Skip to main content

Posts

Showing posts from October, 2016

"பளீர் "......................

================================
புணர்தல் என்பது 
உமக்கான பிரம்ம வாய்ப்பு.. 
உன் உயிரணுவும் 
பிரம்மனும் ஒருங்கிழைகிற 
மகோன்னத தருணம்.. ?

தன்வயமிழந்து 
பரஸ்பரம் சிலிர்த்துச் 
சிதறுகிற அந்தப் 
"பளீர்" க்ஷணம் 
பரவச உற்சவம்.. !

பிற்பாடாக.. ... .. 
ஆளாளுக்குப் பிய்ந்து போய் 
ஆசுவாசப் பட்டுக் கிடக்கையில் 
நித்திரையின் இனிய 
கோரப் பிடியில் இருவரும்.. !!

காமத்தின் மாய்மாலத்தில் 
கவிழ்ந்து கிடப்பதென்பது
திரவ போதை வஸ்த்துக்களை 
இரண்டாம் பட்சமாக்கும்
சம்பவமாகும்.. !

ஆபாச சாயம் பூசுகிற 
பத்தாம்பசலி வர்க்கங்களும்... 
ஆவேசக் குரலுயர்த்துகிற 
லேகிய விற்பன்னர்களும் 
காமத்தை விற்கத் தெரிந்த 
வல்லுநர்கள்.. 

வி ப த் து...................

என் ஜாக்கிரதை 
உணர்வுகளின் மீதான 
நம்பிக்கைகள் போன்றதே 
என் அஜாக்கிரதைகளின் 
மீதான அவநம்பிக்கைகளும்..!!

அநேக முறைகள் 
ஜாக்கிரதைகளே ஜெயித்துக் 
கொண்டிருக்கையில்--மிக 
அரிதாக திடீரென்று 
எனக்கு நிகழ்கிற 
விபத்தின் நிமித்தமாய் 
ஜெயித்துப் புன்னகைக்கிற 
எனது அஜாக்கிரதைகள் 
மீதான அவநம்பிக்கைகளை 
அப்புறப் படுத்தியாக வேண்டிய 
அவசியங்கள் அவசரமாகி 
விடுகிறன்றன.. !

பின்னொரு நாளின் 
நம்பிக்கைமிகு 
ஜாக்கிரதைகளோடு 
இனிதே பயணங்கள் 
துவங்குகையிலுமே கூட ... 
--அந்த 
விபரீத அஜாக்கிரதை வந்து 
சற்றே எம்மை 
உறங்க வைத்து 
ஸ்நேகிதமாகி விடுகிறது..!!

மன்னிக்கவும் 

மன முதிர்வு பெறா பிராயங்களின் வக்கிர உணர்வுகளை ரகசியமாக்கி மறைப்பதே இன்றைய மனமுதிர்வின் அடையாமாக இருக்க முடியுமே தவிர - அந்த சிறுபிள்ளைத்தனங்களை யதார்த்தம் என்கிற முகமூடி அணிந்து வெளியிடுதல் எனது இப்போதைய முதிர்ச்சியை அசிங்க அடையாளமாக்கிவிடக் கூடும் என்பதால் எனது அந்த அற்பக் கவிதையை நீக்கி விட்டேன். படித்து விட்டவர்கள் மன்னிக்கவும்!. LikeShow more reactions Comment

அ மி ல ம் ... .... ...

முன்குறிப்பு: இந்தக் கதை எமது அனுபவமன்று.... பற்பல கோணங்களில் வாழ்வினை சிந்திக்கிற வெறி .. எழுதவிழைகிற யாதொருவரின் தார்மீக சுதந்திரமாகி விடுகிறது, திட்டமிடா யதார்த்தமாகவே ..!!


முன்னொரு காலத்தில் ஒருதலைக் காதலில் தத்தளித்தது  "இப்போதைக்கு" என்னவோ பரவாயில்லை என்று தோன்றுவது வினோதமாக இல்லை?.. 
நீயும் கூட எனது அந்த ஒருதலைப் பட்சக்  காதலினை சுலபமாக அடையாளம் கண்டாய், மற்றும் ஒரு சாதாரணத் தோழனாக ஏற்றும் கொண்டாய்.. உமது இல்லம் வருகையில் புன்முறுவலோடு எம்மை வரவேற்றாய்.. உனது தாய்க்கும் தம்பிக்கும் என்னை 'இன்னார்' என்கிற ஓர் தகவலைக்  கூடக்  கொடுத்தாய்.. 

இன்றைய நமது சமுதாயத்தில் அங்கங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுவருகிற  பெண்கள் மீதான வெட்கமற்ற கேவலமான கொலைவெறித் தாக்குதல்களும், பிற்பாடு தாக்கிய அந்தப் பரதேசிகள்  தங்களையே  கொன்று விடுவதுமாக .. 

இந்தக் காலகட்டத்தின் ஒருதலைக் காதலர்கள் எல்லாம் துரதிர்ஷ்ட சாலிகள்.. நிச்சயம் அந்தப் பெண் துணுக்குற நேரும்.. தவிர்த்துவிட நேரும்.. தறுதலைகளின் ஒருதலைக் காதல்களால் தராதரத்தோடு ஒருதலைக் காதல் (?) செய்து வருகிற மாண்பு மிக்க மெல்லியவர்களும் பா…