Thursday, February 3, 2011

பாப்பாவுக்கான முத்தங்கள்

குழந்தைக்கு
நான் வைக்கிற 
முத்தங்களை                
மென்மையாக 
வைக்கச்சொல்கிறாள்
என் மனைவி...
மனைவிக்கு வேண்டுமானால்
அப்படி வைக்க 
முடியுமோ என்னவோ
பாப்பாவுக்கான முத்தங்கள் 
முரட்டுத்தனமானவை,
காட்டாறு போன்றவை...

அவ்வளவு முரட்டு
முத்தங்களிலுமே கூட 
ஓர் பதனம் கடைபிடிக்கப்படும்..
அந்த மெல்லிய கன்னங்களில் 
எனது மீசையோ தாடியோ
ஹிம்சிக்காத வண்ணம் 
ஓர் மென்மை இழையோடும்..

அது எனக்கும் குழந்தைக்கும் 
மாத்திரமே புரிந்த 
ரகசியம்... பார்க்கிற 
எனது மனைவிக்கும்
பிறர்க்கும், குழந்தையை 
தொந்தரவு செய்வதாகத்
தோன்றும்... அந்த
எனது முத்தங்களில் அது
உதிர்க்கிற கன்னக்குழிப் 
புன்னகையும், ஓர் 
உள்ளார்ந்த சிரிப்பும் 
இந்தப் பிரபஞ்சத்தில்
என் இருப்பை மிகவும் 
அர்த்தப்படுத்தும்....

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...