இப்பெல்லாம் டுபாக்கூறுப் படங்களுக்கெல்லாம் கூட செமத்தியா ரசிகர்கள் பில்ட் அப் கொடுத்து அலப்பறை செஞ்சர்றாங்க...
உதாரணத்துக்கு சமீபத்துல ரிலீஸ் ஆன சகுனியும் சரி, பில்லா ரெண்டும் சரி.. என்ன பண்ணாலும் பருப்பே வேகாத படங்கள் போலும்.. ஆனா அந்த நடிகர்களோட ரசிகர்கள் செஞ்ச பாலாபிஷேகத்தயும் படாடோபத்தையும் பார்த்தா என்னவோ அந்தப் படம் சில்வர் ஜூ பிலியும் கோல்டன் ஜூபிலியும் கொண்டாடுன மாதிரி சும்மா அந்தத் தூக்கு தூக்கறாங்க..
சினிமா காரங்க ஒருபக்கம் இந்த அப்பாவிப் பொதுசனங்களை ஏமாத்திக்கிட்டு இருக்காங்கன்னு பார்த்தா ரசிகர்கள் ஏமாத்துறது அதுக்கு மேல இருக்கு..
கொழந்தைகளோட அடத்தை நம்பி பொம்மை பிசினஸ் செய்யறவன் பொழச்சுக்கறது போல, இந்தப் பொறுப்பில்லாத ரசிகர்களால, இதுல சுலபமா மயங்கற பொதுமக்களால, முக்கியமா அவுங்களோட அரைடிக்கட் பசங்க பிள்ளைங்களால இவனுக கல்லா கலகட்ரதப் பார்த்தா நமக்குப் படா டென்ஷன் ஆகிடுது நைனா...
ரீமேக் பண்ற படங்களைக் கூட ஒழுங்கா பண்ணாம இவனுக இஷ்டத்துக்குப் பண்ணிப்புட்டு அப்புறம் பாக்ஸ் ஆபீஸ்ல ஊத்திக்கிச்சு, சரியா போவலை அப்டி இப்டின்னு எலிப்பொறில மாட்ன எலி போல மூஞ்சிய வச்சுக்கினு திரிய வேண்டியது...
இவனுக பண்ற கூத்தை கூட நம்பாம இவனுக ரசிகர்கள் அளப்பரயில மயங்கி ஓபனிங் ஷோ , பஸ்ட் நாளு பஸ்ட் காட்சின்னு அஞ்சு ரூபா கொடுத்துப் பார்க்க யோகியதை இல்லாத சப்பை மேட்டர் படங்களுக்கெல்லாம் ஐநூறு ஆயிரம்னு கப்பம் கட்டி பெருமூச்சு உடறோம்... அல்லது மூர்சையே ஆயிடறோம்...
ஒருதடவை அடிபட்ட நாயி, அப்புறம் "தப்பிச்சோம், பொழச்ச்சமொடா சாமி... இனி இந்த ஏரியாவுல தல வச்சு படுக்கரதில்லை"ன்னு வீரசபதம் ஒன்னை விவேகமா எடுத்துட்டுப் போனா அவன் மனுஷன்... அப்டி இல்லாம மறுபடி மறுபடி இந்தப் பாலாபிஷேகத்துல வந்து கலந்துக்கிட்டு சிக்கிச் சீரழிஞ்சிக்கிட்டே இருக்கணும்னு தலை எழுத்து போல... ஒவ்வொரு புதுப் பட ரிலீச்ளையும் வந்து தலைய உட்டு மாட்டிக்கினு அப்புறம் "கியோ கியோ" ன்னு கோழிக்குஞ்சு மாதிரி கதற வேண்டியது...
படத்தைப் பார்த்துட்டு ஆசையா ஹோடெல்ல போயி ரெண்டு இட்லி திங்கக் கூட சில்லறைய விடறதில்லை இவனுக... ஆனா நம்ம இளிச்சவா தனத்தை வச்சு இவனுக ஒரு பெரிய காக் டைலே செலிபிரேட் பண்றாங்கறது தான் கொடுமையான உண்மை இங்கே... முடிஞ்சா புரிஞ்சுக்கங்க...

நல்ல அலசல்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...