Monday, June 27, 2011

அவன் இவன்.. விமரிசனம்

விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு திரை அரங்கு சென்று பார்த்த படம், அவன் இவன்..
பாலா படம் .. என்கிற ஒரே நம்பிக்கையில் சென்று பார்த்தால், மிக கேவலமாக இருந்தது படம்..
அருவருப்பான வசனங்கள்... அசூயை கொள்ள வைக்கிற காட்சிகள்...
சம்பந்தமே இல்லாமல், காரெக்டர்களை உள்ளே நுழைத்து .. அவர்களை உதைத்து இம்சிக்கிற காட்சிகள்... உதாரணமாக அந்த மாடுகள் சம்பந்தப்பட்ட திரைக்கதை சற்றும் ஒட்டாத ஒன்று...
அந்த வில்லனும் மனசில் நிற்காத ஒரு சாதாரண முக அமைப்புக்கொண்ட நபர்..

இந்த பாலா படத்தில் எப்பொழுது பார்த்தாலும் காவல்காரர்கள் மிக பலவீனர்களாகவும் கேணத்தனம் நிரம்பியவர்களாகவும், சண்டித்தனம் செய்பவர்களிடம் பயந்து நடுங்குபவர்களாகவுமே சித்தரிக்கப்படுவது ஆரோகியமற்ற ஒரு போக்கு...அது என்ன புத்தி சாலித்தனம் என்று பாலா நினைத்தாரோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்...

முந்தைய பிதாமகன், நான் கடவுள் படங்கள் எல்லாம் சற்று ரசிக்கவும் பாராட்டவும் உகந்தவைகளாக இருந்தன.. ஆனால், இந்தப்படம் பொதுக்கக்கூசுக்குள் பிரவேசித்து வந்த ஓர் தாங்கொணா அருவருப்பை ஏற்படுத்திவிட்டது... 

உதாரணமாக ஒரு அருவருப்பான வசனத்தை கவனியுங்கள்.. :
விஷாலை தேடி பெண் போலீஸ் வருகிறது..
தன் வாக்கி தாக்கி தொலைந்து விட்டதாகவும், அதனை விஷால் தான் சுட்டு விட்டதாகவும் சந்தேகித்து வந்து கேட்கிறார் அந்த பெண் அதிகாரி..

விஷாலின் அம்மா அம்பிகா விஷாலை அழைக்கிறாள்..
டே வாடா இங்கே.. உனக்கு எப்ப பார்த்தாலும் திங்க, பேல .. திங்க . பேல ... இதே தான் வேலையா? என்று கேட்கிறாள்..

கழுவீட்டு வாடா. அப்படியே வராதே..---- அம்பிகா..
கழுவாம வரதுக்கு நான் என்ன உன் புருஷனா?---- விஷால்..
பிற்பாடு விஷால் சொல்கிறார்.. :
அம்மா. மாவு மாவா போகுதுமா..

அதனை கேட்ட அம்பிகா சொல்கிறார்:
போனா போகுது உட்றா. அதை வச்சு போலிசுக்கு தோசையா சுட்டு தர முடியும்?

--இதனை ஹாசியம் என்று நினைத்து அம்பிகா சிரிக்கிறார்.. பார்க்கிற ரசிகர்கள் அப்படி ஒன்றும் சிரித்ததாக தெரியவில்லை..
இப்படி ஒரு கேவலமான ஹாசியத்தை எப்படி பாலாவால் சிந்திக்க முடிந்தது.. இதனை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது..??

பெற்ற தாயிடம் மகன் கேட்கிறான் .. 
எம்மா நீ இந்த பிரா எல்லாம் போட்டுக்கறதே இல்லையா?
அம்மா சொல்கிறாள்: 
இந்த வயசுல அதுக்குத்தான் இனி கொறச்சல்?

இவைகளில் எல்லாம் என்ன ஹாசியம் நாகரீகம் இருக்கிறது?.. காறித்தான் துப்பத்தோன்றுகிறது... 

இதற்கெல்லாம் சப்பை கட்டு கட்டி குமுதமும் விகடனும் விமரிசித்து மதிப்பெண்கள் வேறு கொடுக்கிறது..

இதே அநியாயங்களையும் அனாகரீகங்களையும் மையப்படுத்தி, குப்பைதொட்டி , சுடுகாடு, .. என்று பாலா தொடர்வார் என்றால் இயல்பாகவே அவர் எல்லாராலும் தூக்கி எறியப்படுவார்..

எதார்த்தம் என்கிற போர்வையில் இப்படி அசிங்கங்களையும் ஆபாசங்களையும் வன்முறைகளையும் வெளிச்ச்சமாக்கியே காண்பித்து கொண்டு இருப்பாரே யானால் ... பாலா இயல்பாகவே காணாமல்  போய் விடுவார்... 

இப்படி ஒரு அண்ணன் தம்பி.. இவர்களை காதலிப்பதோ அழகழகான கதாநாயகிகள்... கக்கூஸ் கழுவுவது போன்ற கதாநாயகர்களை சித்தரித்து விட்டு அவர்களுக்கு கல்லூரி செல்கிற அழகுப் பெண்களை காதலிகளாக நியமித்திருப்பது .. எதார்த்தமில்லை, அருவருப்பு...

மனசில் பதியாத டப்பா பாடல்கள், பின்னணி இசை...
இளையராஜாவின் வாரிசாகவே தோன்றவில்லை யுவன் ஷங்கர்..
புலிக்கு பிறந்த பூனை போல இருக்கிறது இசையும் பாடல்களும்..

வீட்டிற்கு வந்து குளித்தே ஆக வேண்டும் போல ஓர் நாற்ற உணர்வு மனசெங்கிலும்...  

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...