Skip to main content

Posts

Showing posts from March, 2010

dirty ego..

என் அகந்தை
என்  ரசனை சம்பந்தப்படாதது..
அது  அநியாயமான
வார்த்தைகள்  கொண்டது...
கவிதையாக  பெயர்க்க
யோக்யதை அற்றது..
மிகவும்  அநாகரீகமானது
என்  அகந்தை...
காலில் பீ அப்பியது போல.., 
உண்ணும்  சோற்றில் யாரோ
எச்சில் உமிழ்ந்தது போல..!!

மிகவும்  வீரியமாய் 
புடைத்து வருகிற பலவீனம் அது..
என் இயல்பேயான எளிமைகளையும்
மென்மைகளையும்                     
ஷணத்தில் துவம்சம் செய்து விடுகிற
சூறைக்காற்று..
மேற்கொண்டு என் இயல்புகளை
வெளிக் கொணர்ந்தாலும் 
சந்தேகிக்க வைப்பது ..


இனி முடிவு செய்து விட்டேன்..
என் அகந்தைக்கு முடிவு 
கட்ட வேண்டும் என்று..
ஆனால் இது எத்தனையாவது
தடவை என்பது தான் தெரியவில்லை..

சுந்தரவடிவேலு..
nyaanangalum icchaigalum.. [FOUR-4]

எதை போகஸ் பண்ணினா சர்குலேஷன் ஜாஸ்தி ஆகும்னு நம்ம தமிழ் பத்திரிகைகளுக்கா தெரியாது..? இப்போதைக்கு நம்ம நித்யானந்தா இருக்கற போது வேற பிரச்சினை எல்லாமே ஜுஜுபி தான்.. ஆ ஊ நா பெட்டிக்கடைகளில் நோட்டீசா தொங்கறது நம்ம நித்தி தான்...

சொல்லப்போனா நக்கீரன் ஜூ வி குமுதம் ரிப்போர்டர் எல்லாமே நித்யாவுக்கு ராயல்டி தொகையே தந்தாகணும்... அவரும் தான் அதுக்கு தகுந்தாற்போல வெடுக்குனு உண்மையை ஒத்துக்கறாரானா அதுவும் இல்லை.. பாலியல் ஆராய்ச்சின்னு ஒரு டுபாக்கூரு நியாயம் அளக்கறாரு... அப்புறம் கட்டாயம் நேர்ல வந்து விளக்கம் அளிப்பாராமா... கிளிண்டனுக்காவது ஒரு ஜோடி ஷூ மாத்திரம் போய் விழுந்துச்சு.. இந்த அன்னாருக்கு பிஞ்ச செருப்புகளே போய் போய் விழும்...
என்னை கேட்டா மெடிக்கல் கான்பரன்ஸ் மாதிரி ஒரு ஓரமா அங்கன இருந்து ஒளிஞ்சுக்குனு பேசினா மச்சான் கொஞ்சம் அடி ஒதைல இருந்து தப்பிப்பார்னு தோணுது.. இந்த டெக்னிக் எல்லாம் நித்யாவுக்கு அத்துபடி.. நாம சொல்லியா தரணும்?

ஆமாய்யா .. பண்ணிட்டேன்.. மேற்கொண்டு இப்பிடி ஆகாம பார்த்துக்கறேன்... மன்னிக்க இஷ்டம் இருந்தா மன்னிச்சுடுங்க, இல்லையா .. என்னை ஆன்மீகத்திலிருந்து தள்ளி வச்சிடுங்க.…

அபத்தங்கள் குறித்த பட்டியல்..

கடனை வாங்கும்
போதுள்ள பவ்யம்
மேற்கொண்டு
இருப்பதில்லை
வாங்கியவர்களுக்கு..
கொடுத்தவன்
திரும்பப்பெறுவதற்கு
மேற்கொள்ளப்பட
வேண்டியதாகி விடுகிறது
பவ்யம்...

இருப்பதைப்பிடுங்கும்
ஆற்றல் நம்மை
சுற்றிலும் ஊடுருவிக்
கிடக்கிறது..,
கொடுக்கிற நம்
ஆற்றலைக்கூட
கொச்சைப்படுத்துகிற
பிச்சைக்காரர்கள்...
வழக்கத்துக்கு மாறாக
ரெண்டொரு நாட்கள்
சில்லறை இல்லை
என்று சொல்வதையே
அவநம்பிக்கை பிதுங்கப்
பார்ப்பர்...
சுற்றி இருப்பவர்களினிடத்து
நம்மைக் கேவலப்படுத்துவது
போல செய்வதில் அவர்களுக்கு
ஓர் அலாதி ஆனந்தம்...

இறைஞ்சுதல் என்பதே
ஈனத்தனம்...
கடவுளினிடத்து பக்தன்
இறைஞ்சுவது , கோவிலுக்கு
வெளியே இறைஞ்சுகிற
பிச்சைக்காரனை விட
ஓர் கேவலமான ,
தன்மானம் இழந்த செயல்
என்பேன் நான்...

இருக்கிற நிலைப்பாட்டிற்கு
நன்றி தெரிவிப்பதே
நாகரீகம்...
நல்லது மாத்திரமே
நடக்க வேண்டும் என்று
கெஞ்சுவதும்,
நடக்காமற்போயின்
இறைவனைத்தூற்றுவதும்
மகா அநாகரீகம்..!!

சுந்தரவடிவேலு.. திருப்பூர்/

ஞானங்களும் இச்சைகளும்..{3}

ஏதோ மக்கள் தியானம் யோகா என்று சற்று தங்கள் உடல் நிலைகளையும் மனநிலைகளையும் சரி வர பராமரித்து வந்தனர்... அதற்கெல்லாம் ஆப்பு வைத்தது போல நம்ம நித்யா அந்த மாதிரியான உயர்ந்த விஷயங்களையே சந்தேகப்படும் படி செய்து விட்டார்...
ஞானி பொய்யனாகலம் .. ஞானம் பொய்மை ஆகாது..!

நித்யாவின் இயக்கத்தில் இருந்து வந்த பல லட்ச பக்தர்களுக்கு தாங்கொணா தர்மசங்கடங்களை விளைவித்த பெருமை நித்யாவையே சாரும்..

இனி மற்ற ஞானப்போர்வையில் அக்குரும்புகள் செய்து வந்த ஆசாமிகள் எல்லாம் ஜரூரான ஜர்ரூரில் உஷாராகி, தங்களுக்கு சிசுருஷைகள் செய்து வந்த பணிப்பெண்களை அப்புறப்படுத்தி விட்டு வயோதிகர்களை நியமிக்கிற அவசரத்தில் இறங்கியிருப்பார்கள் என்று அனுமானிக்கிறேன்...

அவர்களெல்லாம் நினைப்பார்கள் : நித்யாவாவது ஒரே ரஞ்சிதாவோடு தான் சிக்கினார்.., நமக்கு எவனாவது காமெரா வச்சிருந்தானுகன்னா ? அடங்கோப்பா சாமி.. தப்பிச்ச்சமடா.. இனி மேற்கொண்டாவது காவி வேட்டி காவி சட்டையை கழட்டாமப்பார்த்துக்கணும்... கக்கூசுக்குள்ள போனாக்கூட ஜெட்டி கழற்றப்ப காமெரா இருக்கானு பார்த்துக்கணும்...
படுபாவிப்பசங்களா இருக்கானுக .. அதவிடக்கொடுமயடா சாமி இந்தக்காலத்து டெக்நால…

ஞானங்களும் இச்சைகளும் {இரண்டு}

நித்யானந்தா பற்றி ஓர் நபர் சொல்கிறார் : நித்யா செஞ்சது என்னவோ பெரிய குற்றம் போலவும், மனித குலமே செய்யக்கூடாத ஒன்றை செய்து விட்டது போலவும், எல்லாரும் லபோ லபோ என்று அடித்துக்கொள்வதை பார்க்கையில் மிகவும் அபத்தமாக இருக்கிறது... நான் ஒன்றும் அவருடைய சீடன் இல்லை, அவரது யோகாக்களையும் பின்பற்றுபவன் இல்லை.. இன்னும் சொல்லப்போனால் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் இப்படி ஒரு ஞானி{?} இருப்பதே எனக்குத்தெரியும்...
ஆனாலும் நம்ம மக்கள் ரொம்பத்தான் இது குறித்து தாளித்து விட்டார்கள்.. நக்கீரனும் ஜூவி யும் செம சேல்ஸ்..

நான் சொல்கிறேன்: அவர் படுக்கட்டும்.. வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஓர் புது காதலியுடன் , நியாயமான காதலுடன்.. அதனை விடுத்து ஓர் நடிகை மீது இந்த ஞானிக்கு என்னய்யா மோகம்?.. பலருடன் தன்னை பகிர்ந்து கொண்ட ஓர் பெண் இவள் என்று தெரிந்த பிறகு கூட அவளோடு என்னய்யா சல்லாபம்?.. எச்சிலை சுவைக்கிற சராசரி நபர் தான் இந்த நித்யானதா என்பது புரிகிறது.. ஓர் ஞானப்போர்வையில் இருந்து கொண்டு இப்படி உள்ளே முடை நாற்றத்துடன் இருந்து வந்தது கண்டனத்திற்குரியது... ஏதோ ஒரு காமெரா வைத்ததால் இந்த சின்ன நாற்றம் தெரிந்திருக்கி…

இளையராஜா ரஹ்மான்...

இளையராஜா இருக்கிற வரை பாடல்களும் இசையும் தெளிவையும் பொலிவையும் கொண்டிருந்தன... இன்றைக்கு எல்லாமே டுபாக்கூராக உள்ளன.. விஸ்வநாதன் காலத்தில் tms . சுசீலா போலவும், இளையராஜா காலத்தில் spb . ஜானகி போலவும் இன்று ஒரு உருப்படியான பாடகர் இல்லை, பாடகி இல்லை.. அல்லது இருந்தும் கூட அவர்கள் போல தெளிவான அடையாளத்தோடு இல்லை... ஓர் மிக பிரம்மாணடமான குழப்பத்தை வெளிப்படுத்தி அதிலே சுலபத்தில் வெற்றியும் பெற்ற இசை அமைப்பாளர் ar . ரஹ்மான் என்றே சொல்வேன்.. slumdogmillionaire எண்பது சதவிகிதம் பேர்கள் இன்னும் பார்ததாகத்தெரியவில்லை.. ஆனால் அதிலே பங்காற்றிய ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிராமி என்று குவிகின்றன... இளையராஜாவின் திறமையில் 25 சதவிகிதம் ரஹ்மானுக்கு இருந்தால் அதிகம்... ஆனால் கண்டிப்பாக சொல்வேன்.. ரஹ்மானின் பத்து சதவிகித அதிர்ஷ்டம் கூட இளையராஜாவுக்கு இல்லை...
சுந்தரவடிவேலு.. திருப்பூர்...

ஞானங்களும் இச்சைகளும்...

நான் காலையில் நடைபயிற்சிக்காக என் ஊரின் ஒரு பள்ளி மைதானத்திற்கு செல்வது வழக்கம்.. பல வகையறாக்களில் அங்கே மனித குழாம்கள் ஒன்று கூடி நான்கைந்து பேர்களாகவும் ஏழு எட்டுப்பேர்களாகவும் சாரை சாரையாக எதையேனும் அரற்றியபடி அளவளாவிக்கொண்டே நடந்து கொண்டிருப்பார்கள்.. நடை பயிற்சியை காட்டிலும் அந்த உரையாடலும் அதன் கார சாரங்களுமே முக்கியம் போல மிகவும் சுவாரஸ்யமாக பேசிய வண்ணம் "ஏதோ" நடப்பார்கள்.. நான் எல்லா குழாம்களோடும் அவ்வபோது சேர்ந்த வண்ணம் நடப்பேன்.. கரண்ட் இஷ்யு என்னவோ அதனை அலசுவதில் கில்லாடிகள் மனிதர்கள்.. ஒரு ஜூனியர் விகடனோ நக்கீரனோ ஏற்படுத்தாத ஒரு வசீகரத்தை அவர்களின் விவாதம் ஏற்படுத்தி விடும்... பேச்சு சுதந்திரங்களும் கருத்து சுதந்திரங்களும் காற்றிலே மிதந்து என் காதுகளுக்கு விருந்தளிக்கும்.. என் கருத்தை ஒத்து எவரேனும் பேசும் பட்சத்தில் நானும் அதற்கு உடன்பாடாக என் பங்களிப்பிருக்குமே தவிர என் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் த்வநிக்கிற நபர்களிடம் நான் அளவு மீறாமல் பார்த்துக்கொள்வேன்..

இந்த ஒரு வார காலமாக சுவாமி நித்யானந்தா புராணம் ஓயாத அலையாக எங்கு பார்த்தாலும் பாய்ந்த வண்ணம் உள்…

விழித்தவாறு கனவுகள்...

என் பிம்பத்தைப்
பிரதிபலிக்க மறுக்கிற
கண்ணாடி...
என் நிழல்களைப்
புறக்கணிக்கிற
வெளிச்சங்கள்...
-நான் சுவாசிக்க
மட்டும் காசு கேட்கிற
வெட்டவெளி...
நான் நீந்துவதை
நிறுத்தச்சொல்கிற
நீர்நிலைகள்...

இப்படி அவஸ்தையான
கனவுகள்...,
துணுக்குற்று விழித்தாலோ
மின்சாரம் தொலைந்து
மின்விசிறி நின்றிருக்கிறது..!
வியர்த்து நனைந்த
அவஸ்தையினூடே
மறுபடி உறங்க பிரயத்தனிக்கிறேன்...!!

அடுத்து வந்த கனவில்
கவர்ச்சி நடிகையை கற்பழிக்க
ஓடுகிறேன்...
ஓட்டத்தினூடே
முன்போல மீண்டும் இந்த முறை
துணுக்குற்று விழித்துவிடக் கூடாதே
என்று மிகவும் பயக்கிறேன்...!!!

சுந்தரவடிவேலு..

விண்ணை தாண்டி வருவாயா? விமரிசன முயற்சி..

என் இளம்ப்ராயங்களில் என்னை நான் ஒரு சினிமா பிரியன் என்று சொல்வதைக்காட்டிலும் சினிமா வெறியன் என்று சொன்னால் தான் பொருந்தும் அளவுக்கு கண்ட படங்களையும் கண்டபடிக்குப்பார்த்து பொழுதுகள் ஒட்டித்தீர்த்திருக்கிறேன்.... ஆனால் இன்றைய சூழ்நிலைகளும் மனநிலைகளும் அவ்வித போக்குகளுக்கு அறவே முழுக்குப்போட வைத்து விட்டன.. அன்றைக்காவது படிக்கவேண்டியது இருந்தும் கூட அதனைத்தவிர்த்து படங்கள் பார்த்து வந்தேன்.. இன்று அந்த வேலையும் இல்லை, ஆனால் ஏனோ படம் பார்க்கிற மனோபாவம் முற்றிலும் பஸ்பமாகிவிட்ட முரண்பாடு எனக்கே ஓர் இனம் புரியாத தன்மையை எனக்குள் ஊடுருவச்செய்திருக்கிறது...

மிக நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்தேன்.. இதற்கு முன்னர் அயன் பார்த்ததாக ஞாபகம்.. அதற்கும் முன்னர் தசாவதாரம் பார்த்தேன் என்று நினைக்கிறேன்...

இன்னதென்று கதையை சொன்னால், சப்பை மேட்டராகத்தான் தெரியும்.. கீழே வீட்டில் இருக்கிற சிம்பு , மேல் வீட்டில் இருக்கிற த்ரிஷாவை லவ் செய்கிறார்.. புறக்கணிப்பது போல ஆரம்பித்து , பிற்பாடு சிம்புவின் காதலை த்ரிஷா ஏற்றுக்கொள்கிறார்.. பெண் வீட்டார் கிறிஸ்டியன்.. சிம்பு ஹிந்து..…

வெளிச்சம் வெறுப்பவன்...

இருள் எனக்குள் விளைவித்த விந்தைகள் வெளிச்சங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஓர் தன்மை... இருள் என்பது சுயம்பு.. அதன் அடர்த்தியையும் அதன் பிரம்மாண்டத்தையும் , எந்த வெளிச்சத்தினாலும் அடக்கவோ நிரப்பவோ சாத்யமில்லை..
எல்லைகளற்று பரவி என்றும் ஓர் நிதர்சனமாய் சத்தியமாய் எங்கெங்கிலும் பரவி வியாபித்துக்கிடக்கிறது இருள்... வெளிச்சங்கள் இயற்கையின் பிரயத்தனங்களிலும் மனிதர்களின் செயற்கை பிரயத்தனங்களிலும் தற்காலிகமாக வந்து போகிற விருந்தாளியே யன்றி .. இருளைப்போன்று என்றென்றும் வீற்றிருப்பதில்லை..

கருமை படர்ந்த இந்த இருட்டு சாம்ராஜ்யத்தில் சூரியன் ஓர் சிறு பொறி... எத்தனை கோடி சூரியன்களையும் சுலபத்தில் கபளீகரம் செய்கிற வல்லன்மை இருட்டொன்றை தவிர வேறெந்த சக்திகளுக்கும் சாத்யமில்லை.

விழிகள் மூடி
நிற்கிறேன்...
இருளை தரிசிக்க.!!
சூரியனை விட
இருட்டுக்கூசுகிறது
எனக்கு..

வெளிச்ச்சத்திருடன்
திறக்கச்சொல்லி
தட்டுகிறான்
என் விழிக்கதவுகளை..
--கதவுகள் திறக்கிறேன்..
அற்ப அற்ப விஷயங்களை
அடையாளம் காண்பித்த
வண்ணம் இருந்தன வெளிச்சங்கள்..!!!


சுந்தரவடிவேலு..

ஒ..நித்தியானந்தா... வாழ்க உமது ஆன்மீகத்தொண்டு...

அனேக சாமியார்களின் ரகசிய அறைகள் இப்படித்தான் இருக்கக்கூடும், ஆனால் அங்கெல்லாம் காமெராக்கள் பொருத்தப்படவில்லை..அவ்வளவே..
போதனைகளை மாத்திரம் அட்சரம் பிசகாமல் அள்ளி வழங்குகிறார்கள்.., பிற்பாடு உள்ளே போதைகளில் திளைக்கிறார்கள்...?

ஏதோ சின்ன வயசு.. நீங்க மட்டும் அவரு ஆசிரமத்துக்கு பொண்டாட்டி புள்ளைங்களோட பிக்னிக் மாதிரி போறீக, வாரீக.. அவரு சும்மா மைக்க புடிச்சுட்டு நாயம் அளந்துட்டு மட்டும் இருந்தா போதுமா? வேற எதையாவது புடிக்கனும்னு அவருக்கும் ஆசை வரக்கூடாதா என்ன!!

இன்னும் ஏதேதோ சொல்லத்தோணுது... ஆனா ஒன்னும் சரிவர பிடிபட மாட்டேன்குது... பார்ப்போம்.. மேற்கொண்டு ஏதாவது இதுபத்தி எழுத முடியுதான்னு ... அதுக்குள்ள வேற மேட்டர் வந்துருச்சுன்னா இதனோட சூடு போயிடும்... சரி சரி, நாம் என்ன பெரிசா சூடா சொல்லிக்கிழிச்சிடுறோம்... அவன் அவன் சூடா செஞ்சே கிழிக்கிற போது...

அந்தரத்தில் சுவடு தேடுபவர்கள்..

சில விஷயங்கள் மனசுள் அனாவசியமான ஓர் படிமானம் அடைந்து விடுகிறது..
என் மோட்டார் பைக்கின் எண்கள் ஓர் நீங்கா படிமானம்.. வங்கியின் அக்கவுண்ட் நம்பர்., எ.டி.எம் நம்பர், பான்கார்ட் , காஸ் கனெக்ஷன் ... இப்படி பட்டியல்கள் நீளும் ஒவ்வொருவருக்கும்...
ஆனபோதிலும் பைக்கின் நம்பர் ஓர் மந்திரம் போல மனசுள் பதிந்து விடுகிறது.. நம் பைக்கின் எண்கள் கொண்ட பிற வாகனங்களை என்றேனும் அசந்தர்ப்பமாக பார்க்க நேர்கையில் ஓர் மௌனமான மனசிலிர்ப்பு.. அந்த அதே எண்கள் கொண்ட வாகனம் ஓட்டுகிற நபரிடம் ஓடிச்சென்று எனது நம்பரும் இதே என்று சொல்லி விட வேண்டும் போன்ற கற்பனை அவசரம்.. ஆனால் அப்படி கேனத்தனமாக செய்ததில்லை...
யந்திரத்தன்மையுடன் நகர்கிற இந்த வாழ்க்கையில் அவ்வப்போது இம்மாதிரியான அல்ப சந்தோஷங்களை அனுபவிக்கிற ரசனைகள் எத்தனை பேரிடம் உள்ளது என்பது ஓர் கேள்விக்குறி தான்... இரவு வானத்தில் நிலவைக்கூட என்றோ ஒரு நாள் அதிசயமாக பார்த்து, என்னவோ நிலாவையே இவுரு தான் கண்டுபிடித்த மாதிரி கவிதையெல்லாம் வேற எய்துவாக.... அமாவாசை அன்றைக்கு எங்கடா நெலாவக் காணோம்னு வேற பொலம்பி சாகடிப்பாக...

காசு பணம் ஒன்றே குறிக்கோளாக உள்ள எவ்வளவோ பேர்கள், தன…