Skip to main content

Posts

Showing posts from July, 2014

மு க ம்

உமது 
பிரயோகத்திலுள்ள
அக்றிணைகளின் 
தகுதியில் பாதி கூட 
எமது உயர்திணை 
பெற்றிராதது 
மாபெரும் துரதிர்ஷ்டமே..!

என் உள்ளுணர்வுகள் 
மழலைமை 
ததும்புபவை எனிலும் 
என் வெளிமுகம் 
அதனைப் பிரதிபலிக்கிற 
வல்லமையை 
இழந்துள்ளமைக்காக 
நான் மிக வருந்துகிறேன் 
மற்றும் எனது 
முகத்தினைக் கோபிக்கிறேன்..!!

அகத்தின் பேரழகைக் 
காண்பிக்கத் தவறுகிற 
எனது முகத்தினை --
மலத்தினை மிதித்துவிட்ட 
இம்சையாக அசூயை 
கொள்ள நேர்கிறது..... !

பிய்த்தெறிந்து விட்டுப் 
புதிதாய்ப் பொருத்திக் கொள்கிற 
சட்டையாய் முகமில்லையே 
என்கிற வெறியும் வேதனையும் 
எனக்கு...!

உன்னால் மட்டும் அதே 
முகத்தை வைத்துக் கொண்டு 
எப்படி எப்பொழுதும் 
அதே அழகில் வீற்றிருப்பது 
சாத்யமாகிறது??

வேறு வேறு நினைவுகளை 
ஒவ்வொரு கணமும் 
மாற்றி செயல்படுகிற 
இதயத்தின் வசதி 
முகத்திற்கு இல்லாமற்போனது 
என்போன்றவர்களின் குறைபாடு... 
இதற்கெங்கே செய்வதாம் 
முறையீடு??

ஒவ்வொரு பிராயத்திலும் 
காலங்கள் செருகுகிற 
பாவனைகளை 
--என்னுடையவை போன்ற 
சில முகங்கள்--
சரிவர உள்வாங்கிக் கொள்ளாமல் 
தாறுமாறாகத் தடம்புரண்டவாறு 
தரிசிப்பவர்களை 
மிரளச் செய்கின்றன..!

அவ்விதம் மிரண்டவர்களில் 
நீயும் ஒருத்தி என்பதே 
என்னில் அடர்ந்து கிடக்கிற…

காதல் கதை.. [?]

முன்னரெல்லாம் உமது முகவரி தெரிந்து உமக்கு நான் கடிதங்கள் இடுவேன்.. நீயும் அதற்கு ரெண்டொரு நாட்களில் பதிலனுப்பி என்னிலொரு தாங்கொணா சுகந்தத்தினை மலரச் செய்வாய். அதனை வர்ணிக்கிற பொருட்டு வார்த்தைகளைத் தேடி ஊமையாயின .விரல்கள். 

பரஸ்பரம் நமது ஸ்நேகிதம் மிக அமைதியான தளமொன்றில் எவ்வித ஆர்ப்பாட்டமோ அலட்டலோ அற்று வெறுமே நிகழ்ந்து கொண்டிருந்தது.. நாம் பகிர்ந்து கொள்ள நேர்ந்த விஷயங்கள் பற்பல.... 
 சில அறிவுப் பூர்வமாக.... , சில உணர்வுப் பூர்வமாக....  சில "எதையேனும் நிரப்பியாக வேண்டுமே" என்கிற அற்பத் தன்மையோடு.. ஆனால், அவை கூட அலாதியாக நம்மால் கையாளப் பட்டதென்றே எனக்குத் தோன்றுகிறது.. 

நம்மைக் காதலர்கள் என்று பற்பலரும் தவறாக அடையாளம் கொண்டது நமக்குள் ஒரு ஹாஸ்யமாக எப்போதும் பகிர்ந்து கொள்ளப் படும்.. 
அந்தக் கற்பனை எனக்குக் கூட வந்து போகும் தான்.. ஆனால், நீ?.. 
உமது தீர்க்கமும் செயலாற்றலும் இன்றளவும் எமக்கு ஆச்சர்ய நிகழ்வுகளே...!!
நாளடைவில் நட்பு காதலாக மாறுகிற யதார்த்தம் உமக்கு உடன்பாடில்லாத சுபாவமாக உம்மில் படிந்துள்ளதை நல்லவேளையாக நான் கண்டு வைத்திருந்தேன்.. அல்லவெனில், அனாவசியத்துக்குப் பிர…

தமிழ் மொழி என்கிற நோயாளி..

"தமிழினி மெல்லச் சாகும்.. வேறு யாராலும் அல்ல.., தமிழர்களாலேயே, அவர்களது அலட்சியத்தினாலேயே.."

சமீபத்தில் கோவை கொடிசியாவில் நடந்த கவிஞர் வைரமுத்துவின் அறுபதாம் ஆண்டு பிறந்த விழா நிகழ்வுகள் நடந்தேறின.... அப்போது அவர் ஆற்றிய உரையில் பிறந்த இந்தக் கருத்து நாமெல்லாம் மிகவும் கவனித்து அதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோமெனில் அது மிகையன்று..

முதற்கண் இந்தக் "கான்வெண்ட் " மோகம் எல்லாரது வசமும் தொலைய வேண்டும்.. குறைந்த பட்சம், குறைய வேண்டும்.. இப்போதைக்கு...! பின்னொரு நாளில் முழுதுமாகத் தொலைந்து.. தமிழ் கற்க பெற்றோர் தமது தங்கக் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்...

வயிறாற  ஒருவேளை சோறுண்ணும் சூழல் கூட கனவாக இருக்கையில், தனது குழந்தையை ஆங்கிலப் பள்ளியில் சேர்ப்பதற்காக அண்டை வீடுகளில் கடனாகப் பெறுகிற அவலத்தினை யாதெனச் சொல்ல??

தமிழில் பேசுவது, படிப்பது, எழுதவது .. என்கிற எல்லா தன்மைகளுமே பெரிய வரவேற்பினைப் பெறாதது மிகப் பெரும் துரதிர்ஷ்டமே.. நமது நாட்டின் பிற மாநிலங்கள் யாவும் அவர்களது தாய்மொழியை இவ்வளவு துஷ்ப்ரயோகம் செய்வதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.…

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி??...

விவசாயி கண்ணீர் 
துடைக்க விழுகிறேன்.... 
குழந்தைகளின் 
சிரிப்பிற்காக 
அழுகிறேன்.. 

அந்தப் பிஞ்சுக் கைகள் 
விடுகிற காகிதக் 
கப்பல்களை 
கடலில் விடுகிறேன்.. 

என்னில் மூழ்கி 
நனைய ஆசை கொள்கிற 
எல்லா குழந்தைகளையுமே 
ஏனோ அம்மாக்கள் 
அடித்திழுத்து 
அழவைக்கிறார்கள்...

வீடு வரமுடியாமல் 
எனக்கென ஒதுங்கி 
நிற்பவர்கள் 
நான் நின்று விட்டேனா 
என்று கைநீட்டிப் பார்க்கிறார்கள்.. 
இன்னும் பெய்கிறேன் என்றால் 
அலுத்துக் கொள்கிறார்கள். 

வீட்டு ஜன்னல்களில் 
கைகளை நீட்டுபவர்கள்.. 
பெய்கிறேன் என்றால் 
குதூகலிக்கிறார்கள்.. 
குழந்தைக்கு வேடிக்கை 
காண்பித்து சோறூட்டுகிறார்கள்.. 

நிம்மதிப் பெருமூச்சு 
விடுகிறான் விவசாயி.. 
பொருமுகிறான் பொரி விற்பவன்.. 
இருமுகிறான் சளி பிடித்தவன்.. 

எத்தனை கால இடைவெளி விட்டுப் 
பெய்தாலும் 
"இந்த நாசமா போன மழை வேற!"
என்று திட்டுவதற்கு சிலர் 
இருக்கத்தான் செய்கிறார்கள்.. 

தீக்கங்கை மேல கொட்ற மாதிரி 
வெயில் அடிக்கிற போது மட்டும் 
"இந்த நாசமாப் போன மழை 
வருதான்னு பாரேன்!" என்று 
அலுத்துக் கொண்டவர்கள் தான் 
அவர்கள்...!!

குடியிருந்த வீடு..

முப்பது முப்பத்தைந்து வருடங்கள் முன்னர், அதாகப் பட்டது எனக்கு எட்டு பத்து வயது இருந்த போது நாங்கள் குடியிருந்த வாடகை வீடு இப்போது வசிக்கிற சொந்த வீடிருக்கிற அடுத்த தெருவில் தான் இருக்கிறது.

நாங்கள் வசித்த அந்த வாடகை வீடிருக்கிற தெரு வழியாக எமது விஜயம் எதன் நிமித்தமோ அன்றாடம் இருக்கும்.. அனிச்சையாகக் கூட அந்த வீட்டை நான் மறந்தது கிடையாது.. ஒரு லேசான பார்வையை மேய விட்டுத் தான் கடப்பது வழக்கம்..

நாங்கள் இருந்த காரணத்தாலோ என்னவோ அந்த வீடு மேற்கொண்டு எவ்விதப் புணரமைப்பும் அற்று அதே கதியில் ஓர் ஞாபகச் சின்னம் போன்று வீற்றிருந்தது..

எமது இளம்பிராயத்தில் அந்த வீட்டினுள் நான் எண்ணிலடங்கா விளையாட்டுக்களை அரங்கேற்றி சுகம் கண்டிருக்கிறேன்.. பக்கத்து வீட்டு வாண்டுகளை அழைத்து வந்து கண்ணாமூச்சி துவங்கி விறகுக் கட்டை வைத்து கிரிக்கட் ஆட்டம் வரைக்கும் பிய்த்தெறிந்திருக்கிறோம் .. எங்களது சேட்டைகள் எங்கனம் எமது வீட்டாரால் பொறுத்துக் கொள்ளப் பட்டது என்பது இன்றளவும் எமக்கு ஆச்சர்யம்.. எனது அம்மா ஆகட்டும் அப்பா ஆகட்டும் "வெளிய போயி வெளயாடுங்கடா வாண்டுகளா" என்று செல்லமாக அதட்டுவார்களே அன்றி அதில்…