , பாராட்டப் பெறும் என்கிற அனுமானத்தில் காண்பிக்கப் பட்ட போது சற்றும் எதிர்பாராமல் அனேக விஷயங்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகி, நம்முடைய கற்பனைத் திறனையே முடக்கிப் போட்டிருந்தன..
ஆனால் இன்றைக்கு எல்லாம் தலைகீழ்.. குழந்தைகளின் யாதொரு கோரிக்கைகளும் பரிசீலிக்கப் படுகின்றன.. ஏற்றுக் கொள்ளப் பட்டு அங்கீகரிக்கப் பெறுகின்றன.. அவைகள் அந்தக் குழந்தைகளுக்கு ஓர் தாங்கொணா மகிழ்வை , மனநிறைவை அளித்து மேற்கொண்டு இன்னும் பல புதுமைகளைப் புகுத்துகிற திறன்களும் அதிகப் பிரசங்கங்களும் ஆக்கிரமிக்க ஏதுவாகின்றன..
ஓ .. நான் இந்த ஊட்டி தாவரவியல் பூங்கா அழகை வர்ணிக்க ஆரம்பித்து , நம்முடைய நாறிப் போன பிரச்சினைகளைக் கிளறி, மறுபடி மூக்கைப் பிடிக்க நேர்கின்றன.. மன்னிக்கவும்..
இந்தத் தாவரவியல் பூங்கா, சொர்க்கத்தின் உதாரணமாகப் புரிபடுகிறது.. ஒவ்வொரு முறை வருகையிலும்... கூடிக் குலவி ஆடிப் பாடித் திரிகிற இந்த மக்கள் குழாமை தரிசிப்பது என்னவோ எல்லாருமே சொர்க்கவாசிகள் போன்று எனக்குத் தோன்றும்..
[டிராப்டில் இருந்த இந்த எனது உதகைப் பயணப் பதிவை சற்று தாமதமாக பிளாகில் பதிவிறக்கம் செய்ய நேர்வது .. ஒருக்கால் அந்த சம்பவத்தின் சாரத்தைக் குறைத்துக் காண்பிக்க நேருமோ என்றோர் சந்தேகம் எனக்கு .]

வாழ்த்துக்கள்...
ReplyDelete