Skip to main content

Posts

Showing posts from February, 2011
ரவி என்கிற எனது நண்பர் மூலமாக எனக்கு அறிமுகமான ஒரு earning website .. தினசரி பத்திலிருந்து இருபது விளம்பரங்கள் வரை வரும்.. நாம் பாட்டிற்கு கிளிக் செய்து கொண்டு வந்தால் போதும்.. நம் வீடு தேடி செக் வந்து சேரும்... எனது நண்பன் ரவிக்கு கூட 900 ரூபாய்க்கான செக் வந்துள்ளது.. முயன்று தான் பாருங்களேன்..  கீழ வரும் முகவரிக்கு கிளிக் செய்து அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்ளவும்.. உடனடியாக உங்கள் கணக்கில் ரூ. 99  சேர்ந்து விடும்.. நன்றி.
http://www.PaisaLive.com/register.asp?1834678-5389713

கொடுமை கொடுமை

மிகவும் இயற்கையான லாகிரி வஸ்து  நம் எல்லோரின்  வசமும் உண்டு... அது காமம்!!...                                
பிரயோகிக்கையில் அது மலரினும் மெலிது.,  துஷ்பிரயோகிக்கையில் பாறையினும் கடினம்....
துஷ்ப்ரயோகங்கள் எல்லா வகையறா சம்பவங்களிலும் இன்றைய கால கட்டங்களில் மிகவும் யதார்த்தம் என்பதாக மாறி விட்டது.., அதுவும் உடற்புணர்ச்சி என்கிற ஒரு விஷயம்  மாத்திரம் மிகவும் பிரத்தியேகமாக உலகின் எல்லா மூலை முடுக்குகளில் கூட செய்தித்தாள்களின் அன்றாட செய்திகளாகி விட்டதை நாம் எல்லாரும் அறிவோம்...
மனைவியை கணவன் பலாத்காரம் செய்வதாக செய்தி வந்தாலே அபத்தமாக உணர்வோம்... ஆனால் ஓர் தந்தை தன மகளை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் , அதற்கு ஒத்துழைக்காததால் மகளைக்கொன்று விட்டதாகவும் இன்றைய யாஹூ செய்திகளில் படித்து மிகவும் வேதனையடைந்தேன்.. . அதுவும் அந்தக்குழந்தை 3 வது படித்து வருகிற 8 வயதுப்பிஞ்சு என அறிந்து பெருந்துயர் கொண்டேன்...
அவன் மனிதனா... ? அந்தக்கொடிய செய்தியை நீங்கள் எல்லாரும் படித்துணர பரிந்துரைக்கிறேன்...   அய்யஹோ....
Dad kills 8-yr-old daughter after failed rape attempt
Palwal, Feb 24 (PTI) A man was arrested for all…

மனக்குமைச்ச்சல்

வாழ்க்கை இந்த அளவுக்கு மாயை என்று புரிந்திராத இளம் பிராயம், இன்று நினைத்தாலும் பரமானந்தம்... மாயையாகப்புரிபடுகிற இன்றைய நாட்களை அன்றெல்லாம் கனவில் கூட கண்டதில்லை... அந்த இளம் பிராயத்தின் அதே தீவிர பிரக்ஞை இன்றும் வாழ்வு மீது இருக்கும் பட்சத்தில் ... அதுவே வரம்.. மாயை என்று புரிபடுகிற இந்த சாபம், எதற்குத்தான் நேர்ந்ததோ என்கிற சலிப்பும் கவலையும் ஒருங்கிணைகிறது... பற்றற்ற தன்மைகள் மீது பற்று வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்..
பற்றுடன் இருக்கும் பட்சத்தில் சுயம் சிதிலப்படுவது போன்ற ஓர் உணர்வு...
என்ன தான் மாயை என்கிற நுண்ணுணர்வு புலன்களில் படிந்திருந்தாலும் , என்னையுமறியாமல் எதனையேனும் சாதித்தாக வேண்டும் என்று தூண்டுகிறது இந்த சமுதாயம்... 
ஆனால் கற்பனையில் மாத்திரமே என்னை வயிற்றெறிச்சல் செய்பவர்களை ஓங்கி அறைய முடிகிறது... உண்மை நிலவரமோ, அவர்களின் கீழ் மாடு போல அடி பணிந்து கிடக்க வேண்டிய அவஸ்தை...

பாப்பாவுக்கான முத்தங்கள்

குழந்தைக்கு
நான் வைக்கிற 
முத்தங்களை                
மென்மையாக 
வைக்கச்சொல்கிறாள்
என் மனைவி...
மனைவிக்கு வேண்டுமானால்
அப்படி வைக்க 
முடியுமோ என்னவோ
பாப்பாவுக்கான முத்தங்கள் 
முரட்டுத்தனமானவை,
காட்டாறு போன்றவை...

அவ்வளவு முரட்டு
முத்தங்களிலுமே கூட 
ஓர் பதனம் கடைபிடிக்கப்படும்..
அந்த மெல்லிய கன்னங்களில் 
எனது மீசையோ தாடியோ
ஹிம்சிக்காத வண்ணம் 
ஓர் மென்மை இழையோடும்..

அது எனக்கும் குழந்தைக்கும் 
மாத்திரமே புரிந்த 
ரகசியம்... பார்க்கிற 
எனது மனைவிக்கும்
பிறர்க்கும், குழந்தையை 
தொந்தரவு செய்வதாகத்
தோன்றும்... அந்த
எனது முத்தங்களில் அது
உதிர்க்கிற கன்னக்குழிப் 
புன்னகையும், ஓர் 
உள்ளார்ந்த சிரிப்பும் 
இந்தப் பிரபஞ்சத்தில்
என் இருப்பை மிகவும் 
அர்த்தப்படுத்தும்....