சூது கவ்வும் ... பார்த்தேன்..
சில ஊசிகள் டாக்டர் குத்துகிற போது வலி தெரியாது.. பிற்பாடு நிதானமாக வீடு வந்து வலிக்க ஆரம்பிக்கும்..
அந்த மாதிரி, பார்க்கும் போது சூது கவ்வும் என்னவோ ஓர் சுமாரான ஹியூமர் சென்ஸ் கொண்டதாகப் புரிபட்டது.. ஆனால் படம் விட்டு வீடு வந்த பிற்பாடு அந்தக் காட்சிகளை நினைத்து நினைத்து ஓர் லூஸு மாதிரி சிரிப்பதைக் கண்டு அம்மாவும் மனைவியும் என்னை விபரீதமாக கவனித்தது எனக்கே ஓர் பயத்தை ஏற்படுத்தியது.. எங்காவது கீழ்பாக்கம் விஜயம் செய்ய வேண்டுமோ என்று.. ஹிஹிஹி..
சும்மா கன்னாபின்னாவென்று யோசனை செய்து சகட்டுமேனிக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.. ஆனால், அந்த சிருஷ்டியில் ஓர் அதிமேதாவித் தன்மை ஒளிந்திருப்பதை ஓர் முட்டாள் கூட உணர முடியுமென்றே எனக்கு அனுமானிக்க முடிகிறது..
எப்போதுமே சிரிக்காத ஓர் சீரியசோடு விஜய் சேதுபதி திட்டங்கள் போடுவதும் ஆட்களைக் கடத்துவதும், அதன் ரீதியாக பெறப்படுகிற பணத்தை உடனிருப்பவர்களுக்கு ... கடத்தப் படுகிறவர்கள் உட்பட ..... பங்கிட்டு விநியோகிப்பதிலாகட்டும், மற்றவர்களுக்குப் புலப்படாத தனது மாய பிம்பக் காதலியை மடியில் கட்டிக் கொண்டு அவளுக்காக மெனக்கெடுவதிலாகட்டும்
.. ஒருகட்டத்தில் கடத்தல் வேன் கவிழ்ந்து அந்த மாயபிம்பக் காதலி இறந்ததும் அதற்காக அழுது புலம்புவதிலாகட்டும் ... எக்ஸ்க்ளூஸீவான ஓர் ஹாஸ்யரசமும் சோகரசமும் பரஸ்பரம் நம்மில் பின்னிப் பினைவதை இல்லை என சொல்வதற்கில்லை....
இதையெல்லாம் விட டைரக்டரின் இன்னொரு கற்பனை திறனை இங்கே சுட்டிக் காண்பிக்க வேண்டும்.... அந்தக் கற்பனைக் காதலியாக நடித்துள்ள அந்தப் பெண்ணின் முகபாவனைகளும், காதலனின் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து அவள் ஓர் நக்கல் சிரிப்பை உதிர்ப்பதும், கடத்தலில் அவ்வப்போது சொதப்பி விடுவதைக் கண்டு அவள் மழுப்பலாக அவனை சிலாகிப்பதையும்.. ஓர் தேர்ந்த கவிதை மாதிரி ரசிக்க முடிகிறது.. !!
நேர்மையான அமைச்சராக பவனி வருகிற பாஸ்கர்... அவரது அப்பாவிக் கிரிமினல் மகனாக நடித்திருக்கிற ஒருவர்.. அடேங்கப்பா.. என்ன ஒரு பேஸ் எக்ஸ்ப்ரஷன்... பாஸ்கரின் வெள்ளந்தி மனைவியாக வருபவர்.. மகன் மீதான ஓர் சராசரி பாசத்தைப் பொழிந்து புருஷனிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிற அந்த யதார்த்தம்...
பிரம்மாவாக வருகிற அந்த சைக்கோ போலீஸ் அதிகாரி..
விஜய் சேதுபதியோடு கூட்டு சேருகிற அந்த மூவர்... ரியல்லி ப்ரில்லியன்ட்..
கதையை உல்டாவாக மாற்றி விடுகிற ராதாரவி..
இதற்கெல்லாம் பொருத்தமாக பவனி வருகிற பின்னணி இசை..
படத்தில் பாடல்களுக்கு முக்கியத் துவம் இல்லை.. பாடல்கள் இருக்கிறதா இல்லையா என்றே புரியாத விதத்தில் படம் முழுக்க ஹாசியம் ஆக்கிரமித்து விட்டதென்றே சொல்லவேண்டும்..
நீண்ட நாட்கள் கழித்து ... ஓர் சிறு இடைவெளிக்குப் பிறகு... இன்னொருவாட்டி பார்க்கலாமோ என்று எல்லாரையும் தோன்ற வைக்கும்??..

நல்ல விமர்சனம் சார்...
ReplyDeletethanks d.pal sir..
ReplyDelete