Saturday, March 20, 2010

ஞானங்களும் இச்சைகளும் {இரண்டு}

நித்யானந்தா பற்றி ஓர் நபர் சொல்கிறார் : நித்யா செஞ்சது என்னவோ பெரிய குற்றம் போலவும், மனித குலமே செய்யக்கூடாத ஒன்றை செய்து விட்டது போலவும், எல்லாரும் லபோ லபோ என்று அடித்துக்கொள்வதை பார்க்கையில் மிகவும் அபத்தமாக இருக்கிறது... நான் ஒன்றும் அவருடைய சீடன் இல்லை, அவரது யோகாக்களையும் பின்பற்றுபவன் இல்லை.. இன்னும் சொல்லப்போனால் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் இப்படி ஒரு ஞானி{?} இருப்பதே எனக்குத்தெரியும்...
ஆனாலும் நம்ம மக்கள் ரொம்பத்தான் இது குறித்து தாளித்து விட்டார்கள்.. நக்கீரனும் ஜூவி யும் செம சேல்ஸ்..

நான் சொல்கிறேன்: அவர் படுக்கட்டும்.. வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஓர் புது காதலியுடன் , நியாயமான காதலுடன்.. அதனை விடுத்து ஓர் நடிகை மீது இந்த ஞானிக்கு என்னய்யா மோகம்?.. பலருடன் தன்னை பகிர்ந்து கொண்ட ஓர் பெண் இவள் என்று தெரிந்த பிறகு கூட அவளோடு என்னய்யா சல்லாபம்?.. எச்சிலை சுவைக்கிற சராசரி நபர் தான் இந்த நித்யானதா என்பது புரிகிறது.. ஓர் ஞானப்போர்வையில் இருந்து கொண்டு இப்படி உள்ளே முடை நாற்றத்துடன் இருந்து வந்தது கண்டனத்திற்குரியது... ஏதோ ஒரு காமெரா வைத்ததால் இந்த சின்ன நாற்றம் தெரிந்திருக்கிறது ... காமெரா வைக்காத முந்தைய இரவுகளில், எந்தெந்த நடிகைகளோ... எந்தெந்த வேசிகளோ....

பாலியல் குறித்த ஆராய்ச்சி... காமமும் ஒரு வகையான யோகா என்றெல்லாம் பிதற்றுவது கேனத்தனமாக உள்ளது...

இன்னும் சிலர் சொல்கிறார்கள் : அவருடைய ஞான முறைகளை மாத்திரம் அனுசரிக்கச்சொல்லி... அவருடைய அந்தரங்கம் அவர் சம்பந்தப்பட்டது...
-- இப்படி சொன்னால் உடனே ஓகே என்று ஓடியா விட முடியும் நித்யா பின்னாடி?
என்னவோ ஆளாளுக்கு அபிப்ராயம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...

இனி என்ன சொல்லியும் நித்யா பருப்பு வேகப்போவதில்லை.. அம்புட்டுத்தான்... பணத்தையும் சொத்தையும் வேண்டுமானால் இன்னும் அவர் சம்பாதிக்க முடியும்.. ஆனால் இனி பழைய புகழோ பெயரோ கனவிலும் பலிக்காது...

கொடுமை என்னவென்றால் , இனி செக்ஸ் படம் எடுக்கிற மலையாளத்தான்கள் , நித்யானந்த சாமியாரின் உண்மைக்கதை என்று விளம்பரம் செய்து ஷகிலாவையும் கும்தாஜயும் பாடாய் படுத்துவார்கள்... கடுமையான கண்டனம் தெரிவித்த நாம் எல்லாரும் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு காலைக்காட்சிக்கு queue கட்டி நிற்போம்...
கியூவில் நம்ம நித்தியாவேகூட மப்டியில் நிற்பார் என்றாலும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை..

பார்ப்போம்.. முடிந்தால் போகப்போக இன்னும் ஏதாவது ஓதுவோம்...


சுந்தரவடிவேலு.. திருப்பூர்/

2 comments:

  1. // எச்சிலை சுவைக்கிற சராசரி நபர் தான் இந்த நித்யானதா என்பது புரிகிறது..// ஏனுங்க, ஒரு கேள்வி - நடிகையா இல்லைன்னா, அல்லது ஃப்ரெஷ்ஷா ஒரு பொண்ணு கெடைக்குதுன்னு வச்சுக்குவோம், அப்ப நித்தியானந்தர் மேல உங்களுக்குப் பிரச்சினை இல்லை. அப்படியா? நித்தியானந்தர் படுத்த பிரச்சினையைவிட அவர் ஒரு நடிகையோடு படுத்ததுதான் பெரிய பிரச்சினையா? அனுராதா ரமணன் - சங்கராச்சாரியார் உறவோ அல்லது சாயிபாபா - பல குழந்தைகளோடு கொண்ட உறவோ அல்லது அயர்லாந்தில் கிறிஸ்தவப் பாதிரியார்கள் கோயிலுக்கு வந்த பிள்ளைகளோடு கொண்ட உறவோ உங்களுக்குப் பிரச்சினையா இல்லையா?

    ReplyDelete
  2. நான் சொன்னது , புதுக்காதலியுடனும், ஆத்மார்த்தமான காதலுடனும்.. என்பதே..!!
    அதனையும் நித்யானந்தா வெட்டவெளிச்சமாக்க வேண்டும், ரகசியம் அற்று.. அது போகவும் அக்னி சார், இந்த விஷயத்துல சரியான தீர்ப்பை எந்தக்கொம்பனாலும் இது வரைக்கும் சொல்லவே முடியலை.. ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லி களேபரம் பண்ணிட்டு திரியறாங்க... பலே கில்லாடி தான் அந்த நித்தி

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...