மழைக்காலம்
தவறிய மழை..
ஆனால் அன்றாடம்
அதற்கான அறிவிப்பை
தூரத்து இடி முழக்கமாக
பிதற்றி
எல்லாரையும் ஓர்
குழப்ப அனுமானத்தில்
தவிக்க விட்டு
நகர்ந்து விடுகின்றன
மழைக்கான மேகங்கள்..
இங்கே தான்
பொழியப் போவது போல
பாவனை காட்டிவிட்டு
எங்கோ போய்
கொட்டி விடுகிறது..
நெற்றியில்
கைகளை வெட்டி
புருவந்தூக்கி
வானத்தை அலசுகிற
பெரிசுகள்
'மழை உறுதி'
என்று தீர்க்கதரிசனமாகப்
பேசுவது
நக்கலாகி விடுகிறது
பேரன் பேத்திகளிடம்..
ஆகவே இனி
சொட்டச்சொட்ட
நனைந்தாலும்
மழை வந்து விட்டதாகக்
கூட சொல்கிற
உத்தேசமில்லை அவர்களுக்கு..!
சித்திரையில்
பனிப் பொழிவையும்
ஆடியில் அடைமழையையும்
ஐப்பசியில் கடும் வெயிலையும்
இப்போதெல்லாம்
எவரும் ஆச்சர்யமாகப்
பேசுவதில்லை.. !!
இங்கு இன்னும் அதிகமாக கொளுத்துகிறது...
ReplyDelete