Skip to main content

Posts

Showing posts from July, 2012

பேதம் ......

பல தருணங்களில்
அவ்வப்போது என்னைக்
காப்பாற்றிய கடவுள்களின்
பட்டியல் .. மற்றும்
அவ்வப்போது என்
கால்களை வாரிய
கடவுள்களின் பட்டியல்
என எல்லா வகையறா  பட்டியல்களும்
மனப்பாடம் எனக்கு
எல்.கே.ஜி. ரைம்ஸ் போல..!              

காப்பாற்றிய
பட்டியலில் உள்ள
அரசமரப் பிள்ளையார்,
கால்களை வாரிய
பட்டியலிலும்
இருக்கிறார்
தங்கக் கிரீடம்
சூட்டிய ராஜ விநாயகராக..
அதே தெருவில்..!!

சிதறல்கள்

பிளாகில் earnings என்ற ஓர் தளத்தில் தமிழில் பிளாக் எழுதுகிற நபர்களுக்கு ஒவ்வாத ஒன்றாக அறிவித்திருப்பது தமிழையும் தமிழில் எழுதுகிறவர்களையும் கேவலப் படுத்துவது போல உணரத் தோன்றுகிறது...

அதற்கென்று eligible ஆக சில மொழிகள் உள்ளன.. அவை மாத்திரமே விளம்பரங்களை  ஓரத்தில் அனுமதிக்கச் செய்து earnings பண்ண முடியும்.. என்ன கொடும சார் இது?..

இதற்கெல்லாம் போராடுகிற கூட்டம் இல்லையா?.. ஆனால் யாரிடம் இதற்கெல்லாம் கூப்பாடு போடுவது?.. எப்படி கொடி  தூக்குவது..? ஹசாரே மாதிரி உண்ணாவிரதம் இருக்க நான் தயார்.. ஆனால் எப்படி எங்கே?

இதற்காக இனி இங்கிலீஷில் எழுதியா கிழிக்க முடியும்??..

ரியாதில்இருந்து புது டெல்லி வந்திருக்கிறார் ஒரு நபர்... எவ்வித விசாவோ , பிற பயண டாக்குமேண்டோ எதுவுமற்று... நம்ம இந்தியன் ஐர்லைன்சில் ..

நல்ல வேலையாக வந்து இறங்கிய பிறகாவது கண்டு பிடித்தார்கள் என்பது இந்திய சாதனை... அதையும் நழுவ விட்டிருந்தால் அண்ணன் ஜாலியாக சுற்றி அடித்து விட்டு ரிட்டன் டிக்கட் கூட எடுத்திருப்பார்...

"இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று விமான உயரதிகாரிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.."hefty penalty போட வ…

என்ன தலைப்பு வைப்பது??

கம்ப்யூட்டர் எனது உபயோகத்திற்கு வந்து நான்காவது வருடம் ஆகிறது என்ற போதிலும், இன்னும் அதன் நுண்ணிய மற்றும் அதன் அடர்த்திகள் எனக்கு இன்னும் ஓர் அந்நியத் தன்மையோடு இருந்து வருவது வியப்பா வியப்பில்லையா என்பதே புரியவில்லை...

வாழ்க்கை நெடுக பல விஷயங்கள் இவ்வாறு தான் நம்மோடு இருந்தவாறு இல்லாமலும் ,இல்லாமல் இருந்தவாறும் ஓர் வினோதமான முரணோடு சமப்பட்டவாறு பயணித்து வந்து கொண்டிருக்கிறது...

உடனிருக்கிற மனைவி கூட இப்படித்தான் புரிந்தும் புரியாமல் எனது வாழ்வில் ஓர் பங்களிப்பாக இருக்கிறாள் என்றாலும்... இந்த கணினி என்கிற உபகரணம் புரிபடாமல் வருகிற ஓர் தவிப்போ ஓர் குழப்பமோ ஓர் கவலையோ கூட மனைவியைப் புரியாமல் வாழ்ந்து வருகிற இந்த வாழ்வு மீது இல்லாதது ஓர் வரப்பிரசாதமா அல்லது சபிக்கப் பட்ட ஓர் தன்மையா என்பதே கேள்வியாக உள்ளது...

இப்படித்தான் சுட்டுவிரலைக் காட்டி எதுவும் புரிபடவில்லை என்கிற குற்றச்சாட்டினை முன்வைக்க மாத்திரம் நாம் எல்லாரும் எதிலும் அவசரப்பட்டு விடுகிறோமே யன்றி .. நாம் நமக்கு எந்த அளவுக்குப் புரிபட்டிருக்கிறோம்  என்கிற ஓர் மிகப் பெரிய கேள்வியினைக் கேட்க நமக்கெல்லாம் தோன்றுவதேயில்லை என்பது பெர…

பில்லா சகுனி கூட்டங்கள்..

இப்பெல்லாம் டுபாக்கூறுப் படங்களுக்கெல்லாம் கூட செமத்தியா ரசிகர்கள் பில்ட் அப் கொடுத்து அலப்பறை செஞ்சர்றாங்க...

உதாரணத்துக்கு சமீபத்துல ரிலீஸ் ஆன சகுனியும் சரி, பில்லா ரெண்டும் சரி.. என்ன பண்ணாலும் பருப்பே வேகாத படங்கள் போலும்.. ஆனா அந்த நடிகர்களோட ரசிகர்கள் செஞ்ச பாலாபிஷேகத்தயும் படாடோபத்தையும் பார்த்தா என்னவோ அந்தப் படம் சில்வர் ஜூ பிலியும் கோல்டன் ஜூபிலியும்  கொண்டாடுன மாதிரி சும்மா அந்தத் தூக்கு தூக்கறாங்க..

சினிமா காரங்க ஒருபக்கம் இந்த அப்பாவிப் பொதுசனங்களை ஏமாத்திக்கிட்டு இருக்காங்கன்னு பார்த்தா ரசிகர்கள் ஏமாத்துறது அதுக்கு மேல இருக்கு..
கொழந்தைகளோட அடத்தை நம்பி பொம்மை பிசினஸ் செய்யறவன் பொழச்சுக்கறது  போல, இந்தப் பொறுப்பில்லாத ரசிகர்களால, இதுல சுலபமா மயங்கற  பொதுமக்களால, முக்கியமா அவுங்களோட அரைடிக்கட் பசங்க பிள்ளைங்களால  இவனுக கல்லா கலகட்ரதப் பார்த்தா நமக்குப் படா டென்ஷன் ஆகிடுது நைனா...

ரீமேக் பண்ற படங்களைக் கூட ஒழுங்கா பண்ணாம இவனுக இஷ்டத்துக்குப் பண்ணிப்புட்டு அப்புறம் பாக்ஸ் ஆபீஸ்ல ஊத்திக்கிச்சு, சரியா போவலை அப்டி இப்டின்னு எலிப்பொறில மாட்ன  எலி போல மூஞ்சிய வச்சுக்கினு திரிய வ…

படைப்பாளிகள் பரஸ்பரம்....

!
பிரம்மனைத் 
தத்ரூபமாகக் கல்லில் 
சமைத்துக் 
கொணர்ந்தமைக்காக 
அந்த ஸ்தபதி 
மிக உயரிய 
விருதுகளுக்காகப் 
பரிந்துரைக்கப் பட்டார்...


--அவர் , தன்னால் 
பிறவி ஊனமாகச் 
சமைக்கப் பெற்றமைக்காக 
நிச்சயம் 
பிரம்மா 
கசிந்திருக்கக் கூடும்...
கல்லாயிருந்த 
போதிலும்....!!காதல் மயக்கம்...

எனக்கு இர
உன்னைப் பார்க்க 
நேர்கையில் எல்லாம் 
என் கவிதை ஈக்கள் 
மொய்க்கத் .துவங்குகின்றன..


தேன்  கொண்ட பூ நீ 
என்கிற அறிவு 
என் கவிதைகளுக்கு 
எப்போதும்...


விரட்டுவது போன்ற 
பாவனையோடு 
மயங்கி விழுகிறது 
என்னில் உனது முகம்...


நீ விரட்டியடித்தாலும் 
உன்னில் சரணாகதி 
அடைவதை மட்டுமே 
நோக்கமாக நான் 
.வைத்துள்ளேன்...


அப்படியிருக்க 
என்னில் நீ மயங்கி 
விழுகையிலோ 
உன்னை உள்வாங்குவதில் 
என்ன சிரமம் 
இருக்கப் போகிறது???