Skip to main content

Posts

Showing posts from June, 2016

காதல் பூதம்

உன்னைக் குளிப்பாட்டுகிற 
தண்ணீர்...
நீ உண்ணச் சமைத்துத் 
தருகிற நெருப்பு.. 
நீ சுவாசிக்க உன் 
நாசிக்கு உதவுகிற காற்று.. 
நீ உலவுமிடமெல்லாம் 
உன்னை நிரப்புகிற -
உன்னில் நிரம்பிக் கொள்கிற 
ஆகாயம்.. 
எங்கு நீ சென்றாலும் 
உன்னைத் தாங்கிப் பிடிக்கிற 
நிலம்.. 

-எனக்கும் இதே 
பஞ்சபூதங்கள் தாம் 
எவ்விதப் பாரபட்சங்களும் அற்று 
இந்தப் பிரபஞ்சத்தில் 
நியமிக்கப் பட்டுள்ளன.. 
என்றான போதிலும் --

உமக்கு நியமிக்கப் பெற்றுள்ளவை 
மிகப் புனிதம் போன்றும் 
என்னிலிருந்து வேறுபட்டவை 
போன்றும் 
அடாத மாயையைத் 
திணித்து வைத்திருக்கிறது 
இந்தக் காலமென்ற 
காதல் பூதம்.. !!

நிபுணர்கள்..

எதிலும் நிபுணத்துவம் 
அற்று .. நான்.. !
இந்த வெறுமை 
என்னில் சீழ் 
கோர்த்த வலி 
நிகழ்த்துகிறது.. !!

சட்டைக்கு பொத்தான்
வைப்பது, ஹெம்மிங் செய்வது 
போன்ற அற்ப வேலை 
முதல் அனைத்தும் 
தகராறு எனக்கு.. !

எதனை நான் 
மெனக்கெட்டு செய்தாலும் 
நொட்டை சொல்லவென்று 
அதற்கான நபர்கள் 
வாரிக் கொட்டியது போன்று 
குவிந்து கிடக்கின்றனர்.. 

நான் சுவாசிப்பதைக் கூட 
யோகா வல்லுநர், 
'அப்படி இல்லை... இப்படி'
என்று இழுத்து வாங்குகிறார் 
மூச்சினை.. !

நடைப் பயிற்சியில் 
நேர்த்தி இல்லை .. 
'இப்படி நீளமா 
அதற்கும் இதற்குமா 
கைகளை வீசி 
கால்களை நேர்ப்படுத்தி
வேகமாய் நடக்கணும்'
என்கிறார் சிறந்து 
விளங்கி நடப்பவர்.. 

இயல்பாக நம்மோடு 
இழைந்து கிடக்கிற 
நடையும் மூச்சும் கூட 
இன்னும் நன்கு 
பயிற்றுவிக்கப் பெறவேண்டிய 
இழி தகுதியில் இருப்பதை 
எங்கு போய் முறையிட?

நான் செத்துப் 
போனாலும் கூட. 
'இப்டி சாகக் கூடாது பாஸ்.. 
அந்த மாதிரி அழகா .. போறதே 
புரியாம..!' 
என்றொரு மரண நிபுணன் 
அறிவுறுத்தக் கூடும்.. 
குறைந்தபட்சம் 
அந்தக் 'குறைபாடை' 
கேட்க மட்டுமாவது 
நல்ல வேளையாக . 
நான் இருக்கமாட்டேன்.. ஹிஹி..!!

நவீனத்துவத்தின் பின்னடைவு .. ?..

வள்ளுவனிடம் பாரதியிடம் கணினிகள் இருந்திருக்கும் பட்சத்தில், குறள்கள் .. கவிதைகள் யாவும் பற்பல பாகங்கள் கடந்து இந்த வாழ்வு இன்னும் அடர்த்தி கண்டிருக்கும்.. 
நம்மிடம்  பற்பல கணினிகள் இருந்துமே கூட .. அரைப் பக்கம் சுலபமாக நிரப்பிவிட முடியாத புதுக்கவிதைகள் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
.

மாம்பழமாம் மாம்பழம்..

2 மாம்பழங்கள் 
வாங்கிவந்து.. ஒன்றை 
கீற்றுப் போட்டு 
மூவரும் சுவைத்தோம்.. 
அதன் தேன்சுவை 
நாவில் நர்த்தனம் 
புரியவே... 
பிற்பாடு சாப்பிடலாம் 
என்று மிச்சம் 
வைத்திருந்த அடுத்த 
மாம்பழத்தையும் உடனடி 
கூறு போட ஆயத்தம் செய்கையில் --

முன்னர் அறுக்கப் பட்ட 
அந்தக் கத்தியில் 
நொச நொச வென்ற 
சுவாமிக் கருப்பெறும்புகள் 
புடை சூழ்ந்திருந்தன..

ஆசைதீர அவைகள் 
உண்டு தீர்க்கட்டும் 
பிறகு கழுவி அடுத்த 
மாம்பழம் அரியலாம் 
என்ற எமது முடிவுக்கு 
எங்கள் பாப்பா 
அழத் துவங்கினாள் .. ! !

நாம் அனைவருமே "டைட்டானிக்" கப்பலில் தான்..

உலக அழகிஎன்பது  இந்த சாஸ்வதமற்ற உடலின் அடையாளம் கொண்டே....!
உயிர் அந்த அழகுடலை விட்டுப் பிரிந்த அடுத்த ஷணம் .. 
நாற்றம் ததும்ப வைக்கிற நுண்ணுயிர்கள் அங்கே தமது பணியை செவ்வனே துவங்கி விடும்.. !
உள்ளூர் கிழவியின் அதே கதியில் தான் உலக அழகியின் கதையும்.. 

வாழ்ந்து சாகிற மனிதர்களுக்கு மாத்திரமா இக்கதை பொருந்தும்?.. இல்லை.. , வாழ்ந்து மறைந்த தெய்வங்களின் உடற்கூறுகளும் இதே தன்மையில் தான் இயங்கி இருக்கக் கூடும்.. !

இதொன்றும் புதுவித கருத்தோ விளக்கமோ அன்று.. யாதொருவரும் மிக சுலப சிந்தனையில் அனுமானித்துவிட முடியும்.. 

அசாதரணமாகப் புரிபடுகிற இந்த வாழ்வு எத்தனை சாதாரண அம்சம் கொண்டுள்ளது என்று நினைக்கையில் பிறக்கிற அதே ஆச்சர்யம், .. சாதாரணமாகப் புரிபடுகிற இந்த வாழ்வு எத்தனை அசாதாரண அம்சம் கொண்டுள்ளது என்றும் தோன்றுகிறது.. எப்படிப் புரட்டிப் போட்டாலும் இந்த வாழ்வின் வீச்சு மற்றும்  இந்த மரணத்தின் வீச்சு என்பது ஒன்றோடொன்று பலமாகவும் பலவீனமாகவும் புரிபடுவது பெரும் வியப்பு.. !!

எங்கள் திருப்பூரில் அன்றெல்லாம் பிரபலமாக இருந்தது ஜோதி திரையரங்கின் வெங்காய போண்டா.. காலைக் காட்சி சென்று 2 போண்டாக்களை வாங்கி அந்த …

இறைவி ..................[விமரிசன முயற்சி?]..............

நம்முடைய கிஞ்சிற்று அறிவை வைத்துக் கொண்டு இந்தப் படத்தை விமரிசிப்பது என்பது சற்றே கடினம்.. மாடு விரட்டுகிற சாட்டையை வைத்துக் கொண்டு சிங்கம் மேய்க்க முயல்வது போன்று..

நமக்கே அஞ்சலியைப் பார்த்ததும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து விடவேண்டுமே என்கிற ஆவல் பீறிடுகையில், பாபி சிம்ஹா அவ்விதம் அவா கொண்டதில் ஆச்சர்யம் இல்லைதான்.. அஞ்சலியின் தேஜஸ் இந்தப் படத்தில் கனஜோர்..

வி.சேதுபதியோடு படுக்கையை பகிர்ந்து கொள்கிற அந்த விடோ கேரக்டர் ரியல்லி மெச்சூர்ட்.. அந்தப் பெண் வெளிப் படுத்துகிற உணர்வுகளாகட்டும் அதற்கான வார்த்தைகளாகட்டும் .. பாலச்சந்தர் வாசம்..

விஜய் சேது தமது சித்தப்பாவோடு பெண்பார்க்க வருகிற போது அவள் நடந்து கொள்கிற விதம், அந்த யதார்த்த வீச்சு . அதுகண்டு மிரள்கிற வி.சேது அவரது சித்தப்பா.. வாவ்.. !
மற்றொரு முறை விஜய் செய்கிற விஜயத்தின் போது, தன்னை ஒரு வேசி போன்று அடையாளப் படுத்தி விட்டு விஜய் அந்த மழையினூடே பைக்கை எடுத்து  செல்கையில், ஜன்னலோரம் நின்று அவள் தேம்பி அழுவது, வெளிப் பொழியும் மழையைக் காட்டிலும் ஈரம் நிரம்பியது.. !

எஸ்.ஜே.சூர்யாவின் ஆல்கஹாலிக் அடிக்ஷனும் அதற்கென அவர் கற்பிக்கிற காரணங்களும் ஒருவி…