Skip to main content

Posts

Showing posts from February, 2016

மாயைகள்..

நாம் விரும்பி லயிக்கிற ஒன்றில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்கிற அதீத அவா மனசுள் பூத்தெழுந்து புத்துணர்வு நல்கி புளக்கிக்கச் செய்கிற இந்த மாதிரியான அனுபவங்கள் அரதப் பழையன . !
என்றாலுமே கூட ஒவ்வொரு முறை அவ்வித ஆவல் மனசுள் மிளிர்கையில், அந்த உணர்வே என்னவோ புத்தம்புதிது போன்று  நம்முள் கிளர்ந்தெழப் பெற்று ஒருவித வார்த்தை பிடிபடாமல் நழுவி விடுகிற அலாதி உணர்வாக வியாபிக்கக் கூடும்..

.. ஜாஸ் இசையில் லயிக்க நேர்கையில் எல்லாம் இப்படி லாவகமாக சாதுர்யமாக இந்த கித்தார் கருவியை நாமும் கற்று இதே அசத்தலோடு பிய்த்து உதற வேண்டுமென்கிற தீட்சண்யம் மேலோங்கி நெருப்பு போன்று ஜ்வாலை பரப்பி என்னுள் ஓர் சுகந்த இம்சையை நிரப்பும்.. 
அதே துரிதத்தில் திரும்பவும் மறைந்து பிற மாற்றுத் திறன்கள் குறித்த சிந்தனைகளில் புரளத் துவங்கும் குரங்கு மனம்.. 
அதுவுமற்று இதுவுமற்று எதுவுமற்று அனைத்தும் பஸ்பமாகும் என்பதை எமது தீர்க்க தரிசனம் அறியும் என்கிற போதிலும் அவ்வாறான "நிபுணத்துவ மாயை" யில் சற்றே கிடப்பது .. ஒருவித லாகிரி வஸ்துவில் தன் நிலை மறந்து கிடப்பதற்கு ஒப்பான ஒருவித போதை ஷணங்கள் .. 

சத்தியமாக நிபுணத்துவம் பெற்று சா…

வேற்றுமை..

மாடுகளை
கும்பலாக 
கோசாலைகளில் 
மட்டுமே 
பார்த்துப் பழகிய 
கண்களுக்கு .. 

பீஃப்  கடை 
அருகாமையில் 
பார்க்க நேர்கையில் 
சூன்யம் ஒன்று 
வந்து சுடத் தான் 
சுடுகிறது.. 

இந்தியத் தமிழர்களாகப் 
புலனாகிற 
கோசாலை மாடுகள்.. 
இலங்கைத் 
தமிழ் அகதிகளாகப் 
புரிபடுகிற 
பீப் கடை மாடுகள்..!!


காதலன் டைரியிலிருந்து

உன்னை ஸ்பரிசிப்பதற்கான வாய்ப்புக்கள் பன்முறை வழங்கப் பட்டுமே கூட ... தொடாமலிருப்பதே புனிதக் காதல் என்கிற முட்டாள் அனுமானத்தில் எமது பௌருஷம் பிதற்றிக் கிடந்த நாட்கள் அவை.... 

இன்றும்மைக் கண்களால் கூடக் காண்பதரிது என்கிற ஓர் சூழலைக் காலம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.... தீர்க்கதரிசி போன்று இதனை அன்றே நான் எதிர் நோக்கியிருந்தேன் என்பதே கொடுமையான உண்மை.. 

என்னை நீ மதித்ததே பெரிய புண்ணிய விஷயம் போன்று அரண்டு போய்க் கிடந்தேன்.. மற்றபடிக்கு உன்னைத் தொடுவதோ, உன் கைகளைப் பிடித்து முத்தங்கள் உதிர்ப்பதோ, பிற்பாடு அள்ளி அணைப்பதோ.. யாவும் எனது காதலுக்கு நான் செய்கிற பெரிய அபவாதம் போன்று தீர்மானம் மேற்கொண்டிருந்தேன்.. 

அருந்த நான் நீர் கேட்கையில் தம்ளரில் வந்து ஜலம் கொடுக்கையில் அதனை உமது விரல்கள் எனது விரல்கள் தீண்டா வண்ணம் மிகக் கவனமாக வாங்கி அருந்திய அந்தக் காட்சிகள் இன்னும் எனது கண்கள் முன்பு  விரிந்து படர்கின்றது.. 

ஒருக்கால் தொடுவது அன்று நிகழ்ந்திருக்கும் பட்சத்தில் நீ எம்மைத் தவறாக கருதக்கூடும் என்று பயந்து நான் மன்னிப்புக் கூடக் கேட்கத் துணிந்திருப்பேன்... நல்ல வேளையாக அந்த அளவு எமது மடத்தனம் …

கஜா.. [2 பக்க கதை ]

1

நிச்சயம் இதை ஒரு பக்கத்துக்கு மேல் எழுதும் பட்சத்தில் எனக்கே அலுத்துவிடும் என்பதோடு படிக்கிற உங்களுக்கும் அதே அலுப்பு வரக்கூடும்.. 
ஆகவே 2ஆம் பக்கம் போகிற வேலையே வைக்காமல் ஒரே பக்கத்தில் முடிக்கிற சாமர்த்தியத்தை கையாள வேண்டிய தார்மீகக் கடமையில் ஒரு பிரபல எழுத்தாளன் என்கிற முறையில் நான் இங்கே செயல்படப் போகிறேன்.. 

பக்கத்து வீட்டு சங்கரனிடம் கெஞ்சிக் கூத்தாடி நம்ம ஒருபக்க ஹீரோ கஜேந்திரன் ஓசி மொபெட் வாங்கி ஒன்றேகால் கி.மீ இருக்கிற கோதை டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு ஜஸ்ட் மனைவி சொல்லிவிட்ட 4 அல்லது 5 சாமான்கள் வாங்கிவர வேண்டி ஆயிற்று.. 

அதற்கு முன்னர் நம்ம கஜாவின் சுபாவங்களை இங்கே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது கதாசிரியன் என்கிற முறையில் எமது கடமையாகும்.. 
கஜா தனது மொபெடை செர்விஸ் விட்டதன் நிமித்தமே சங்கரனிடம் இரவல் வாங்க நேர்ந்தது.. மற்றபடிக்கு நம்ம ஹீரோ மொபெடுக்கு கூட அருகதை அற்றவனாக நீங்கள் கருதிவிடக் கூடாது.. 
சென்ற சில மாதங்கள் முன்னர் சங்கரன் இவ்வாறே செர்வீசுக்கு விட்டதன் நிமித்தம்  கஜாவிடம் ஒரு பத்து நிமிடங்கள் அவசர ஜோலிக்கு மொபெட் கேட்டதும் உடனே "ஐயோ சங்கரா.. ரியல்லி சாரி.. ஒரு அவச…

6ஆம் அறிவுத் தொந்தரவுகள்..

சோற்றுப் பருக்கைகள்
காலில்  மிதிபடுகையில் கூட 
என்னவோ மலம் 
மிதித்துவிட்ட துரிதகதியில் 
ஓடிச்சென்று கால்களைக் 
கழுவுகிறோம்.. 

என்றேனும் மலத்தினை 
மிதித்து விட நேர்கையிலும் கூட 
அது ஒரு மனிதனின் 
செரிமானமான உணவென்கிற 
அறிவியலை ஏற்க மறுத்து 
அசூயை கொண்டு 
கழுவ ஓடுகிறோம்.. 

எந்த உயிரினங்களுக்கும் 
பரஸ்பரம் 
அவைகளின் மலம் 
அருவருப்பு ஏற்றுவதில்லை.. 
மனித இனத்துக்கு மாத்திரம் 
தான் இன்னொருவனின் 
உணவு முறைகள் கூட 
அவன்  உண்ணும் 
முறைகள் கூட 
குமட்டல் ஏற்படுத்தி விடுகின்றன.. !!

கடவுளும் நானும்..

என்னை வசீகரித்து 
மூர்ச்சையாக்கினாய். 
கோவிலுக்கு வந்த பெண்களில் 
கவிதை புனைவதற்கான
அனைத்து யோக்யதைகளையும் 
புதைத்து வைத்திருந்தன
உமது அவயவங்கள் மட்டுமே.. !

கர்ப்பகிரக சுவாமி அலங்காரம் 
எமது பிரக்ஞையில் ஏனோ 
குவியவே இல்லை.. 
நமஸ்கரிக்கிற உமது 
கைவிரல்களும் 
பிரார்த்தனையில் முனகும் 
உமது உதடுகளுமே
திரையிடப் படாத 
தரிசனமாயிற்று எனக்கு.. !

உம்மைப் பார்த்துப்
பிரார்த்திக்க வேண்டிய தேவை 
சுவாமிக்கு இருந்தது போலவே 
எனக்குத் தோன்றியது.. 
ஆனால் நீ சுவாமி பார்த்து
உருகிப் பிரார்த்தித்தது 
முரணாய்ப் புரிந்தது எனக்கு.. !!

ஆனால் சுவாமியிடம் 
பிரார்த்தித்தே தீரவேண்டிய 
பல இன்னல்களில் மூழ்கிக் 
கிடக்கிற நான் 
சுவாமி மறந்து உன்னில் 
லயித்து உன்னைப் 
பிரார்த்தித்தமைக்காக 
நிச்சயம் சுவாமி 
என்னை தண்டிக்க 
வாய்ப்பில்லை  
என்கிற இந்த 
உத்திரவாதத்துக்குக் காரணம் ..

என்னை கவனிக்காமல்  
என்போலவே சுவாமியும் 
"உன்னை மட்டுமே 
தரிசித்துக் 
கொண்டிருந்திருக்கக்  கூடும் "
 என்பதாலுமே  கூட 
இருந்திருக்கலாம்?..!!

[--இன்னொன்றும் கூட எனக்குத் தோன்றுகிறது.. தன்னைத் தவிர்த்து உன்னைப் பார்த்தமைக்காக ஸ்வாமி  எம்மை தண்டிப்பதாவது?.. இன்னும் கூட சேர்த்து …

பிதற்றல்களுக்கு மன்னிக்கவும்..

மகோன்னத உணர்வைக் கிளரச் செய்கிற எவையாயினும், அவைகளை ரகசியமாக்கி அனுபவிக்கிற போக்கு சிலருக்கு சாசுவதமோ என்னவோ அறியேன், என்னைப் பொருத்தமட்டில் அதனை ஏதோ ஒரு வகையில் நமது அருகாமையில் உள்ள சொந்தபந்தங்களுக்கு உற்றார் உறவினர்களுக்கு ஆப்த நண்பர்களுக்கு மனைவி குழந்தைகளுக்கு என்று பகிர்ந்தளிக்கப் பரிதவிப்பவன் நான்.. 

ஆனால், நாம் நினைப்பது போன்று அது அத்தனை சுலபத்தில் வாய்த்து விடுகிற சமாச்சாரமும் அல்ல.. 
உதாரணமாக ஒரு சாரம் ததும்பும் இசை.. பியானோ கட்டைகளைப் பிய்த்து உதறுகின்றன விரல்கள்.. அதனூடே லாவகமாக வந்து இழைகிற சேக்ஸோபோன்.. பிற்பாடு மெல்லத் தவழ்ந்து பின்புறமாக வருகிற மெட்டல் ஃப்ளூட் .. இவைகளோடெல்லாம் வந்து தனக்கும் ஒரு இடம் வேண்டுமென்று உரிமையோடு இடம் பிடித்துக் கொள்கிற வெஸ்டன் வயலின்.. 
ஒரு பீத்தொவனையோ , பாக்கையோ , மொஜார்ட்டையோ கேட்டுப் பழகிய எல்லாருக்குமே இந்த ஒத்தடம் நன்கு புரியும்.. மனச் சுளுக்கையும் உடற்சுளுக்கையும் ஒருங்கே  அகற்றி ஆழ் நித்திரைக்குள் பயணிக்க வைக்கிற  அத்தனை மேம்பாடுகளும்  அடங்கியுள்ளன இந்தக் கலவைகளுள்.. !

ஜாஜ்வல்யம் ததும்பும் ஜாஸ் இசையை கேட்ட வண்ணம் தெருக்களில் நடை இடுதல் எ…