மிகவும் இயற்கையான
லாகிரி வஸ்து
நம் எல்லோரின்
வசமும் உண்டு...
அது காமம்!!...
பிரயோகிக்கையில்
அது மலரினும் மெலிது.,
துஷ்பிரயோகிக்கையில்
பாறையினும் கடினம்....
துஷ்ப்ரயோகங்கள் எல்லா வகையறா சம்பவங்களிலும் இன்றைய கால கட்டங்களில் மிகவும் யதார்த்தம் என்பதாக மாறி விட்டது.., அதுவும் உடற்புணர்ச்சி என்கிற ஒரு விஷயம் மாத்திரம் மிகவும் பிரத்தியேகமாக உலகின் எல்லா மூலை முடுக்குகளில் கூட செய்தித்தாள்களின் அன்றாட செய்திகளாகி விட்டதை நாம் எல்லாரும் அறிவோம்...
மனைவியை கணவன் பலாத்காரம் செய்வதாக செய்தி வந்தாலே அபத்தமாக உணர்வோம்... ஆனால் ஓர் தந்தை தன மகளை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் , அதற்கு ஒத்துழைக்காததால் மகளைக்கொன்று விட்டதாகவும் இன்றைய யாஹூ செய்திகளில் படித்து மிகவும் வேதனையடைந்தேன்.. . அதுவும் அந்தக்குழந்தை 3 வது படித்து வருகிற 8 வயதுப்பிஞ்சு என அறிந்து பெருந்துயர் கொண்டேன்...
அவன் மனிதனா... ? அந்தக்கொடிய செய்தியை நீங்கள் எல்லாரும் படித்துணர பரிந்துரைக்கிறேன்... அய்யஹோ....
No comments:
Post a Comment