வாழ்க்கை இந்த அளவுக்கு மாயை என்று புரிந்திராத இளம் பிராயம், இன்று நினைத்தாலும் பரமானந்தம்...
மாயையாகப்புரிபடுகிற இன்றைய நாட்களை அன்றெல்லாம் கனவில் கூட கண்டதில்லை...
அந்த இளம் பிராயத்தின் அதே தீவிர பிரக்ஞை இன்றும் வாழ்வு மீது இருக்கும் பட்சத்தில் ... அதுவே வரம்..
மாயை என்று புரிபடுகிற இந்த சாபம், எதற்குத்தான் நேர்ந்ததோ என்கிற சலிப்பும் கவலையும் ஒருங்கிணைகிறது...
பற்றற்ற தன்மைகள் மீது பற்று வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்..
பற்றுடன் இருக்கும் பட்சத்தில் சுயம் சிதிலப்படுவது போன்ற ஓர் உணர்வு...
என்ன தான் மாயை என்கிற நுண்ணுணர்வு புலன்களில் படிந்திருந்தாலும் , என்னையுமறியாமல் எதனையேனும் சாதித்தாக வேண்டும் என்று தூண்டுகிறது இந்த சமுதாயம்...
ஆனால் கற்பனையில் மாத்திரமே என்னை வயிற்றெறிச்சல் செய்பவர்களை ஓங்கி அறைய முடிகிறது... உண்மை நிலவரமோ, அவர்களின் கீழ் மாடு போல அடி பணிந்து கிடக்க வேண்டிய அவஸ்தை...
அச்சச்சோ!
ReplyDeleteஇதெல்லாம் மனதிற்குள் கொண்டு சென்றால் வெற்றியை தள்ளிப்போடும். இன்னும் கொஞ்சநாள் கழித்துப் பார்த்தால், இது தேவலம் என்று தோன்றும்.
ReplyDeleteஅதற்குள் நாம் நான்கு பேர்களின் வயிற்ரறெரிச்சலை கொட்டிக் கொண்டிருப்போம். thats life.