Skip to main content

Posts

Showing posts from June, 2011

பர்த்டே..

ஜூன் 30.. இன்றெனது பிறந்த நாள்... நானும் நடிகை போல வருடம் மறைக்க முயல்கிறேன்.. இந்த மாதத்தின் கடைசி நாள்... ஏதேனும் பிறந்த நாளில் எழுத வேண்டும் என்கிற சோபை... என் பிறந்த நாளினை அடையாளம் வைத்திருக்கிற ஓர் நான்கைந்து பேர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்... சிலர், ஞாபகம் வைத்திருந்தாலுமே கூட, இவனுக்கெல்லாம் வாழ்த்து சொல்லி பெரிய மனுஷன் ஆக்கினா நம்ம கெளரவம்  என்ன ஆவது என்கிற போக்கில்... எது எவ்வாறாயினும் பிறந்த நாள் என்பது ஓர் அற்புத உணர்வை மனசெங்கிலும் வியாபிக்க வைக்கிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.. சிறு பிராயம் தொட்டு இந்த நாற்பத்தி சொச்சம் வயசிலும் பிறந்த நாள் என்பது சிலிர்ப்பை நிகழ்த்தும் வல்லன்மை கொண்டுள்ளது எனில் மிகையன்று... இன்றைய இருபத்திநாலு மணி நேரங்களுமே நான் பிறந்து கொண்டே இருப்பது போன்ற ஓர் பிரம்மை... நான் பிறந்தது எந்த ஷணத்தில் என்கிற ஓர் த்ரில்லிங்...  பிறந்த நாளில் புதுத்துணி அணிந்த காலங்கள் மிக அற்புதம் நிரம்பியவை.. இன்றைய மனநிலையில் ஆயிரம் புதுத்துணிகள் என்னை அலங்கரிக்க தயார் நிலையில் இருந்தாலுமே கூட அன்றைய சிலிர்ப்பு மிஸ்ஸிங்... ஒவ்வொரு வகை உணர்வில் பிறந்த நாள் கழிந…

அவன் இவன்.. விமரிசனம்

விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு திரை அரங்கு சென்று பார்த்த படம், அவன் இவன்.. பாலா படம் .. என்கிற ஒரே நம்பிக்கையில் சென்று பார்த்தால், மிக கேவலமாக இருந்தது படம்.. அருவருப்பான வசனங்கள்... அசூயை கொள்ள வைக்கிற காட்சிகள்... சம்பந்தமே இல்லாமல், காரெக்டர்களை உள்ளே நுழைத்து .. அவர்களை உதைத்து இம்சிக்கிற காட்சிகள்... உதாரணமாக அந்த மாடுகள் சம்பந்தப்பட்ட திரைக்கதை சற்றும் ஒட்டாத ஒன்று... அந்த வில்லனும் மனசில் நிற்காத ஒரு சாதாரண முக அமைப்புக்கொண்ட நபர்..
இந்த பாலா படத்தில் எப்பொழுது பார்த்தாலும் காவல்காரர்கள் மிக பலவீனர்களாகவும் கேணத்தனம் நிரம்பியவர்களாகவும், சண்டித்தனம் செய்பவர்களிடம் பயந்து நடுங்குபவர்களாகவுமே சித்தரிக்கப்படுவது ஆரோகியமற்ற ஒரு போக்கு...அது என்ன புத்தி சாலித்தனம் என்று பாலா நினைத்தாரோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்...
முந்தைய பிதாமகன், நான் கடவுள் படங்கள் எல்லாம் சற்று ரசிக்கவும் பாராட்டவும் உகந்தவைகளாக இருந்தன.. ஆனால், இந்தப்படம் பொதுக்கக்கூசுக்குள் பிரவேசித்து வந்த ஓர் தாங்கொணா அருவருப்பை ஏற்படுத்திவிட்டது... 
உதாரணமாக ஒரு அருவருப்பான வசனத்தை கவனியுங்கள்.. : விஷாலை தேடி பெண் போலீஸ் …

சில நேரங்களில்...

சற்று நேரம் பேரம் பேசப்பட்டாலும் விலை போகின்றன நெல்லிக்காய்கள்...
நீண்ட நேர பேரத்திலும் கட்டுபடியாகாத விலை காரணமாக குப்பை தொட்டிக்கு போகின்றன  அழுகிய ஆப்பிள்கள்..

ஒட்டு மீசை முறுக்கப்படுகிறது...

எந்த நண்பனையும் முழுமையாக திருப்தி கொள்ள முடியவில்லை... -என் நண்பர்களுக்கு  நானும்  இதே போல தான் அதிருப்தியானவனாகவே புரிபடுவேன்...?
-ஒருக்கால்  என் போல மற்ற என் நண்பர்கள் இப்படி ஏடாகூடமாகவெல்லாம் அனுமானிக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது...
எது எவ்வாறாயினும் என் அனுமானங்களை கொட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு...! -இவ்விதம் ஓர் சிந்தனை வந்தான பிற்பாடு இதனை ஓரங்கட்டிவிட்டு மாற்று சிந்தனைகளை கவிதையாக்கினேனே  யானால் இந்த சிந்தனை அனாமதேயமாக என்னுள் அரற்றிக்கொண்டே கிடக்கும்...
தவறோ சரியோ  சிந்தித்தவற்றை  எழுதித்தீர்க்கவில்லை என்றால் குப்பை தொட்டி போல நாறத்துவங்கி விடும் மனசு...
என் ரசனைகள் புரியாமல் தடுமாறுகிற நண்பர்கள், புரிந்து பாராட்டுகிற நண்பர்கள் புரிந்தும் பாராட்ட மனமற்ற நண்பர்கள் புரியாமலே கூட பாராட்டி விடுகிற நண்பர்கள்...
இவ்வளவு வகையறா நண்பர்கள் எனக்கு இருப்பதே என் அதிர்ஷ்டம் என்கிற சந்தோஷம் ஒரு புறம்... அவர்களது தன்மைகளை விமரிசிக்க நேர்கிற சங்கடம் மறுபுறம்...
முதற்கண் எனக்கே  என் ரசனைகள் குறித்த தெளிவான பார்வை இல்லை என்கிற பரம ரகசியத்தை{?} உடைபட செய்கிறேன்...
இந்த லட்சணத்தில் நண்பர்களை எதற்கு வம்புக்கு இழுக்க வேண்டும் என்பது தான…

பலவீனமான சபலங்கள்..

ஆபாசங்களை மிகவும் ரசிக்கிற வியாதி மாதிரி கேவலமான வியாதி வேறொன்று இல்லை...
ஓர் பிரத்தியேகமான பிராயத்தில் தவிர்க்க அசாத்யமாகி விடுகிறது அநேகம் பேர்களுக்கு..
இயல்பாகவே சபலங்களின் பக்கம் சாய்ந்து .. மீள்வதற்கு அதிக நாட்களாகி விடுகிறது.. அல்லது மீள்வதே இயலாத கருமமாகி விடுகிறது..
மலரினும் மெல்லிய காமம் முள்ளாய் கீறியும் நெருப்பாய் சுட்டும் கூட அதன் வசீகரம் வதங்கிப்போவதில்லை..
எந்த வீழ்ச்சியும் அனாவசியமாகி விடுகிறது காமம் மய்யப்படுகையில்... குற்ற உணர்ச்சிகளும் , தர்ம சங்கடங்களும் தன் பங்கிற்கு குறுக்கீடுகள் செய்தாலும் வேசி மார்பில் புதைந்து விடுகிறது எல்லா நல்லவைகளும்...
இந்த ரசாயனம் தன்வசம் என்கையில் ரகசியமாக ரசித்து விட முடிகிறது சுலபத்தில்...  இதே ரசாயனம்  பிறர் வசம் கண்டால் மாத்திரம்  கோபம் கொப்பளிக்கிறது அநியாயமாகப் படுகிறது...
சபலங்கள் அடையாளப்படாத வரைக்கும் மிகவும் அன்யோன்யமானது.. பிறர் அடையாளம் கண்டுவிட்டாலோ அதனை சொல்லி விட்டாலோ வெட்கமும் வேதனையும் சொல்லி மாளாது...