முன்குறிப்பு: இந்தக் கதை எமது அனுபவமன்று.... பற்பல கோணங்களில் வாழ்வினை சிந்திக்கிற வெறி .. எழுதவிழைகிற யாதொருவரின் தார்மீக சுதந்திரமாகி விடுகிறது, திட்டமிடா யதார்த்தமாகவே ..!!
முன்னொரு காலத்தில் ஒருதலைக் காதலில் தத்தளித்தது "இப்போதைக்கு" என்னவோ பரவாயில்லை என்று தோன்றுவது வினோதமாக இல்லை?..
நீயும் கூட எனது அந்த ஒருதலைப் பட்சக் காதலினை சுலபமாக அடையாளம் கண்டாய், மற்றும் ஒரு சாதாரணத் தோழனாக ஏற்றும் கொண்டாய்.. உமது இல்லம் வருகையில் புன்முறுவலோடு எம்மை வரவேற்றாய்.. உனது தாய்க்கும் தம்பிக்கும் என்னை 'இன்னார்' என்கிற ஓர் தகவலைக் கூடக் கொடுத்தாய்..
இன்றைய நமது சமுதாயத்தில் அங்கங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுவருகிற பெண்கள் மீதான வெட்கமற்ற கேவலமான கொலைவெறித் தாக்குதல்களும், பிற்பாடு தாக்கிய அந்தப் பரதேசிகள் தங்களையே கொன்று விடுவதுமாக ..
இந்தக் காலகட்டத்தின் ஒருதலைக் காதலர்கள் எல்லாம் துரதிர்ஷ்ட சாலிகள்.. நிச்சயம் அந்தப் பெண் துணுக்குற நேரும்.. தவிர்த்துவிட நேரும்.. தறுதலைகளின் ஒருதலைக் காதல்களால் தராதரத்தோடு ஒருதலைக் காதல் (?) செய்து வருகிற மாண்பு மிக்க மெல்லியவர்களும் பாதிக்கப் பட்டு அந்தத் 'தோழன்' என்று என்போன்று ஏற்றுக் கொள்ளப் பட்ட அப்பாவிகளும் கூட ..மேற்கொண்டு சற்றே பார்க்கவாவது, ,பேசவாவது, பழகவாவது என்பவை மொத்தமாகப் பாழாகும் விபத்துக்கள் நடைபெறக் கூடும்..
அந்த முன்னாள் ஒருதலைக் காதலர்களின்-- காதலிகள் [?] எல்லாருமே கூட இன்றைய சூழலை அன்றோடு ஒப்பிடப் பட்டு ஒருவகைத் திகிலில் உறைய நேரும்.. தற்போதய கணவன் குழந்தைகள் என்கிற உறவுகளினிடத்துக் கூட பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கிற அவா ஒன்று புறப்பட்டு .. சபை நாகரீகம் கருதி மௌனிக்க நேரும்.. !
அடர்த்தி மிகு ப்ராயங்கள் கடந்தாயிற்று, பரஸ்பரம் முன்னர் போன்று நாம் பார்த்தும் பேசியும்....!
உம்மைக் குறித்த தொடர் நினைவலைகளில் ததும்பித் ததும்பி நோய்வாய்ப் பட்டுக் கிடந்தது எனது இதயம்..
அது போதாதென்று வேறு நான் சிகரெட் புகையை அதீதம் உள்ளிழுத்து மேற்கொண்டும் அந்த சின்ன இதயத்தை சின்னாபின்னப் படுத்தத் தலைப்பட்டேன்..
இருமலும் செருமலும் ஒருங்கிழைந்து பசி தூக்கம் எவையும் பொருட்டற்று .. பிறவிச் சோம்பேறி போன்று கிடந்தேன்..
காலம் எனக்கும் மனைவி என்றொரு உறவை செருகி வைத்தது..
அவளது இறந்த காலங்கள் என்னிடம் மறைக்கப் பட்டதை நான் பெரிது படுத்தவில்லை.. ஆனால் என்னால் அவ்விதம் யதார்த்தம் அற்று இறுக்கமாக இருக்கப் பிடிபடவில்லை.. ஆதலால் எனது தாடி வளர்த்த கதையை விவரிக்க முனைந்தேன்..
நிகழ் சூழலில் உன் மீதாக ஒரு வகையறியா ரௌத்திரம் என்னில் வியாபித்திருப்பது கண்டு ஆச்சர்யமுற்றேன்.. முகத்தில் அமிலம் அடிக்கிற அளவுக்கு அது இல்லை என்ற போதிலும் ஓங்கி கன்னங்களில் ரெண்டு அறைகள் விடலாமே என்கிற அளவுக்கு..!!
இதனை நானெனது மனைவியிடத்து தெரிவித்த போது அவளும் அதனை ஆமோதித்தது என் அபிப்ராயத்தினை இன்னும் நேர்த்தியாக்கிற்று..
எனது நியாயமான காதலை எனது மனைவி நன்கு புரிந்து கொண்டதாகவே உணர்கிறேன் அவளது ஆமோதிப்பை..
உம்மைக் குறித்த என்னுடைய இந்த திடீர் வன்மம் .... முகத்தில் வீசி எறிய நினைக்கிற அமிலத்துக்குக் கொஞ்சமும் குறைவற்றதாகவே எனக்குத் தோன்றுவதேனோ?
'ஆனால் அப்படி எல்லாம் உன்னை அறைந்து விடக் கூடாது '
என்கிற விஷயம் சேர்ந்து கொள்கிறது இந்நாட்களின் எமது அன்றாடப் பிரார்த்தனைகளில்.. !!

No comments:
Post a Comment