ராஜா ராணி .. பார்த்தேன்!
மவுன ராகத்தை இன்னும் கொஞ்சம் ஜிலேபி பவுடர் கேசரி பவுடர் எல்லாம் கலந்து அரைத்திருப்பது டவுசர் பையனுக்கும் புரியும்..
இந்தக் கரண்ட் ட்ரெண்டுக்கான எல்லா உல்டா லக்கிடி வேலைகளையும் சளைக்காமல் செவ்வனே செய்திருப்பது பாராட்ட உகந்த செயலா, கண்டனத்திற்கு உட்பட்ட செயலா என்பது குழப்பமெனிலும்--நமக்கென்ன பாஸ்.. டைம் நல்லா பாஸ் ஆச்சு.. அதானே முக்கியம்?..
கண்டனம் தெரிவிப்பது, நஷ்ட ஈடு கேட்பது இதெல்லாம் நம்ம மணிரத்னத்தோட பிசினஸ்..
இப்பத்தான் சமீபத்துல கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு நம்ம பாகியராஜ் படா பேஜாராகி அழாத கொறையா சிரிச்சுட்டே பேட்டி எல்லாம் கொடுத்திட்டு இருந்தாரு.. அவுருக்கும் பாவம் இப்ப டைம் பாஸ் ஆறதுக்கு இது கொஞ்சம் சூடா இருந்திச்சு..
மணியும் இப்ப அதே மாதிரி பிரீயா தான் இருப்பாருன்னு நினைக்கிறேன்.... அட்லி.. கொஞ்சம் அலேர்டா இருந்துக்கறது உசிதம்..
படம் சும்மா ஹாஸ்ய ரசம் போட்டு வழிந்த வண்ணமே இருப்பது ஓர் தனி மெருகு என்றால்.. நயன்தாராவின் நடிப்பும் அந்த இரண்டாம் நாயகி நஸ்ருவோ நஸ்ரியாவோ .. செம தூள்.. இந்தக் கரண்ட் டைம் யூத் பாய்ஸ் ரொம்பவே சரண்டர் ஆகி .. குவார்டர்லி லீவ் முடிஞ்சு ஸ்கூல் ரி-ஓபன் ஆனதுக்கப்புறமும் ஆப்சன்ட் ஆகறதுக்கு வாய்ப்பு ரொம்ப அதிகம்..!!
ஜெய் அந்தக் கீச்சு வாய்சை வைத்துக் கொண்டு அடிக்கிற லூட்டி ரொம்பவே யதார்த்தம்.. ஆ ஊ ன்னா கண்ணுல தண்ணி பீச்ச அழறதும், யாராச்சும் கேட்டா கண்ணுல வேர்த்திருக்குன்னு சொல்றதும் .. ஸோ கியூட்..
ஆர்யாவின் எக்ஸ்ப்ரஷன் மாறாத முந்தைய படங்களின் அதே பாவனை நடிப்பு.. கொஞ்சம் மாத்தி யோசிங்க ஆர்யா... நல்லா லட்டு லட்டா சிட்டுக ஜோடியா கெடச்சா மட்டும் போதாது.. ஸ்டைலை மாத்தலைனா .. அப்புறம் ரசிகர்கள் மாத்திடுவாங்க.. ஹீரோவை.. !
எடிட்டிங் போடோக்ராபி எல்லாமே ரொம்ப மெச்சூர்..
ஜி.வி.பிரகாஷோட இசை கூட மெச்சூர் தான்.. ஆனா பாட்டு தான் மோஸ்ட்லி எல்லாமே அமெச்சூர்.. ப்ளீஸ் பிரகாஷ்.. முந்தைய சென்னப்பட்டிணம் பாடல்கள் மாதிரி ஏன் தெளிவா இல்லை? அந்த அளவு ஏன் ஷைனிங் இல்லை?..
சத்யராஜ் மறுபடி ஒரு ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுட்டாரு போல.. இவ்ளோ பெரிய காரெக்டரை சும்மா அல்வா சாப்பிடறது போல.. அலேக்கா விழுங்கறாரு.. வைஸ் வெர்சா .. சந்தானமும் அதே..!
நல்ல பாமலி என்ட்டர்டைனர் .. வெளியலையே நேந்திரம் சிப்ஸ், பொட்டடோ சிப்ஸ், பிஸ்கட் எல்லாம் பாக் பண்ணிட்டு குடும்ப சகிதமா போனா ரெண்டரை மணி நேரம் சும்மா கும்முன்னு கழியும்.. இன்டர்வல்ல தியேட்டர் ஸ்டால்-ல எதனாச்சும் வாங்கித் தின்னோம்னா .. அப்புறம் மேற்கொண்டு படம் பார்க்கற மூடே அப்செட் ஆகிடும்..
உங்கள் பாணியில் விமர்சனமும் தூள்...
ReplyDeletethk u dear d.pal boss
ReplyDelete