Friday, April 19, 2013

மணம் வீசும் முட்கள்..

முள் தைக்கும்
என்கிற அவஸ்தைகளைத்
தாண்டி -
கவர்ந்திழுத்துப் பறிக்கச்
செய்கிற ரோஜாக்கள் போல...

நான் ஆசை ஆசையாகக்
கொஞ்ச முனைகையிலெல்லாம்
என்னைப் புறக்கணிக்கிற
எனது மகளை 
விடாப்பிடியாக 
கொஞ்சிவிடுகிற நாசுக்கை 
எப்படியோ நான் 
கற்றுக் கொண்டேன்.. 

அவளது புறக்கணிப்பைக் 
கூட முள்ளென்று 
அடையாளப் படுத்துவதில் 
எனக்கு 
உடன்பாடில்லை... 
அவள் அந்தப் பிஞ்சுக் 
கைகளைக் கொண்டு 
எனது முகத்தைத் 
தள்ளிவிட்டு --
ஆசை ஆசையாய்  
நான் வைக்க விழைகிற 
முத்தங்களைத் 
தவிர்ப்பது  
முள்ளெனக் குத்துகிற 
எனது தாடி
கூசும் என்பதாலேயே 
அன்றி 
என் முத்தங்கள் 
அவளுக்கு மிக 
மிகத் தேவை எப்போதுமே..!

வேண்டுமானால் 
ஓர் அடையாளத்துக்காக 
மட்டுமே மறுபடி சொல்கிறேன்.. 
அவளது புறக்கணிப்பு 
முட்களைத் தாண்டி 
அந்த மெல்லிய 
கன்னங்களுக்கான 
எனது முத்தக் கொஞ்சல்கள் 
நிகழும்..
என் மகளுக்கு 
எனது முத்த ரோஜாக்கள் 
நிறையத் தேவை என்பதால்
அவளும் எனது தாடி முட்கள் 
குத்துவதை ஆரம்பத்தில் 
புறக்கணித்து விட்டு 
பிற்பாடாக ஏற்றுக் 
கொள்கிறாள்..!!Wednesday, April 3, 2013

மொபெட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

இந்த எனது கட்டுரை மொபெட் வைத்திருக்கிற நபர்களுக்கு உபயோகமாகும் எனக் கருதுகிறேன்.. 
அநேகமாக எல்லா பெட்ரோல் பங்குகளிலும் , பெட்ரோலோடு அவர்கள் கலக்கிற அந்த ஆயில் மீது ஓர் அப்பாவி  இளிச்ச வாயனுக்குக் கூட ஒரு அவநம்பிக்கை வரக் கூடும்.. 
ஆனாலும் அதையே தான் டாங்க்கில் நிரப்பி காசைக் கொடுக்கவேண்டி உள்ளது.. 
அதுவும் அவர்கள் நிர்ணயித்திருக்கிற "ஒரு ஆயில்".. அதாவது 20 மில்லி ஆயில் ஆறு ரூபாய் என்பது கர்ணகடூரக் கொடூரம்.. 
ஆயில் மொத்த விலைக் கடைகளில் லூசில் அந்த ஆயிலை லிட்டர் நாற்பது முதல் ஐம்பது ரூபாய் வரை விலை போட்டுக் கொடுக்கிறார்கள்.. அதனை இந்த "பங்க்" காரர்கள் இன்னும் விலையைக் குறைத்து வாங்கி பொதுமக்களின் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.. 
அதாகப் பட்டது அந்த ஆயிலின் 20 மில்லி அடக்க விலை ஒன்றரை ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய் வரையிலும் தான்.. ஆனால் இவர்கள் அதனை நமக்கு ஆறு ரூபாய்க்கு வார்க்கிறார்கள்.. 
அதிலும் இன்னொரு கொடுமை பாருங்கள், ஆறு ரூபாய்க்கு ஒரு ரூபாய் சில்லறை இல்லை என்றால், ஐந்து ரூபாய் தான் இருக்கிறது என்று சொன்னோமேயானால், பெட்ரோலில் ரெண்டொரு பாயிண்ட்டை குறைத்து விடுகிறார்கள்.. 
இவர்கள் ஊற்றுகிற மட்டமான ஆயிலுக்கு விலையும்  அதிகம் கொடுத்து விட்டு  தரமில்லாமல் அதனை வாங்கி, மொபெடின் எஞ்சின் லைபையும் ஸ்பாயில்  செய்கிறோம்..  
இவ்வளவு வியாக்கியானம் பேசுகிற நானே கூட இதே மாதிரி தான் ஏமாந்து கொண்டிருக்கிறேன்.. 

இதற்காக நான் தேர்ந்தெடுத்த தீர்வினை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வது  உங்களுக்கு மிக உதவும் என ஊகிக்கிறேன்.. 
அதாவது ஒரு காலி அரை லிட்டர் ஆயில் கேனை மொபெடில் எப்போதும் செருகி வைத்துக் கொள்ளுங்கள்.. அவ்வப்போது சில பாக்கெட் ஆயில்களை வாங்கி  கத்தரித்து அந்தக் கேனில் ஊற்றி  நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.. 
ஆயிலும் தரமானது என்கிற உத்திரவாதமிருக்கும் .. விலையும் நிச்சயம் 20 மில்லிக்கு  நான்கிலிருந்து நான்கரை ரூபாய் தான் வரக் கூடும்..
இந்த முறையை சமீபத்தில் தான் நானே யோசித்து செய்தேன்..

என்னடா மொபெடுக்கு வெறும் பெட்ரோல் மட்டும் போடுகிறான் என்று பங்க் பயல்களும்  கடுப்பாவார்கள்.. 

சொல்ல மறந்துட்டேன்.. அப்டியே ஒரு 20 மில்லி கேன் கூடவே வைத்துக் கொள்ளுங்கள்.. 
கொஞ்சம் மெனக்கெடுகிற வேலை தான் என்ற போதிலும் செய்து பார்க்க ஆரம்பித்தீர்களேயானால் - சந்தேகமே இல்லாமல் தொடர்வீர்கள்.. 

நன்றி.. 

Monday, April 1, 2013

சுயம் ...

எனது பலவீனங்கள்
மறைக்கப் படுவதை
மிகவும் பலவீனமாக
உணர்கிறேன்...
அதே விதமாக--
எனது பலங்களை
மறைப்பதை
மிக பலமாக உணர்கிறேன்..!

இங்கிதமற்ற அலட்டல்கள்
அழகாகத் தெரிகிற
ப்ராயங்களும் உள்ளன...
ஆனால் -
ஓரிழையில் அவை
கடக்கப் படவேண்டும்..!
அல்லவெனில்,
நம்முடைய சிதிலங்களை 
நாமே அடையாளம்
காணத் தவறியவர்களாவோம் ..!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...