Skip to main content

Posts

Showing posts from October, 2013

தேங்கா பால் ..

சட்னிக்கு
உடைக்கப் பட்ட
தேங்காய்
இள நீர்ப்
பதத்தில்
பருப்பு இளைத்துக்
காணப்பட்டது..

தெருப் பிள்ளையார்க்குப்
போட்ட ஈடு காய்
பருத்த பருப்போடு
இனித்த சுவையில்
மண்ணில் சிதறி
உருண்டோடிற்று...

கடந்து செல்கிற
வாகனங்களால்
கசங்கி நசுங்கி
மண்ணோடு மண்ணாயிற்று.. !

சற்று முன்னர்
கறக்கப் பட்ட
மாட்டின் பால்
பாலபிஷேகமாக
கற்சிலை மீது
குடம் குடமாக ...

பசிக்கு வீறிடுகிற
குழந்தைக்கான பால்
பாக்கெட்டில் அடைந்து
கிடக்கிறது..
அதுவும் மாடு கறந்ததா
பவுடரில் பிறந்ததா??


ஓர் சிறு அபிப்ராயம்...

உயர்ந்த ஓர் தன்மையை சக மனிதர்களிடத்து பிரகடனப் படுத்திய வண்ணமே இருத்தல் மனசுக்கும் உடலுக்கும் மிக ஆரோக்யமான விஷயங்களாகப் புரிபடுகிறது.. 
எல்லாரும் நம்மையும் நமது நடவடிக்கைகளையும் அங்கீகரிக்கிற விதத்தில் நம்முடைய பழக்கங்கள் மிகவும் உன்னதமான ஓர் செறிவை கொண்டிருக்க வேண்டுமாக கண்களுக்குப் புலனாகாத ஓர் அசரீரியிடம் மன்றாடுகிறது அன்றாடம் மெளனமாக நம் மனது.. !!
நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்தும் சுயநலன்களைத் தாண்டி பிறவற்றைக் குறித்த பிற மனிதர்களைக் குறித்த பிரக்ஞைகள் நிரம்பி வழிதல் - நம்மை ஓர் மகத்தான பிறப்பாக இந்த சமூகம் அடையாளம் கொள்வதற்கான வழி... நாம் பிரம்மாதமாக எல்லாருக்கும் புரிபட வேண்டுமென்கிற எவ்வித கொள்கைகளோ லட்சியங்களோ அற்று யதார்த்தமாகவே மென்மையான தன்மைகளோடு விளங்க வேண்டும்.. 
இவ்விதமாகவெல்லாம் வார்த்தைகள் கோர்த்து வெளிப் படுத்தத் தெரியாமல், செயல்ரீதியாகவே மேற்சொன்ன தன்மைகளோடு இயல்பாக இருக்கிற நபர்களை நான் அடையாளம் கண்டு வியந்திருக்கிறேன்..  நானெல்லாம் கூட, இப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்கிற அவாவில் மாத்திரமே உள்ளேனே தவிர, நடைமுறையில் பல குளறுபடிகளோடும் அனாவசிய சூட்சுமங்களோடும் என் கால…

காலச்சிதறல்கள்..

மழைக்காலம் 
தவறிய மழை..  ஆனால் அன்றாடம்  அதற்கான அறிவிப்பை  தூரத்து இடி முழக்கமாக  பிதற்றி  எல்லாரையும் ஓர்  குழப்ப அனுமானத்தில்  தவிக்க விட்டு  நகர்ந்து விடுகின்றன  மழைக்கான மேகங்கள்..  இங்கே தான்  பொழியப் போவது போல  பாவனை காட்டிவிட்டு  எங்கோ போய்  கொட்டி விடுகிறது.. 
நெற்றியில்  கைகளை வெட்டி  புருவந்தூக்கி  வானத்தை அலசுகிற  பெரிசுகள்  'மழை உறுதி' என்று தீர்க்கதரிசனமாகப்  பேசுவது  நக்கலாகி விடுகிறது  பேரன் பேத்திகளிடம்.. 
ஆகவே இனி  சொட்டச்சொட்ட  நனைந்தாலும்  மழை வந்து விட்டதாகக்  கூட சொல்கிற  உத்தேசமில்லை அவர்களுக்கு..!
சித்திரையில்  பனிப் பொழிவையும்  ஆடியில் அடைமழையையும்  ஐப்பசியில் கடும் வெயிலையும்  இப்போதெல்லாம்  எவரும் ஆச்சர்யமாகப்  பேசுவதில்லை.. !!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.. cinema review

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்தேன்.. விகடனில் 51 மார்க் கொடுத்ததைப் பார்த்து.. 
விகடன் ஐம்பது மார்க் கொடுத்து கமெர்ஷியலாகவும் ஹிட் ஆனவை பாலச்சந்தர் படங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன்..  இப்போது ஐம்பது மதிப்பெண்கள் பெறுகிற அனேக படங்கள் விமரிசனம் விகடனில் வெளி வருவதற்கு முன்னரே அரங்கை காலி செய்து விடுகின்றன...  ஓநாயும் கிட்டத் தட்ட அதே நிலைமையில் இருப்பது போல தான் பட்டது.. தியேட்டர் மொத்தமும் முப்பது பேர்கள் இருந்தால் அதிகம்..  நிஜமாகவே படம் அந்த மதிப்பெண் பெறுகிற தகுதியில் தான் உள்ளது..  மிஷ்கினின் இந்த அபாரத் துணிச்சல் போற்றத் தக்கதே.. சொந்தக் கதையோ, பிற மொழித் தழுவலோ எதுவாயினும் தமிழுக்கு இவ்வித insertion தேவை என்றே தோன்றுகிறது.. 
குத்துப் பாடல்களும் அறிவு கெட்ட கானா பாடல்களும் வார்த்தைகள் புரிபடாத கதறல் பாடல்களுமே கோலோச்சுகிற இந்தக் காலகட்டத்திலே எவ்வித அதிர்வேட்டுப் பாடல்களோ ஆடம்பர நளின நடனங்களோ இல்லாதது இதமாக இருந்தது.. 

படம் நெடுக ஓடுவதும் துரத்துவதும் துரத்தப் படுவதுமாகவே நீள்கிறது.. அதனூடே நிகழ்கிற சம்பவங்களும் சங்கடங்களும் இருக்கையின் நுனிக்கே நம் குண்டிகளைக் கொணர்ந்து விடுகின்றன..…

ராஜா ராணி --- சினிமா விமரிசனம்..

ராஜா ராணி .. பார்த்தேன்!
மவுன ராகத்தை இன்னும் கொஞ்சம் ஜிலேபி பவுடர் கேசரி பவுடர் எல்லாம் கலந்து அரைத்திருப்பது டவுசர் பையனுக்கும் புரியும்.. 
இந்தக் கரண்ட் ட்ரெண்டுக்கான எல்லா உல்டா லக்கிடி வேலைகளையும் சளைக்காமல் செவ்வனே செய்திருப்பது பாராட்ட உகந்த செயலா, கண்டனத்திற்கு உட்பட்ட செயலா என்பது குழப்பமெனிலும்--நமக்கென்ன பாஸ்.. டைம் நல்லா பாஸ் ஆச்சு.. அதானே முக்கியம்?..  கண்டனம் தெரிவிப்பது, நஷ்ட ஈடு கேட்பது இதெல்லாம் நம்ம மணிரத்னத்தோட பிசினஸ்.. 
இப்பத்தான் சமீபத்துல கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு நம்ம பாகியராஜ் படா பேஜாராகி அழாத கொறையா சிரிச்சுட்டே பேட்டி எல்லாம் கொடுத்திட்டு இருந்தாரு.. அவுருக்கும் பாவம் இப்ப டைம் பாஸ் ஆறதுக்கு இது கொஞ்சம் சூடா இருந்திச்சு.. 
மணியும் இப்ப அதே மாதிரி பிரீயா தான் இருப்பாருன்னு நினைக்கிறேன்.... அட்லி.. கொஞ்சம் அலேர்டா இருந்துக்கறது உசிதம்..  படம் சும்மா ஹாஸ்ய ரசம் போட்டு வழிந்த வண்ணமே இருப்பது ஓர் தனி மெருகு என்றால்.. நயன்தாராவின் நடிப்பும் அந்த இரண்டாம் நாயகி நஸ்ருவோ நஸ்ரியாவோ .. செம தூள்.. இந்தக் கரண்ட் டைம் யூத் பாய்ஸ் ரொம்பவே சரண்டர் ஆகி .. குவார்டர்லி லீவ…