ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்தேன்.. விகடனில் 51 மார்க் கொடுத்ததைப் பார்த்து..
விகடன் ஐம்பது மார்க் கொடுத்து கமெர்ஷியலாகவும் ஹிட் ஆனவை பாலச்சந்தர் படங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன்..
இப்போது ஐம்பது மதிப்பெண்கள் பெறுகிற அனேக படங்கள் விமரிசனம் விகடனில் வெளி வருவதற்கு முன்னரே அரங்கை காலி செய்து விடுகின்றன...
ஓநாயும் கிட்டத் தட்ட அதே நிலைமையில் இருப்பது போல தான் பட்டது.. தியேட்டர் மொத்தமும் முப்பது பேர்கள் இருந்தால் அதிகம்..
நிஜமாகவே படம் அந்த மதிப்பெண் பெறுகிற தகுதியில் தான் உள்ளது..
மிஷ்கினின் இந்த அபாரத் துணிச்சல் போற்றத் தக்கதே.. சொந்தக் கதையோ, பிற மொழித் தழுவலோ எதுவாயினும் தமிழுக்கு இவ்வித insertion தேவை என்றே தோன்றுகிறது..
குத்துப் பாடல்களும் அறிவு கெட்ட கானா பாடல்களும் வார்த்தைகள் புரிபடாத கதறல் பாடல்களுமே கோலோச்சுகிற இந்தக் காலகட்டத்திலே எவ்வித அதிர்வேட்டுப் பாடல்களோ ஆடம்பர நளின நடனங்களோ இல்லாதது இதமாக இருந்தது..
படம் நெடுக ஓடுவதும் துரத்துவதும் துரத்தப் படுவதுமாகவே நீள்கிறது.. அதனூடே நிகழ்கிற சம்பவங்களும் சங்கடங்களும் இருக்கையின் நுனிக்கே நம் குண்டிகளைக் கொணர்ந்து விடுகின்றன..
இசைஞானியின் அந்த மேற்கத்திய பாணி மெல்லிசை மனதைப் பிசைவதும், கண்களில் கசிவதும் .. வார்த்தைகளுக்குப் பிடிபடா உணர்வுகள் அவை..
அந்த இருட்டும் வீதி விளக்கு வெளிச்சங்களும் மிஷ்கினின் நேசத்துக்குரிய காட்சி அமைப்புகளோ..? உலகத்தில் சூரியன் மற்றும் பகல் என்று எதுவுமே இல்லை என்கிற விதமாக ஓர் குளிர்ந்த சீதோஷ்ணத்தை மையப் படுத்தி நம்மையெல்லாம் குளிர்வித்துத் திணறடிக்கிறார்..
இன்னும் எவ்வளவோ சொல்லியாக வேண்டும் இந்தப் படம் குறித்து.. ஆனால் விமரிசிப்பில் கைதேர்ந்தவர்கள் எழுதிய பல விமரிசனங்களை இந்தப் படம் குறித்து எல்லோரும் படிப்பது அவசியம் என்று கருதுகிறேன்..
என்னுடைய கத்துக் குட்டி விமரிசனம் எவரையும் நிச்சயம் நிறைவடைய செய்யாது என்பதை நான் நன்கறிவேன்.. ஏனெனில், ஆழ்ந்த பல விஷயங்களை என் அவசர மனம் register செய்யத் தவறி இருக்கக் கூடும்.. நீங்களும் அவ்விதமே இல்லாமல் சற்று சுலபத்தில் உள்வாங்குகிற திராணியோடு இருக்கக் கூடும்.. தயை செய்து திரை அரங்கு சென்று பாருங்கள்.. என்ன நல்ல ப்ரிண்ட் ஆனாலும் dvd யில் பார்ப்பதைத் தவிர்ப்பது -அதுவும் குறிப்பாக இந்த மாதிரிப் படங்களையாவது-- நமது மனித நாகரீகத்தை நிச்சயம் மேலும் மேம்படுத்தும்.. நன்றி..
ரசனையான விமர்சனம்...
ReplyDeleteதுன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html
thanks d.pal sir..
ReplyDelete