Skip to main content

Posts

Showing posts from May, 2013

நாய்கள்..

எல்லா ஊர்களிலும் 
எல்லா கறிக் கடைகளிலும் 
நாக்குகளைத் தொங்கப் 
போட்டுக் கொண்டு 
நாய்கள் உண்டு... 

பிரத்யேகமான அந்த 
நாய்கள் கொழுத்துக் 
கிடக்கும் சினைப்
பன்றிகள் போல..!!

கறிக்கடைக் காரன் 
எதை சொன்னாலும் 
செய்கிற நன்றியில் 
ஓர் பவ்யமான பாவனை.. 
வாலாட்டம்...!

எலும்புகள் வீசப் படுகையில் 
பகிர்ந்துண்கிற பண்பற்று 
எனக்கே எனக்கென்கிற 
சுயநலப் பண்புகள் 
நாய்களுக்கே உரித்தாவன..!!

உண்ட மதர்ப்பில் 
சாலைகளில் 
சவம் போல கிடக்கும்..

"நாய் படாத பாடு"
"இந்த நாய்ப் பொழப்பு எதுக்கு?"
"மானம் கெட்ட நாய்"
"சனியன் புடிச்ச நாய்"

மனிதர்களுக்கு மனிதர்கள் 
ஏவிக் கொள்கிற 
நாராசாரக் கணைகளாக 
வலம்  வருகின்றன 
நாய்கள் எப்போதும் 
நமக்குள்ளாக..!!

சூது கவ்வும் ........................விமரிசனம்

சூது கவ்வும் ... பார்த்தேன்..
சில ஊசிகள் டாக்டர் குத்துகிற போது  வலி தெரியாது.. பிற்பாடு நிதானமாக வீடு வந்து வலிக்க ஆரம்பிக்கும்..

அந்த மாதிரி, பார்க்கும் போது சூது கவ்வும் என்னவோ ஓர் சுமாரான ஹியூமர் சென்ஸ் கொண்டதாகப் புரிபட்டது.. ஆனால் படம் விட்டு வீடு வந்த பிற்பாடு அந்தக் காட்சிகளை நினைத்து நினைத்து ஓர் லூஸு மாதிரி சிரிப்பதைக் கண்டு அம்மாவும் மனைவியும் என்னை விபரீதமாக கவனித்தது எனக்கே ஓர் பயத்தை ஏற்படுத்தியது.. எங்காவது கீழ்பாக்கம் விஜயம் செய்ய வேண்டுமோ என்று.. ஹிஹிஹி..

சும்மா கன்னாபின்னாவென்று யோசனை செய்து சகட்டுமேனிக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.. ஆனால், அந்த சிருஷ்டியில் ஓர் அதிமேதாவித் தன்மை ஒளிந்திருப்பதை ஓர் முட்டாள் கூட உணர முடியுமென்றே எனக்கு அனுமானிக்க முடிகிறது..

எப்போதுமே சிரிக்காத ஓர் சீரியசோடு விஜய் சேதுபதி திட்டங்கள் போடுவதும் ஆட்களைக் கடத்துவதும், அதன் ரீதியாக பெறப்படுகிற பணத்தை உடனிருப்பவர்களுக்கு ... கடத்தப் படுகிறவர்கள் உட்பட ..... பங்கிட்டு விநியோகிப்பதிலாகட்டும், மற்றவர்களுக்குப் புலப்படாத தனது மாய பிம்பக் காதலியை மடியில் கட்டிக் கொண்டு அவளுக்காக மெனக்கெடு…

அதிமுக .. ஜெயலலிதா.. சில அபிப்ராயங்கள்..

நீண்டநாட்களாக இதனை எழுதி விடவேண்டும் என்கிற அவா பீறிட காத்திருந்தேன்.. ஆனால் இதற்காக நான் சில கட்சி அபிமானிகளின் சங்கடங்களுக்கும் கோபங்களுக்கும் ஆளாக நேருமோ  என்பதால் இந்த எனது கருத்து சுதந்திரத்தை சிறைப் படுத்தி வந்தேன்...

ஆனால் எத்தனை நாட்கள் தான் சிறைப் படுத்தி வைப்பது.. அதுவும் சுதந்திரத்தை..!!

நமது தமிழக முதலமைச்சர் .. அம்மா .. தாய்.. புரட்சித் தலைவி.. என்கிற பல அடைமொழிகளை பெற்று உலா வருகிற ஜெயலலிதா குறித்து தான் சிலவற்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. அதன் நிமித்தமாக ஆட்சேபங்கள் இருக்கும் பட்சத்தில் பின்னூட்டம் இட வேண்டுகிறேன்..

புதிதாக நான் ஒன்றும் சொல்லி விடப் போவதில்லை.. எல்லாரும் அறிந்த ஓர் சாதாரண விஷயத்தை தான் இங்கே உங்களிடத்து focus செய்யவிழைகிறேன்..

அன்றாடம் நாமெல்லாம் அதிமுக வின் சானல்களை கண்டு களித்து வருகிறோம்.. அவைகளில் எல்லாம் ஜெ .வின் துதியைக் கேட்டுக் கேட்டு நம் காதுகள் புளித்துப் போய் விட்டன..

அதுவும் அந்த சட்டமன்றத்தில் அந்த அதிமுக கட்சி அமைச்சர்கள் கூடி அந்த மர டெஸ்க்கை கைகளால் ஓங்கி ஓங்கிக் குத்து விடுவதைப் பார்க்கையில் வருகிற எரிச்சலுக்கு அளவு கோல் ஏதேனும் உண…

இடம் மாறுகையில்..

காற்றில் பறக்கிற 
உனது கூந்தல் 
நீ சூடி இருக்கிற 
பூக்களைக் காட்டிலும் 
வசீகரிக்கிறது...

ஆனால் அதே 
கூந்தல் 
ரச சாதத்தில் 
தென்பட நேர்கையில் 
முன்னர் சாப்பிட்ட 
சாம்பார் சாதம் 
குமட்டுகிறதடி 
பெண்ணே..!!

[வக்கிர......[மனிதர்கள்...

வழக்கமான அன்றாட செய்திகள் ஆகி விட்டன -- ஐந்தாறு வயது நிரம்பிய குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப் படுவதும, ஜன சந்தடி நிறைந்த பேருந்து நிறுத்தங்களில் அழகிய பெண்மணிகளின் முகங்களில் திராவகம் வீசப் படுவதும்..

"ஐயோ" என்று பதறுகிற பிரக்ஞை கூட அற்று சர்வ சாதாரண நிகழ்வுகள் போல படித்துவிட்டு செய்தித் தாள்களை வீசிவிட்டுப் போகிறோம்..

விபரீதங்கள் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நேர்கிற வரைக்கும் அதன் வீரியம் நமக்குப் புரிவதாயில்லை... எங்கோ எவர்க்கோ நேர்ந்து செய்திகளாக வருகையில் அவை மனசை சற்றே ஆக்கிரமித்து"இச்சு"கொட்ட வைத்துவிட்டு நகர்ந்துவிடுகிறது.  

இதென்ன இப்படி வக்கிரம் போட்டு ஆட்டுவிக்கிறது?.. அல்லது இவையெல்லாம் தொன்று தொட்டே அன்றாடம் நடந்து வருகிற விஷயங்களா...?. மீடியாக்கள் பெருத்துவிட்ட இன்றைய காலகட்டங்களில்--இம்மாதிரி சம்பவங்கள் சற்றே பிரம்மாண்டப் படுத்தப் படுகிறதோ??.. 

இதையெல்லாம் வைத்துப் பார்க்கிற போது .... இம்மாதிரி பல சம்பவங்கள் தினசரி நிகழ்கிறதென்றும் ... ஏதோ ரெண்டொன்று மாத்திரம் செய்திகளாக வந்து கொண்டிருப்பதாக அனுமானிக்க வேண்டியுள்ளது..

இந்த சமூகத்தில் நி…

என்னாங்கறீங்க??

எதுவும்எழுதாமல் இருக்கிறோமே என்கிற உறுத்தல் ஓர் சொறி மாதிரி மனசை அரித்துக் கொண்டே இருக்கும், எதுவும் எழுதாத எல்லா தருவாய்களிலும்..
இந்த உறுத்தல் காகிதங்களில் எதையேனும் கிறுக்கிக் கொண்டிருந்த ப்ராயந்தொட்டு..
அனர்த்தமாகவேனும் எதையேனும் பிதற்றியாக வேண்டும்.. அல்லவெனில், கடமையினின்று வழுவிய ஓர் குற்ற உணர்வு..

"இவுரு பெரிய ரைட்டரு.. எழுதாட்டி என்னவோ ராயல்டி மிஸ் ஆயிடப்போற மாதிரி.." --- உங்களது நக்கலான முணகல்களை எனது செவிகள் நன்கு உணர்கின்றன...
..
அந்தந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறவர்கள் மாத்திரமே அந்தக் குறிப்பிட்ட காரியங்களை செவ்வனே செய்யவேண்டும் என்பது எழுதப் படாத விதி போலும்.. சம்பந்தமற்றவர்கள் அவர்கள் அந்தக் காரியங்களை விரும்பினாலும் அதனைத் தவிர்த்து விடவேண்டுமோ?.. அப்படி எல்லாம் என்னால் முடியாது.. ஒரு காரியத்தில் நான் பக்கா அமெச்சூராக இருந்தாலுமே கூட எனக்கது இஷ்டமென்கிற போது ஓர் பிரபல நபர் போல அதனை செய்து முடிப்பதில் ஓர் ஆத்மதிருப்தி... புறமிருந்து காண்பவர்களுக்கு வேண்டுமானால் அது அற்பத்தனமாகப் புரிபடலாம்..

இதே விதமாகத் தான் எல்லா துறைகளுமே...
எந்தத் துறையாயினும் அதன் மீ…